Saturday 3 April 2010

தமிழ்க் கூட்டமைப்பு மீது தடையா? நாடெங்கும் போராட்டம் வெடிக்கும்! எச்சரிக்கிறது ஜே.வி.பி

ஆகா என்றெழுந்தது பார் யுகப் புரட்சி!

================================================
''இனி நாடு பிளவுபடாது. ஜனநாயகத்தை மதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாடாளுமன்றத்தில் இணைந்து செயற்பட எமக்கு எவ்வித தடைகளும் இல்லை. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுக்கு அதில் தலையிட எவ்வித உரிமையும் இல்லை'' JVP
================================================
தமிழ்க் கூட்டமைப்பு மீது தடையா? நாடெங்கும் போராட்டம் வெடிக்கும்! எச்சரிக்கிறது ஜே.வி.பி.
2010-04-03 20:58:11
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடைசெய்ய பாதுகாப்புச் செயலாளருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. அதனையும் மீறிச் செய்தால் மக்கள் விடுதலை முன்னணி போராட்டங்களை முன்னெடுக்கும்
கொழும்பு,ஏப்ரல்3
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடைசெய்ய பாதுகாப்புச் செயலாளருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. அதனையும் மீறிச் செய்தால் மக்கள் விடுதலை முன்னணி போராட்டங்களை முன்னெ டுக்கும் இவ்வாறு எச்சரித்திருக்கிறார் குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடைசெய்ய வேண்டுமென பாதுகாப்பு செயலாளர் கூறுகின்றார். அப்படியான ஒருநிலை ஏற்பட்டால் மக்கள் விடுதலை முன்னணி அதற்கு எதிராகப் போராடும். இனி நாடு பிளவுபடாது. ஜனநாயகத்தை மதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாடாளுமன்றத்தில் இணைந்து செயற்பட எமக்கு எவ் வித தடைகளும் இல்லை. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய வுக்கு அதில் தலையிட எவ்வித உரிமை யும் இல்லை. என்று அவர் உரத்துக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். குருநாகல் பொத்துஹரவிலுள்ள "ரோமியோ' ஹோட்டலில் நேற்று வெள் ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித் தார்.
அங்கு அவர் மேலும் கூறியவை வரு மாறு
நாம் மாறுபட்ட அரசியல் கலாசாரத்தை விரும்புபவர்கள். இன்று பலதுறைகளி லும் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. அரசியல் வாதிகள், அதிகாரிகள், வர்த்தகர்கள், ஊடக வியலாளர்கள், சமயத் தலைவர்கள் அனை வரும் தங்கள் சேவை கருதிச் செயற்பட்டு வருகின்றனர். இன்று அரசியல்வாதிகள் மக்களுக்குச் சேவை செய்யாமல் அரசி யல் உல்லாசப் பயணிகளாகவே உள்ள னர்.
யுத்தத்தைக் காட்டி வாக்குப் பிச்சை
கேட்கிறது அரசாங்கம்
அரசியலில் மக்கள் விடுதலை முன் னணி பொய் கூறியதில்லை. அமைச்சர் களாக பதவிகள் வகித்த காலத்தில் வரப்பிர சாதங்களைப் பெற்றுக் கொள்ளவில்லை. இந்த யுகத்தில் தேவைகளை நிறைவேற் றவே நாம் இணைந்து ஜனநாயகத்தைப் பாதுகாக்க வெற்றிக் கிண்ணச் சின்னத் தில் போட்டியிடுகிறோம். இன்று யுத்தத்தை காட்டியே அரசு வாக்குப்பிச்சை கேட்கி றது. யுத்தம் நிறைவடைந்து உள்ளது. ஜன நாயகமே இன்றைய தேவை.
பொன்சேகாவுக்கு கிடைக்கும் வாக் குகள் அனைத்தும் ஜனநாயகத்துக்குக் கிடைக்கும் வாக்குகள். நாம் நாடாளுமன் றம் சென்றாலும், செல்லாவிட்டாலும் ஜன நாயகத்தைப் போராட்டத்தின் மூலம் காப் பாற்றுவோம். அனைவருடனும் இணைந்து சகவாழ்வு அரசியலை முன்னெடுப்போம்.
ஊடகத்தை அடக்கிய ஜனாதிபதி தன் போலி தேர்தல் வெற்றியைக் கொண்டா டுகிறார். அடுத்த அரசை அவர்கள் அமைத் தால் ராஜபக்ஷ குடும்பமும், அரசியலில் சண்டியர்களுமே ஆட்சி புரிவர். குடும்ப ஆதிக்கத்திற்கு உதவுபவர்களுக்கு மட் டுமே ராஜபக்ஷ அரசில் அனைத்தும் கிடைக்கும்.
ஏப்ரல் 8 இன் பின்னர்
சகவாழ்வு அரசு
ஜெனரல் பொன்சேகாவே நாட்டு மக் கள் அனைவரையும் ஒன்றுபடுத்தியவர். அவருக்குக் கிடைத்த வாக்குகள் மூவின மக்களிடமிருந்தும் சமமாகக் கிடைத்தது. இதுவே மக்கள் சமமாக வாழக்கூடிய நிலை யாகும். ஏப்ரல் 8 ஆம் திகதிக்கு பின்னர் அனைவரும் இணைந்து சகவாழ்வு அர சொன்றை உருவாக்குவோம். ஜனாதி பதிப் பதவியேற்கவுள்ள நவம்பர் 19 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சகவாழ்வு அரசொன்று உருவாக்குவோம்.
ஐக்கிய தேசியக் கட்சியையும்,மக்கள் விடுதலை முன்னணியையும் ஒன்று சேர விடாமல் தடுக்க ஜனாதிபதி முனைகின் றார். எதிர்காலத்தில் நாடாலுமன்றத்தில் ஐ.தே.மு. ஜே.வி.பி. இணைந்து செயற் படும். இதில் கருத்து வேறுபாடு இல்லை.
எதிர்வரும் 8 ஆம் திகதிக்குப் பின்னரே எமது போராட்டம் உச்ச நிலை பெறும். அதற்கு அனைத்து மக்களும் பூரண ஆதர வு நலக வேண்டும் என்றார்

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...