SHARE

Monday, September 07, 2009

மலையக தோட்டத் தொழிலாளர் ஒத்துழையாமை போராட்டம்

வீரகேசரி இணையம் 9/7/2009 12:08:01 PM -

மலையக தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழையாமை போராட்டம் தொடர்கின்றது. இதன் காரணமாக மலையகத் தேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் அரைக்கப்படாத நிலையில், ஆயிரக்கணக்கான கிலோ தேயிலை கொழுந்துகள் குவிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 500 ரூபா ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரியே இந்த ஒத்துழையாமை போராட்டம் நடைபெற்று வருகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது 290 ரூபா நாளாந்த ஊதியமாக வழங்கப்படுகிறது.
ஊதிய அதிகரிப்பு தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தொழிலாளர்களின் ஊதிய அதிகரிப்பு குறித்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
இன்றையப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. எனினும் பேச்சுவார்த்தைகளில் சுமுக முடிவு ஏற்படும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...