SHARE

Friday, September 30, 2011

விடுதலைப்புலிப் போராளி யுத்தக்கைதிகளின் கதி என்ன?


தமிழீழ விடுதலை யுத்தம் `அக சுயநிர்ணய உரிமை வழி நடந்து` முள்ளிவாய்க்காலில் படுதோல்வி அடைந்தபோது கைதான விடுதலைப்புலிப் போராளி யுத்தக்கைதிகளின் கதி என்ன? 

இலங்கை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ தகவல் வருமாறு

இலங்கையில் புனர்வாழ்வுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 1800 முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் உறவினர்களிடம் கையளிக்கப்படும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தனது அதிகார பூர்வ இல்லத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய ஜனாதிபதி முன்னாள் போராளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள மீள்வாழ்வு உலகுக்கே ஒரு முன் உதாரணமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார்.

இலங்கையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. போர் முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு போரின் இறுதி கட்டத்தில் 11 600 க்கும் சற்று அதிகமான விடுதலைப் புலிகள் தம்மால் பிடிக்கப்பட்டார்கள் அல்லது சரணடைந்தார்கள் என்று அரசு அறிவித்தது.

தடுப்பில் வைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு பயிற்சிகளை அளித்து அவர்களை கட்டம் கட்டமாக அரசு விடுவித்து வந்தது.

வழக்குகளை எதிர்கொள்ளும் 63 பெண்கள் உள்ளிட்ட சுமார் 1400 போராளிகளே தற்போது தடுப்பில் இருப்பதாகவும் அவர்களையும் விரைவாக விடுவிக்க அரசு முயற்சி மேற்கொள்வதாகவும் புனர்வாழ்வு மற்றும் சிறைத் துறை அமைச்சகத்தின் ஆலோசகர் சிவலிங்கம் சதிஷ்குமார் தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்ற வைபவத்தில் சுமார் 30 முன்னாள் போராளிகள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர். மற்றவர்கள் சனி மற்றும் ஞாயிறு தேதிகளில் உறவினர்களிடம் கையளிக்கப்படுவார்கள் என்றும் சதிஷ்குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
==================================================
தகவல் சுருக்கம்:
இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட அரசின் பிடியில் இருந்தோர் 11690 பேர்.
இவர்களில் 8420 பேரை ஏற்கெனவே அரசு விடுவித்து விட்டது.
இந்தத் தடவை மேலும் 1800 பேரை விடுவிக்கின்றது.
மிச்சமாக 63 பெண்கள் உட்பட 1470 கைதிகளே இலங்கை அரசின் கையில் உள்ளனர்.
=======================================================

இந்திய-இலங்கை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல்

இந்திய-இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சனை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல் இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய...