SHARE

Friday, August 02, 2013

மனோ கணேசன்: பிரிபடாத நாட்டுக்குள் தமிழர்களுக்கு அதிகபட்ச சுயாட்சி வழங்க வேண்டும்!

 
இன்று பிரிபடாத நாட்டுக்குள் தமிழர்களுக்கு அதிகபட்ச சுயாட்சி வழங்க வேண்டும் என்பது ஐநா சபையின் பிரச்சினையாகி விட்டது என்பதை இந்த இனவாதிகள் உணர வேண்டும்!
இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை கிழிப்பதன் மூலம் தமிழ் மக்களை தமது இனவாத கட்டுக்குள் தொடர்ந்து வைத்துகொள்ள முடியும் என்ற கனவை இலங்கை அரசு கைவிட வேண்டும்!!
மனோ கணேசன்

அதிகாரப்பகிர்வு கணேசன்

கச்சதீவை விட்டுகொடுத்து இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இல்லாதொழிக்க அரசு சதியாலோசனை - மனோ

கச்சதீவை விட்டுகொடுப்பதன் மூலம் அது தொடர்பான ஒப்பந்தத்தை இல்லாது ஒழித்து, அதை அடிப்படையாக கொண்டு 1987ன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை கிழித்து எறிந்துவிட்டு  13ம் திருத்தத்தை அடியோடு
அழித்தொழிக்க அரசுக்குள் சதியாலோசனை நடைபெறுகிறது.

ஆனால் இன்று 13ம் திருத்தம் என்பது இலங்கையின் அரசியலமைப்பில் ஒரு அங்கம். அது தொடர்பாக ஐநா செயலாளர் நாயகத்துக்கு அரசாங்கம் எழுத்து மூலமான உத்தரவாதம் தந்துள்ளது.

ஆகவே இந்தியாவுடனான  ஒப்பந்தங்களை  கிழித்தாலும், ஒழித்தாலும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களை பகிர்வது
என்பது இன்று இந்தியாவையும் தாண்டிய சர்வதேச பிரச்சினையாகி விட்டது என்பதை நான் அரசுக்கு உறுதியுடன் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன், என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் சிங்கள மொழியில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

கச்சதீவு தொடர்பாக இன்று இந்திய உயர் நீதிமன்றத்திலே வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை படைகளின் தொல்லையில் இருந்து மீட்பதற்கு ஒரே வழி, கச்சதீவை மீட்பதுதான்
என்று தமிழகத்தில் இன்று கருத்து உருவாகி வருகின்றது. கச்சதீவை இந்திய மத்திய அரசு மீளப்பெறுமானால் அதை காரணமாக காட்டி, 1987ல் செய்துகொள்ளப்பட்ட ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசுக்குள் திட்டம் தீட்டப்படுகின்றது. அதன்மூலம் 13ம் திருத்தத்துக்கு முழுமையாக முடிவு காணாலாம் என அரசுக்குள் உள்ள இனவாத பிரிவு
நினைக்கின்றது.

ஆனால், இன்று பிரிபடாத நாட்டுக்குள் தமிழர்களுக்கு அதிகபட்ச சுயாட்சி வழங்க வேண்டும் என்பது ஐநா சபையின் பிரச்சினையாகி விட்டது என்பது இந்த இனவாதிகள் உணர வேண்டும். இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட
ஒப்பந்தங்களை கிழிப்பதன் மூலம் தமிழ் மக்களை தமது இனவாத கட்டுக்குள் தொடர்ந்து வைத்துகொள்ள முடியும் என்ற கனவை இலங்கை அரசு கைவிட வேண்டும்.

அதேபோல், இலங்கையில் மலையகத்திலும், வட-கிழக்கிலும் வாழும் தமிழர்களின் அபிலாஷைகளையும், தமிழக மக்களின் அபிலாஷைகளையும் கணக்கில் எடுக்காமல், தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களை
திருப்தி படுத்துவதற்காக தன்னிச்சையாக ஒப்பந்தங்களை செய்து வந்த தவறுகளை இந்திய மத்திய அரசு உணர வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நன்றி: யாழ் உதயன்

மனோ கணேசன்: இந்த மானுடம் என்ன பேசுகின்றது?


சுகு சிறிதரனது பாரியார் ஈபிடிபி சார்பில் வேட்பு மனுத் தாக்கல்!


ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி!

31 ஜூலை 2013 Global Tamil News

சுகு சிறிதரனது பாரியார் ஞானசக்தி சிறீதரன் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஜக்கிய மக்கள்  சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து வடக்கு தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளது.

அவ்வகையில் அவ்வமைப்பின் முக்கியஸ்தரான சுகு சிறிதரனது பாரியார் ஈபிடிபி சார்பில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். யாழ்.மாவட்டத்திற்கு ஜக்கிய மக்கள்  சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரே ஒரு பெண் வேட்பாளராக ஞானசக்தி சிறீதரன் மட்டுமே களத்தில் குதித்துள்ளார்.

முன்னதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பினுடன் இணைந்து போட்டியிட பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி முற்பட்டிருந்தது.அவ்வகையில் ஆனந்த சங்கரி தனக்கு ஒதுக்கப்பட்ட இடமொன்றை வழங்க முன்வந்திருந்தார். இவ்விடயத்தில் சுரேஸ் பிறேமச்சந்திரன் சமரசத்திற்கு முன்வர மறுத்ததுடன் பத்மநாபா ஈழமக்கள் விடுதலைமுன்னணி என 2 ஈபீஆர்எல்எவ் கடசிகள்  கூட்டமைப்பில் இருக்க முடியாது என தெரிவித்து தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதன் காரணமாக தெரிவித்துள்ளார். (? பி-ர்)

இதனையடுத்து பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை கூட்டமைப்பினுள் இணைக்கும் முயற்சி தோல்வியடைந்ததாக கூறப்பட்டுள்ளது.   அதன் தொடர்ச்சியாகவே அவ்வமைப்பின் முக்கியஸ்தரான சுகு சிறிதரனது பாரியார் ஈபிடிபி சார்பில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். எனக் கூறப்படுகின்றது.

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...