SHARE

Wednesday, October 14, 2009

சிரித்தபடி செவிமடுத்த திருமாவளவன்.

சிரித்தபடி செவிமடுத்த திருமாவளவன்.
பிரபாவுடன் இராதமையால் தப்பினாராம் திருமாவளவன்

"நல்ல காலம் இவர் (திருமாவளவன்) பிரபாகரனுடன் இருக்கவில்லை. இருந்திருந்தால் இந்நேரம் இவரும் தொலைந் திருப்பார்" என்று நேரடியாகக் கூறியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.நேற்று மாலை கொழும்பில் இந்திய நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்தசமயமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.இச்சந்திப்பின்போது, அதில் பங்குபற்றிய கனி மொழி எம்.பியிடம் அருகிலிருந்த திருமாவளவனைக் காட்டியே ஜனாதிபதி இதனைக் கூறியிருக்கின்றார்."இவர் (திருமாவளவன்) பிரபாகரனின் நெருங்கிய நண்பர். ஆதரவாளர். நல்லநேரம் பிரபாகரனின் கடைசிக் காலத்தில் இவர் தமது நண்பருடன் இருக்கவில்லை. அதனால் அருந்தப்பில்
தப்பிவிட்டார். பிரபாகரனுடன் இருந்திருப்பாரேயானால் இவரும் தொலைந்திருப்பார்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூற, அதை சிரித்தபடி செவிமடுத்துக் கொண்டிருந்தார் திருமாவளவன்.

நன்றி: யாழ் உதயன்

Maduro in court- U.S. kidnapped Me

Maduro, making first court appearance, says U.S. ‘kidnapped’ him As the deposed Venezuelan president and his wife, Cilia Flores, grapple wit...