SHARE

Wednesday, February 24, 2016

ஹரிஸ்ணவி கடையடைப்பு வடக்கில் முழு வெற்றி !



இலங்கையின் வடக்கே, வவுனியாவில் பள்ளி மாணவி ஹரிஸ்ணவியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி படுகொலை செய்தவர்களுக்கு தண்டனை கோரி இன்று புதனன்று, நடத்தப்பட்ட கடையடைப்பு வடக்கு மாகாணத்தில் பெரு வெற்றி அடைந்தது.



வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்தக் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது. பாடசாலைகள் இயங்கவில்லை. அரச அலுவலகங்கள், வங்கிகள் என்பன மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இயங்கின.

தனியார் பேருந்து சேவைகள், முச்சக்கர வண்டிச் சேவைகள் நிறுத்தப்பட்டன. . அரச பேருந்துகள் மட்டுமே செயல்பட்டன.

''வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி மாணவி ஹரிஸ்ணவி தனிமையில் வீட்டில் இருந்தபோது கடந்த 16 ஆம் திகதி வீட்டினுள் புகுந்த அடையாளம் தெரியாதவர்களினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்''.(BBC Tamil)

இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறிய போதிலும், இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.

இலங்கையில் பள்ளிச் சிறுமிகள்,மற்றும் சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணமுள்ளன.


ஆனால், குற்றவாளிகளைக் கைது செய்து, சட்டத்தின் படி தண்டிக்க அரசு தயாரற்று இருக்கின்றது.


ஹரிஸ்ணவியோடு இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் எனக் கோரிய மக்கள்,


``இருப்பவர்கள் இருந்திருந்தால் இதுவெல்லாம் நடக்குமா`` , என முழங்கினர். 

China rolls out the red carpet for Keir Starmer

China rolls out the red carpet for Keir Starmer PM holds three hours of ‘warm and constructive’ talks with Xi Jinping in bid © Carl Court/AF...