SHARE

Tuesday, April 09, 2013

மாக்கிரட் தர்ச்சர்: பெரிய பிரித்தானிய, நிதிமூலதன நல, ஆங்கிலத் தேசிய வெறி கொம்யூனிச எதிரி, மக்கள் விரோதப் பாசிஸ்ட்!

 
கொம்யூனிசத்தின் கொடூர தீராத எதிரி,

ரேகனோடு கூட்டுச் சேர்ந்து, கோர்ப்பச்சேவை அரவணைத்துக்கொண்டு பெர்லின் சுவரை வீழ்த்திய சூத்திரதாரி;

அந்நிய நிதிமூலதனத்தின் உலகு தழுவிய மேலாதிக்கத்துக்கு,அமெரிக்க ரேகனோடு கூட்டுச்சேர்ந்து வழி திறந்த தலைவி,

உள் நாட்டுத் தொழிற்துறையை பூண்டோடு அழித்த பாதகி,

பிரித்தானிய முதலாளித்துவத் தொழிற்சங்களின் முதுகெலும்பை உடைத்த அரக்கி;

போக்லன்ட் போர் வெறி நாயகி;

அயர்லாந்து தேசத்தை எரித்த தீ; உண்ணா விரதிகளை கொன்றொழித்த தாய்!!

1978 ஜே.ஆர் பாசிச அரசுக்கு, 1983 ஜூலை இனப்படுகொலை நடந்து முடிந்த ஒன்பதே மாதங்களில், 1984 இல் `5 நட்சத்திர ஜனநாயகப்` பட்டமளித்த
ஈழத்தமிழின விரோதி,

தனது வாரிசாக `பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவர் ரொனி பிலேயரை களத்தில் இறக்கிய தீர்க்க தரிசி,

ரேகன், புஸ், ஜே.ஆர், கோர்ப்பசேவ்,வத்திக்கான்/கன்ரபரி கும்பல்களுடன்  அணிசேர்ந்து `இன்றைய (2013) உலக பொருளாதார மேலும் தேசிய நெருக்கடிகளுக்கு வித்திட்ட முத்து!

பெண்ணியம் பேசி மாதர்குலத்தை ஏகாதிபத்தியப் பண்டமாக உலகெங்கும் விலை பேசிய வீராங்கனை!

பிரித்தானிய ஜனநாயகத்தின் அனைத்து `அரசுமுறை அமைப்புக்களையும்` மீறி ஆட்சி நடத்த முயன்ற ``இரும்புப் பெண்மணி``,

ஆம் அப்பட்டமான, அசிங்கமான, அசுத்தமான,வாழ் நாளிலேயே மக்களால் தூக்கியெறியப்பட்ட, அசல் பெரிய பிரித்தானிய, நிதிமூலதன தேசிய வெறிப் பாசிஸ்ட்!

`தர்ச்சரிசம்` என்பது பிரித்தானியப் பாசிசம்.

பின்னால் வந்த அனைத்துக்கட்சிகளுக்கும் அதுதான் வழிகாட்டும் வேதம்!

கென்சவேட்டிப் பாசிசத்தின் கிளைகளே லேபரும், லிபரலும்!

இவரின் மரணம் `தேசிய விடுதலைக்கும் ஜனநாயகத்திற்கும் சோசலிசத்துக்கும்` ஆன உலகு தழுவிய புரட்சிகர இயக்கத்துக்கு,
 
வெறும் இறப்பு மட்டுமே இழப்பல்ல!

புதிய ஈழப்புரட்சியாளர்கள்

China rolls out the red carpet for Keir Starmer

China rolls out the red carpet for Keir Starmer PM holds three hours of ‘warm and constructive’ talks with Xi Jinping in bid © Carl Court/AF...