சிங்கள ஆக்கிரமிப்பின் கீழ் தமிழீழக் கல்வி நிறுவனங்களின் அடிமை நிலை
================================
யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும்படி அமைச்சர் அழைப்பு
வீரகேசரி 2013-01-07 17:10:56
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் படி பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளுக்கு தடைகள் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு தனக்கு உள்ளதால் கல்விச் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும்படி அழைப்பு விடுத்துள்ளதாக அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
====
பல்கலை கல்விச் செயற்பாடுகள் நாளை ஆரம்பம்; இன்றைய சந்திப்பில் முடிவு
யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்குமான கல்விச் செயற்பாடுகள் நாளைமீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் பல்கலைக்கழக அனைத்து பீடங்களுக்குமான பீடாதிபதிகள் மற்றும் மாணவ தலைவர்களுக்கிடையில் இன்று சந்திபபொன்று மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சந்திப்பின் போதே நாளைய தினம் மீண்டும் பல்கலைக்கழக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பதட்ட சூழ்நிலையினால் பிற்போடப்பட்ட கலைப்பீட மாணவர்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலாக கைதான பல்கலை மாணவர்கள் நால்வரையும் விடுதலை செய்யக் கோரி மூடப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக செயற்பாடுகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை எதிர்வரும் தைப்பொங்கல் தினத்திற்கு முன்னதாக குறித்த மாணவர்கள் நால்வரும் விடுதலை செய்யப்படுவார்கள் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸ்ஸநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
========================
வடக்கில் பாடசாலைகளில் சிங்களம் கற்பிக்க சிறிலங்கா இராணுவத்தினருக்கு ஆசிரிய நியமனம்
[ சனிக்கிழமை, 05 சனவரி 2013, 00:30 GMT ] [ வவுனியா செய்தியாளர் ]
வடக்கில் உள்ள பாடசாலைகளில் சிங்களமொழி கற்பிப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தினரை ஆசிரியர்களாக நியமிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியுடன், பாடசாலைகளில் சிங்களமொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களாக சிறிலங்கா இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு இதற்கெனப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் பாடசாலைகளுக்குச் சென்று தமக்குரிய பாடநேரங்கள் குறித்து அதிபர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
பாடசாலைக்களில் சிறிலங்கா இராணுவத்தினரை ஆசிரியர்களாக நியமிக்கும் நடவடிக்கையை இலங்கை ஆசிரியர் சங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வன்மையாகக் கண்டித்துள்ளன.
சிறிலங்கா இராணுவத்தினரை பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான தேவை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், பாடசாலைகளையும் இராணுவ மயமாக்கும் ஒரு நடவடிக்கையாகவே இதனைக் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு சிங்களமொழியைக் கற்பிக்க வேண்டிய தேவை இருந்தால், அதற்கான ஆசிரியர்களை ஆசிரிய சேவையில் உள்வாங்கி, அவர்களுக்கு உரிய நியமனம் வழங்கி அதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆசிரியர் சேவையின் யாப்புக்கு முரணான இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சிறிலங்கா கல்வி அமைச்சு அதிகாரிகளிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் கடிதம் மூலமாகக் கோரியுள்ளது.
இதற்கிடையே, இராணுவ சீருடையில் அணிந்த சிறிலங்காப் படையினர் கிளிநொச்சி பாடசாலைகளில் சிங்களம் கற்பிப்பதான குற்றச்சாட்டை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மறுத்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, “கிளிநொச்சி கல்வி வலயத்தில் கணிதம், விஞ்ஞானம், சிங்களம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதால், மாணவர்கள் பாதிக்கப்படுவதாக வலயக் கல்வி அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன் கிளிநொச்சி படைத்தலைமையகத் தளபதிக்கு அறிவித்தனர்.
இதையடுத்து கிளிநொச்சி படைகளின் தளபதியின் உத்தரவின் பேரில், இந்தப் பாடங்களைத் தமிழில் கற்பிக்கக் கூடிய சிறிலங்கா இராணுவத்தினரைத் தெரிவு செய்து, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் கற்பித்தல் பயிற்சி வழங்கப்பட்டது.
இவர்கள் இப்போது கற்பித்தலுக்கு தயாராக உள்ளனர். எனினும் இவர்கள் இராணுவ சீருடையில் கற்பிக்க மாட்டார்கள்.
இவர்கள் சாதாரண உடையிலேயே பாடசாலைகளுக்கு செல்வர்.
உரிய அதிகாரிகளின் வேண்டுதலின் அடிப்படையில் மட்டுமே இது நடைபெறும்.
இது உரிய அதிகாரிகள் கிடைக்கும் வரையிலான தற்காலிக ஏற்பாடு தான்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
==========================
Jaffna University to resume on Jan. 16 .
Friday, 04 January 2013 17:18
Academic activities of the Jaffna University will begin on January 16 after a two-month disruption following the arrest and detention of four students by the military, university sources said.
The four students who are detained at a rehabilitation camp in Welikanda had reportedly requested their colleagues to attend lectures stating that the authorities had promised them they would be released soon.
They had conveyed this message to the Deans and Lecturers who had spoken to the students over the phone.
The university Vice Chancellor will meet the Faculty Deans and the Lecturers on January 7 with a view to resuming university activities.
The students have been continuing to boycott lectures after 11 students were arrested in November in the wake of allegedly holding a LTTE commemoration ceremony within the university premises. Seven of the students were released with four of the students still under detention.(Menaka Mookandi and K. Suren)
=======================
தமிழ் பாடசாலைகளில் ஆசிரியர்களாகும் இராணுவத்தினர்!
January 3rd, 2013 அன்று பிரசுரிக்கப்பட்டது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டாம் மொழியான சிங்களம் கற்பிப்பதற்கு அந்தந்த கல்வி வலயங்களுக்கூடாக இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2013ம் ஆண்டு 1ம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளிற்கும், கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிற்கும் படையினர் சீருடைகளுடன் கற்பித்தலுக்காகச் சென்றுள்ளனர்.
மேலும் இந்தப்பாடசாலைகளில் சிங்கள மொழி கற்பிப்பதற்கு கல்வி வலயத்தின் ஊடாக தமக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், பாடசாலை அதிபர்களுக்கு படையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளருடன் தொடர்புகொண்டு கேட்டபோது,
தமது வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இரண்டாம் மொழி சிங்களம் கற்பிப்பதற்கு படையினர் முன்னர் உத்தியோகப்பற்றற்ற அனுமதியினை கோரியிருந்தனர்.தற்போது உத்தியோக பூர்வமாக தமக்கு அனுமதி வழங்குமாறு கோரியிருக்கின்றனர்.இந்நிலையில் விடயம் தொடர்பில் எமது மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தவுள்ளோம்.அவர்களே இவ்விடயம் குறித்து தீர்மானிப்பார்கள் என்றார்.
இதேவேளை விடயம் குறித்து தகவலறிவதற்காக கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டபோது,
விடயம் அனைத்தையும் கேட்ட பின்னர் தொலைபேசி அழைப்பில் சிக்கலிருப்பதால் பேசுவது முழுமையாக புரியவில்லை எனவும்,தான் கூட்டமொன்றுக்குச் சென்றுகொண்டிருப்பதாகவும் கூறி தொலைபேசி அழைப்பை துண்டித்தார்.
எனினும் கிளிநொச்சி கல்வி வலயத்திற்குச் சென்ற இராணுவத்தினர் ஏனைய வலயங்களில் படையினர் சிங்களம் கற்பிப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியினையும்,ஜனாதிபதி செயலணியின் கடிதத்தையும் காண்பித்து தமக்கு அனுமதி வழங்குமாறு கேட்டி ருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவத்தினரால் சிங்கள மொழி கற்பிக்கப்படவுள்ளது.
எனினும் இவ்விடயம் ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தி நிலை யினை ஏற்படுத்தியிருப்பதாக ஆசிரியர்கள் சிலர் தெரிவித்திருக்கின்றனர்.
இருந்த போதும் இது குறித்து அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
=================