SHARE

Monday, January 30, 2017

ஈழ மொழியுரிமைப் பாடல்


செங்களம் ஆடி வருகிற புகழோடு
சிரிக்க மறப்பேனா ?


பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் - எந்தன்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் - வாழ்வு
கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் - மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர்
துடைக்க மறப்பேனா ?

நோயில் இருந்து மயங்கி வளைந்து
நுடங்கி விழுந்தாலும் - ஓலைப்
பாயில் நெளிந்து மரண மடைந்து
பாடையில் ஊர்ந்தாலும் - காட்டுத்
தீயில் அவிந்து புனலில் அழர்ந்து
சிதைந்து முடிந்தாலும் - எந்தன்
தாயில் இனிய தமிழ்மொழியின் துயர்
தாங்க மறப்பேனா ?

பட்டமளித்துப் பதவி கொடுத்தொரு
பக்கம் இழுத்தாலும் - ஆள்வோர்
கட்டி அணைத்தொரு முத்தமளித்துக்
கால்கை பிடித்தாலும் - என்னைத்
தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்
தோழமை கொண்டாலும் - அந்த
வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை
வீழ்த்த மறப்பேனா ?

பொங்கு வெறியர் சிறைமதிலுள் எனைப்
பூட்டி வதைத்தாலும் - எந்தன்
அங்கம் பிளந்து விழுந்து துடிக்க
அடிகள் கொடுத்தாலும் - உயிர்
தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்
தூள்பட நேர்ந்தாலும் - ஒரு
செங்களம் ஆடி வருகிற புகழோடு
சிரிக்க மறப்பேனா ?


 - காசி ஆனந்தன் -

நன்றி : காசி ஆனந்தன் கவிதைகள்
வெளியீடு : நா. அருணாசலம், (மாணவர் புத்தகப்பண்னை)
26. ச.ப.சாலை, அடையாறு, சென்னை 20

மெரினா மாணவர் எழுச்சி கழகம் கண்டன அறிக்கை

மெரினா ஜெல்லி ராணி
மாணவர் எழுச்சியை நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு
 விவசாய தேசிய இயக்கமாக முன்னெடுப்போம்.
 
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்                        People Democratic Youth Association PDYA 
 
* மெரினா மாணவர் எழுச்சி ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல. மோடி அரசின் மக்கள் விரோதக் கொளகைகளை எதிர்த்த அனைத்து மக்களின் போராட்டத்தின் தொகுப்பேயாகும்!

* ஜல்லிக்கட்டுக்கான மாணவர், இளைஞர் போராட்டம் , ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தத்தின் மூலம் வெற்றிப்பெற்றுள்ளது. அதற்காக தீரமாக
போராடிய மாணவர் – இளைஞர்களை பாராட்டுகிறோம். வாழ்த்துகிறோம்!

*அதேசமயம், மாணவர்களின் எழுச்சியை அடக்கும் நோக்கத்துடன் மோடி அரசும், தமிழக அரசும் இறுதி கட்டத்தில் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளன. இத்தகைய மக்கள் எழுச்சி இனி ஏற்படக் கூடாது
என்று திட்டமிட்டே காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தமிழக காவல் துறை தொடுத்துள்ளது. இத்தகைய அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

*தமிழக சட்டமன்றத்தின் சட்டத் திருத்தத்திற்குப் பிறகு ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தின் ஒரு கட்டம் முடிவு பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாகத் தடையை நீக்க மறுத்து மத்திய அரசோ,
உச்சநீதிமன்றமோ முடிவு செய்தால் மீண்டும் போராட்டம் நடத்துவோம்!

*ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழர் தேசிய பண்பாட்டுக்கான போராட்டம் என்று சொன்னால் (மட்டும் Ed) போதாது. உண்மையில் தமிழர்களின் பொதுவான பண்பாட்டு இயக்கமாக ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும்.
 
* ஜல்லிக்கட்டு போராட்டம் (Ed), ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலவுடமை எதிர்ப்பு என மாணவர் எழுச்சியாக தொடர வேண்டும்!
 
* ஜல்லிக்கட்டு போன்ற நிலப்பிரபுத்துவ
வர்க்கங்களின் சாதி ஆதிக்கத்தில் உள்ள பண்பாட்டை ஒரு பொதுப் பண்பாடாக, அனைத்து சாதியினரையும் உள்ளடக்கிய, ஆணாதிக்கத்தை ஒழிக்கக் கூடிய ஜனநாயகப்
பண்பாடாக வளர்க்க போராடுவோம்!
 

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
ஜனவரி                                                            2017

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...