SHARE

Thursday, September 10, 2015

2015 அப்பு பாலன் தியாகிகள் தினம்


நக்சல்பாரிப் புரட்சியாளர்கள்
அப்பு பாலன் நினைவு நீடூழி வாழ்க!
இந்திய புதிய ஜனநாயக விவசாய தேசியப் புரட்சி ஓங்குக!
இந்திய விஸ்தரிப்புவாதம் ஒழிக!
புதிய தமிழ் ஈழம் மலர்க!
மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனை வெல்க!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் வாழ்க!
புதிய ஈழப் புரட்சியாளார்கள்
செப்டெம்பர் 12 2015

நக்சல்பாரிப் புரட்சி இயக்கத் தோழர் பாலன் தர்மபுரி மாவட்டத்தில் ஜனநாயகப் புரட்சிகரப் போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டுவதில் முன்னணித் தோழராக செயல்பட்டார். புரட்சிகர இயக்கத்தை அழிக்கும் நோக்கத்தோடு எம்.ஜி.ஆர். ஆட்சி நடத்திய நர பலி வேட்டையில் 1980 செப்.12ல் தோழர் பாலன் படுகொலை செய்யப்பட்டார். தோழர் பாலனின் நினைவு நாளை நாட்டின் விடுதலைக்கும், ஜனநாயகத்திற்கும் போராடி உயிர்நீத்த அனைத்து  தியாகிகளையும் நினைவுகூரும் நாளாகவும், அவர்களின் இலட்சியங்களை நிறைவேற்ற உறுதி ஏற்கும் நாளாகவும் கழகம் கடைப்பிடித்து வருகிறது.
இதன் பொருட்டு இவ்வாண்டு (2015) இலும் கழகம் பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்து வருகின்றது.

* அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும்
இந்துத்துவப் பாசிச மோடி, ஜெயா ஆட்சியில்
நாடு ஒட்டாண்டி ஆவதும்,மத, சாதிவெறிக் கலவரங்கள்தலைவிரித்தாடுவதுமான அவலங்கள்;

* அவலங்களை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட
தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ
நாடாளுமன்றவாத எதிர்க் கட்சிகள்
மாற்றுத்  திட்டத்துடன்ஒன்றுபட   முடியாத கையாலாகாத்தனம்;

* அவலநிலையைப் போக்கஅந்நிய ஆதிக்கத்தை எதிர்த்தும்,மத, சாதிவாத பாசிசத்தை எதிர்த்தும்
அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து
மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!

மேற்காணும் மூன்று முழக்கங்களின் அடிப்படையில் இப்பிரச்சார இயக்கம் கட்டியமைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் துண்டுப்பிரசுர விநியோகமும் , பொதுக்கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
(தலைப்பை அழுத்துக)

பொதுக்கூட்டங்கள்
அம்மா ஆட்சி கழகம் வேண்டிய இடங்களில் சிலவற்றுக்கு அநுமதி மறுத்துள்ளது .

அநுமதி பெற்று கழகப் பொதுக்கூட்டம் நடை பெறும் திடல்கள்
======================================
காந்திபுரம்
சேலம் மாவட்ட தியாகிகள் தின பொதுகூட்டம்
நாள் :12/09/2015சனி மாலை6.00 மணி 
இடம் :காந்திபுரம் கோயில் மைதானம் சேந்தமங்கலம் ,நாமக்கல் .
===================================================
இண்டூர்
தியாகிகள் தின பிரச்சாரப் பொதுக்கூட்டம்
12-09-2015 சனி மாலை 5.00 மணி

(இண்டூர் பேரூந்து நிறுத்தம் அருகில்)
==================================
உத்திரமேரூர்
தியாகிகள் நினைவு நாள் பொதுக்கூட்டம்
இடம்: உத்தரமேரூர் பேருந்து நிலையம் அருகில் 
நாள்: 12.09.2015, சனிக்கிழமை
நேரம்: மாலை 5 மணி
===================================================

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...