Tuesday, 1 October 2013

பாலச்சந்திரன்: ``நெஞ்சினில் எரியும் தீயே எமக்கு வேகம் தருவதும் நீயே!``

 பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 நீ விடுதலைக்காக உயிரள்ளித்தந்த ஒட்டுமொத்த சிறுவர்களின் ஒற்றைக் குறியீடு.


நெஞ்சினில் எரியும் தீயே 
எமக்கு வேகம் தருவதும் நீயே!

என் மொழி தன் பேச்சின் மூச்சிழந்து தவித்தது பாலச்சந்திரா உன் கொடிய இழப்புச் செய்தி கேட்ட போது...

 நீ விடுதலைக்காக உயிரள்ளித்தந்த ஒட்டுமொத்த சிறுவர்களின் ஒற்றைக் குறியீடு.

 பால்வடியும் முகம் பார்த்தும் இரக்கமில்லாத கயவர்களின் கொலைப்பசிக்கு என்னினத்தின் சிறுவர்கள் வரிசையில் நீயும் சென்றாய்.

 தமிழ் தாய் தந்தையர் எல்லோருக்கும் எக்காலத்திலும் நீயே செல்லப்பிள்ளை. 

வீழ்ந்து கிடக்கும் எம் உணர்வுகளுக்கு நீ பிறந்த நாட்கள் புது வீரம் பாய்ச்சும் இது உறுதி. 

எம் தேசத்தின் விருட்சங்கள் யாவும் பட்டுப் போனாலும் அவற்றின் வேர்களில் இருந்து மீண்டும் விடுதலை பயிர் வீறு கொண்டு முளைக்கும்,

 எம் செல்வமே உன் பெயர் சொல்லிவிட்டால்.

Sivavathani Prabaharan

ENB 2009: ஒபாமாவுக்கு விடுத்த எச்சரிக்கை: ``உன்னால் முடியாது தம்பி``!


நாயகரா நீர்வீழ்ச்சியின் வேகத்தில் அசுர பலம் கொண்டு `அமெரிக்காவில் ஒரு கறுப்புச் சூரியன்` உதித்துவிட்டதாகவும்,உலகமெங்கும் சமாதான ஒளி பரவப்போவதாகவும், ஒபாமாவின் தேர்தல் வெற்றிக்கு முரசறைந்து உலகம் முழங்கிக் கொண்டிந்த பேரிடியின் சூழலில், நாம் பிரகடனம் செய்தோம்,

உன்னால் முடியாது தம்பி! 

இன்று அமெரிக்க மத்திய அரசாங்கத்தின் மக்கள் நல சேவைத் திணைக்களங்கள் அனைத்தையும் இழுத்து மூடி, 8 இலட்சம் மத்திய தர அரசாங்க ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை அளித்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியுள்ளது, கறுப்புச் சூரியன் ஒபாமாவின் அமெரிக்க அரசு.

புதிய ஈழப் புரட்சியாளர்கள்.

Face Book இல் வடக்குத் தேர்தல் குறித்த தமிழகப் புலிப் பினாமிகளின் நிலை பற்றிய ஒரு உரையாடல்.

இந்தியா வந்த விக்னேசுவரன் பிரிவினைதான் தீர்வு் என்று சொல்லும் தமிழக அரசியல் கட்சிகளால் தான் தங்களுக்கு பிரச்சனை வருகிறது என்று கூறியிருக்கிறார். இவர்களால் தங்கள் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த எதிர்ப்பு .

Veera Kumar

=========================================================
( Face Book) இல் நண்பர் வீர குமார், மேற்கண்ட மூலக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு முன் வைத்த பதிவின் மீதான ஒரு கருத்துப் பகிர்வு.
===============================================================
Veera Kumar

இலங்கையில் மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த வெற்றி ராஜபக்சேவிற்கு வருத்தத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தி இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம் ஆனால் அவனை விட அதிகமாக வருத்தபடுவது நம்முடைய தமிழ்நாட்டில் உள்ள இன உணர்வாளர்கள் என்று சொல்லிகொள்ளும் அரசியல் கட்சிகள் தான் . காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனிஈழ கோரிக்கையை கைவிட்டு விட்டார்களாம் ஆனால் அவர்கள் 1988 இருந்தே பிரிவினைக்கு ஆதரவாக செயல்பட மாட்டோம் என சத்திய பிரமாணம் செய்தே தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் கடந்த தேர்தலிலேயே தனிநாடு கோரிக்கையை கைவிட்டு விட்டனர் . இப்போது திடிரென அவர்கள் துரோகியாக சித்தரிக்கபட காரணம் இந்தியா வந்த விக்னேசுவரன் பிரிவினைதான் தீர்வு் என்று சொல்லும் தமிழக அரசியல் கட்சிகளால் தான் தங்களுக்கு பிரச்சனை வருகிறது என்று கூறியிருக்கிறார். இவர்களால் தங்கள் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த எதிர்ப்பு .

தேர்தல் வெற்றியின் மூலம் தமிழ் மக்களுக்கு எல்லா நன்மையும் கிடைத்துவிடும் என்று யாரும் நம்பவில்லை இது ஒரு முன் நகர்வு அவ்வளவுதான் . தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் என்ன நன்மை கிடைத்துவிட்டது குடிக்க தண்ணீர் கேட்டதற்காகவே அந்த ஏழை சிங்கள மக்களை சுட்டு கொல்கிறான் ராஜபக்சே . இந்தியாவில் நடக்கும் தேர்தலில் மூலமாக நமக்கு என்ன நன்மை கிடைத்து விட போகிறது . ஆட்சியை பிடித்தவுடன் மரணதண்டனையை ரத்து செய்ய முடியுமா , அப்பாவி மீனவர்களை பாதுகாக்க படைகளை அனுப்ப முடியுமா , பொருளாதார கொள்கைகளை மாற்ற முடியுமா, காவேரி முல்லை பெரியாறு பிரசனைகளில் தமிழக விவசாயிகளின் உரிமையை பெற்று தர முடியுமா . ரெம்பவும் முரண்டு பிடித்தால் மத்திய அரசு ஆட்சியை களைத்து விடும் இருந்தும் அந்த ஆட்சியை கைப்பற்ற தானே இங்கு இத்தனை நாடகங்களும் நடைபெறுகின்றன .

ஈழ படுகொலை நடைபெற்று கொண்டிருக்கும் போது தனது எம் பி பதவியை கூட ராசினாமா செய்ய மறுத்த அரசியல் கட்சிகளும் உச்ச நிதிமன்றமே தீர்ப்பு கூறிய பிறகும் ஜெயலலிதாவிற்கு பயந்து பிரபாகரன் படத்தை பயன்படுத்த பயப்படும் தமிழ் தேசிய வாதிகளும் தமிழ் தேசிய கூட்டணியை கண்டிப்பது வேடிக்கையாக இருக்கிறது .

விடுதலை புலிகளும் பல்வேறு காலகட்டங்களில் தனி ஈழ கோரிக்கையை கைவிட்டு மாகாண சுயாட்சி தன்னாட்சி அதிகாரங்களை வலியுறுத்தி இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர் . திம்பு முதல் ஜெனிவா பேச்சு வார்த்தை வரை தனி ஈழ கோரிக்கை முன்வைக்க படவில்லை . தனி ஈழ கோரிக்கையை கைவிட்டவர்கள் எல்லாம் துரோகிகள் என்றால் அது விடுதலை புலிகளுக்கும் பொருந்தும். இவர்கள் தங்கள் பிழைப்புக்காக விடுதலை புலிகளையும் துரோகிகள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கில்லை .

குறிப்பு ; நார்வே சமாதான ஒப்பந்தத்தின் போது பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாகரனிடம் நிருபமா ஒரு கேள்வி கேட்டார் . தனி ஈழ கோரிக்கையை கைவிட்டால் என்னை மற்ற புலிகள் சுட்டு கொள்ளலாம் என்று கூறினீர்களே இப்போது உங்களை சுட்டு கொள்ளலாமா ? . அதற்கு பிரபாகரன் சிரித்துக்கொண்டே அப்படியும் இருக்கலாம் என்றார் . அங்கு ஒரே சிரிப்பொலி
 ( ஆதாரம் 8 . 45 நிமிடத்தில் பார்க்கவும் ) (http://www.youtube.com/watch?v=F17IvllX2bo)
Like ·  · Share · about an hour ago ·
9 people like this.

கருத்துப் பரிமாறல்: சுபா

Enb Tenn தங்களுடைய ஆதாரக் கருத்து நிலை சரியானது.அதாவது தமிழகத்தில் தேர்தல் பாதையைத் தேர்ந்து கொண்ட கட்சிகள், தமது தேர்தல் பிழைப்புக்காகவும்,தனிப்பட்ட பிழைப்புக்காகவும் ஈழத்தமிழர்களின் ஒடுக்கப்பட்ட நிலையையும், விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் பாவித்து வந்தார்கள், இன்றும் வருகின்றார்கள் அதில் சந்தேகமே இல்லை.விடுதலைப் புலிகளும் இவர்களோடு சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் அடிப்படையில் அல்லாமல்,சந்தர்ப்பவாத செயல் தந்திரத்தைக் கடைப்பிடித்து உறவாடி வந்து அதற்கு முள்ளிவாய்க்காலில் விலை கொடுத்தனர்.
55 minutes ago · Like · 1

Enb Tenn ’’இந்தியா வந்த விக்னேசுவரன் பிரிவினைதான் தீர்வு் என்று சொல்லும் தமிழக அரசியல் கட்சிகளால் தான் தங்களுக்கு பிரச்சனை வருகிறது என்று கூறியிருக்கிறார். இவர்களால் தங்கள் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த எதிர்ப்பு .`` மிகச் சரியான மதிப்பீடு, இதை ஒரு ஈழத்தமிழன் வாயால் உரைக்க வைத்ததுதான் காசி ஆனந்தனின் கண்டனம்! ( காசி ஆனந்தன் தமிழீழ நிலைப்பாடு கொண்டிருப்பதை பாவித்திருக்கின்றார்கள்!)
50 minutes ago · Like · 1

Enb Tenn மேலும் முக்கியமான இரண்டு தகவல்களை தாங்கள் சரி பார்க்க வேண்டும் என்பது நமது தாழ்மையான வேண்டுகோள்: 1) 2002 ஒஸ்லோ பேச்சு வார்த்தையில் அன்ரன் பாலசிங்கம் `அக சுய நிர்ணய உரிமை` என்கிற அலங்கார வார்த்தையில் ஒற்றை ஆட்சி முறையை ஏற்றுக் கொண்ட ஒரு சந்தர்ப்பம் தவிர தமது 30 ஆண்டுகால தீக்குழிப்பில் ஒரு போதும் விடுதலைப்புலிகள் தமிழீழ நிலைப்பாட்டைக் கைவிடவில்லை,இந்தத் தருணத்திலும் கூட`` தத்துவ ஆசிரியர்`` விலக்கப்பட்டு தமிழ்ச் செல்வன் நியமிக்கப்பட்டார்,4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு ஜப்பானில் தமிழீழத்தைக் கைவிட பேரம் பேசினார்கள் `பேச்சுவார்த்தை`` என்ற போர்வையில், அசையவில்லைப் புலிகள்!அவர்கள் மாவீரர்கள் அப்படியே மாண்டார்கள் தங்கள் மண்ணுக்காக!இது மனிதகுலம் என்றும் மதிக்க வேண்டிய ஒரு மாபெரும் வேள்வி!
37 minutes ago · Like · 1

Enb Tenn 2) ``அதற்கு பிரபாகரன் சிரித்துக்கொண்டே அப்படியும் இருக்கலாம் என்றார்`` அப்படியும் இருக்கலாம் : என்று பிரபாகரன் கூறவில்லை,`` அப்படியே இருக்கின்றது`` என்றுதான் கூறினார், அதாவது நான் தமிழீழத்தைக் கைவிடவில்லை என்று கூறினார்.இக்காலத்தில் தான் `ஈழப்பிரச்சனைக்கு தீர்வு`அரபாத் இல்லாத பாலஸ்தீனம் என்று ராமன் போன்றோர் பிரச்சாரம் செய்து வந்தனர்.ஆனந்தபுர விசவாயுத் தாக்குதல் மூலம் செய்து முடித்தனர்
27 minutes ago · Like · 1

Enb Tenn இன்று நீங்கள் `அரபாத் இல்லாத பாலஸ்தீனத்தைக் காண்கிறீர்கள்` அபாஸ் ஒட்டு மொத்தமாக பாலஸ்தீனத்தை அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் விற்று விட்டார்!
24 minutes ago · Like · 1

Enb Tenn `தளபதி பிரபாகரன் இல்லாத தமிழீழத்தைக் காண்கின்றீர்கள்`கூட்டமைப்பு தமிழீழத்தை அமெரிக்காவுக்கும்,ஐ.நா வுக்கும்,சிங்களத்துக்கும் விற்றுவிட்டது, வடக்குத் தேர்தல் இது தவிர வேறெதுவுமில்லை!
20 minutes ago · Like · 1

Enb Tenn இதனால்:``இது ஒரு முன் நகர்வு`` அல்ல, தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் நாம் சந்திக்கும் ஒரு பெரும் பின்னடைவு.
17 minutes ago · Like · 1

Enb Tenn எனினும் என்றும் போல, எங்கும் போல, வரலாற்றுச் சக்கரத்தை பின்னோக்கி உருட்டும் சக்திகள் தற்காலிகமாகவே வெற்றி பெறுகின்றன,அதாவது மக்களின் உடனடித் தேவைகளின் மீது சவாரி செய்து பெறும் ``வெற்றிகளால்`` வரலாற்றின் திசை வழியை தாமதிக்க முயலுகின்றன, இதற்கு மேல் `மகேசனால்` எதுவும் செய்ய முடியாது!
11 minutes ago · Like · 1

Enb Tenn ``இடை வழிச் சமரசங்களை முறியடிப்போம்! ஈழம் காண இறுதிவரை ஊற்றெடுப்போம்`` நன்றி.
9 minutes ago · Like · 1

Enb Tenn புதிய ஈழப் புரட்சியாளர்கள் சார்பில் சுபா.
3 minutes ago · Like
====================================================================
Veera Kumar

 ஓஸ்லோ உடன்படிக்கையில் தமிழீழம் என்ற வார்த்தையே இல்லை, இலங்கையில் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு என்பதே ஒஸ்லோ உடன்படிக்கை இதை நீங்களே ஒப்புகொண்டு விட்டீர்கள் மேலும் ஜெனிவாவில் நடந்த பேச்சு வார்த்தைகளில் தனிநாடு பற்றி எந்த கட்டத்திலும் விடுதலைப் புலிகள் பேசவில்லை மாநில சுயாட்சி பற்றியே பேசினர் .1988ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் மாகாணசபையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்ல முடியாது. அவர்கள் மாகாணசபையை ஏற்றுக்கொண்டுதான் வடக்கு கிழக்கு மாகாணத்தின் இடைக்கால சபைக்கு உறுப்பினர்களையும் அதற்கான தலைவரையும் தெரிவு செய்வதில் ஈடுபட்டனர். மாகாணசபையை அவர்கள் நிராகரித்திருந்தால் மாகாணசபை தேர்தலுக்கு முன்பான இடைக்கால சபை பற்றி அவர்கள் கவனத்தை செலுத்தி இருக்க தேவை இல்லை.
========================================================================

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...