SHARE

Monday, September 24, 2012

மகிந்த வருகையை எதிர்த்து வை.கோ. சாமி `பிக்னிக்`!

கைதான வைகோ மாலை மரியாதையுடன் விடுதலை
September 22, 20120

 
`போராடும்` வை.கோ.சாமிக்கு மாலை போடும் பொலிஸ்

மஹிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிந்த்வாராவில் 3 நாட்களாகப் போராட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் அவரது ஆதரவாளர்களையும் மத்திய பிரதேசப் பொலிஸார் கைது செய்து,பின்னர் விடுதலை செய்தது மட்டுமல்லாது பொலிஸார் வைகோவிற்கு மாலை அணிவித்து மரியாதையாக வழியனுப்பி வைத்தனர்.

போராட்டம் நடத்தச் சென்ற வைகோவை, மத்திய பிரதேச மாநில எல்லையான சிந்த்வாராவில் பந்துர்னா அருகில் உள்ள கட்சிகோலி என்ற இடத்தில் பொலிஸார் தடுத்த நிறுத்தனர்.

40 மணிநேரமாக தடுத்து வைக்கப்பட்ட இடத்திலே உண்டு உறங்கி தொடர் போராட்டங்களை வைகோ நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலையில் சிந்த்வாராவில் ராஜபக்சவின் உருவ பொம்மையை எரித்துவிட்டு சாஞ்சி நோக்கி தமது தொண்டர் படையுடன் வைகோ புறப்படத் தயாரானார்.

அப்போது வைகோ மற்றும் அவரது தொண்டர்களை முன்னேறவிடாமல் தடுத்த மத்திய பிரதேச மாநில பொலிஸார் அனைவரையும் கைது செய்தனர்.

அங்கிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமண மண்டபத்தில் அனைவரையும் தங்க வைத்தனர்.

இதன் பின்னர் சில மணிநேரம் கழித்து வைகோவை விடுதலை செய்த பொலிஸார் அவருக்கு மாலை அணிவித்து மரியாதையாக வழியனுப்பி வைத்தனர்.
==========

ஆளும்கும்பல்களை நம்பி மக்களிடமிருந்து தனிமைப்படும், ஈழத்தமிழர்!

 

 
 
நிதிமூலதனத் திமிங்கலங்களின் எடுபிடிப் பிரித்தானிய ஏகாதிபத்திய அரசே,
 
விடுதலைப்புலி யுத்தக்கைதிகளுக்கு அரசியல் வதிவுரிமை வழங்கு!
 
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!
 
விக்கி லீக்ஸ் ஜூலியன் அசானை அரசியல் வதிவுரிமை பெற்ற நாட்டுக்கு செல்ல அநுமதி!
 
இஸ்லாமியப் போராளிகளை அமெரிக்காவுக்கு கையளிக்கும் நடைமுறையைக் கை விடு!
 
புதிய ஈழப்புரட்சியாளர்கள்

தெரிவுக்குழுவில் கலந்து கொள்ள கூட்டமைப்புக்கு இந்தியா `அழுத்தம்`.


இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் த.தே. கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்க தயாராகிறது இந்தியா!

[ ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012, 03:09.53 AM GMT ]


இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா அழுத்தம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இடம்பெற்ற பேச்சுக்களை அடுத்து இந்தியா இந்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் இந்தியாவுக்கு விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைக்கப்படலாம் அல்லது இந்தியத் தரப்பினர் இலங்கையில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன்போது இலங்கையின் ஜனாதிபதியினால் கூட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு இந்தியா, கூட்டமைப்பை கேட்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, இந்திய பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் புதுடில்லியில் சந்தித்தபோது இரண்டு நாடுகளுக்கு இடையிலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்திக் கொள்ள இணங்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது தமிழகத்தில் இலங்கைப் படையினருக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்கள் தனிப்பட்ட சம்பவங்கள் என்று இந்திய தரப்பில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தமிழகத்தில் இலங்கைப் படையினருக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், பிரான்ஸில் இருந்து செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரான விநாயகம் என்ற கதிர்காமத்தம்பி அறிவழகனால் உருவாக்கப்பட்டுள்ள வலையமைப்பின் மூலமே மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை புலனாய்வுத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

``தமிழ் மக்கள் பிரதிநிதிகள்`` ஐ.நா வுக்கு கையளித்த 5 கோரிக்கைகள்

பொங்கு தமிழ் நிகழ்வையொட்டி மனிதவுரிமை ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்களின் காரியாலயத்தில் உயரதிகாரிகளுடன் சந்திப்பு


நாளை (22/09) நடைபெறவிருக்கும் "எமது நிலம் எமக்கு வேண்டும் " மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வையொட்டி இன்று மதியம் ஜெனீவா ஐக்கிய நாட்டு சபை மனிதவுரிமை ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்களின் காரியாலயத்தில் உயரதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது .

இச் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் பிரதிநிதிகளால்  பின்வரும் ஐந்து கோரிக்கைகள் அடங்கிய  மனு கையளிக்கப்பட்டது .

1.பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

2.ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.

3.இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.

4.பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

5.மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் இச் சந்திப்பில் தமிழ் மக்கள் தமது விடுதலைக்காக தொடர்ந்து மக்கள் மையப்படுத்தப்பட்ட வெகுஜன கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தவேண்டும், மற்றும் மனிதவுரிமை அமர்வுகள் நடைபெறும் காலங்களில் மக்கள் பலத்துடன் தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் வகையில் அனைத்துலக சமூகத்தை நோக்கி நீதிக்கான நிகழ்வுகளை நடாத்துவது வரவேற்கத்தக்கது எனவும் கூறப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற உரையாடலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள அரசால் இனவழிப்பில் சிக்கித்தவிக்கும் தமிழ் மக்கள், தாயகத்தில் எதிர்கொள்ளும் இன்றைய நிலைமையை  விரிவாக எடுத்துக் கூறப்பட்டது . முக்கியமாக சிங்கள அரசு இன்று பாரம்பரிய தமிழர் நிலத்தை அபகரிப்பதை மற்றும் சிங்கள மயமாக்கல் , தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்ச்சியாக மேற்கொள்ளுவதை சுட்டிக்காட்டி பேசப்பட்டது .

  "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்."

 சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

அணு உலையைத் திற! அந்நிய முதலீட்டை மூடு! வள்ளுவர் கோட்டத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்.

அணு உலையைத் திற! அந்நிய முதலீட்டை மூடு!   வள்ளுவர் கோட்டத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்.

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...