SHARE

Monday, November 08, 2010

சட்டமன்றத்துப் பன்றியாகும் ''செந்தமிழன் சீமான்''

ஈழத்தமிழன் சிந்திய இரத்தத்தில் சட்டமன்றத்துப் பன்றியாகும். ''செந்தமிழன் சீமான்''

தொண்டு செய்யும் "தமிழீழ புரட்சிகர மாணவரே" தங்கள் பதில் என்ன?
செய்தி :

இயக்குநர் சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைபிடிக்கப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ‘இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார்…’ என்பதுதான் சீமான் மீது அரசுத் தரப்பு வைத்திருக்கும் குற்றச்சாட்டு. ‘இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசவில்லை. தேவையில்லாமல், தமிழக அரசு அவரைச் சிறையில் அடைத்து பழிவாங்குகிறது…’ என்று அரசுக்கு எதிராக கொதிக்கிறார்கள், சீமான் சார்ந்துள்ள நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
இதற்காக பொதுக்கூட்டங்கள், அரங்க நிகழ்ச்சிகள் என்று பல்வேறு வகைகளிலும் அரசுக்கு எதிராக தங்கள் கருத்தைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
இதற்கிடையில், ‘‘விரைவில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை உடைத்து வெளியே வரும் சீமானை, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் களமிறக்குவோம்…’’ என்று நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பரபரப்பாகப் பேச ஆரம்பிக்க, அதுவே உரம்பெற்று தமிழகம் முழுவதும் தமிழ் இன உணர்வாளர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
‘‘எங்க தொகுதியில சீமானைப் போட்டியிட வைங்க…’’ என்று தமிழகத்தின் பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளிலிருந்தும் சீமான் ஆதரவாளர்கள் கோரிக்கை வைக்க, ‘‘எப்படியும் தேர்தலில் சீமானைப் போட்டியிட வைப்பது…’’ என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
‘‘சீமானுக்காக தொகுதியைக் கூட தேர்ந்தெடுத்து விட்டோம். தேர்தலில் போட்டி என்று சீமான் களமிறங்கினால், அநேகமாக அது சிவகங்கை தொகுதியாகத்தான் இருக்கும்…’’ என்று சொல்லும் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், ‘‘அந்தத் தொகுதியை ஏன் குறிவைக்கிறோம்?’’ என்பது குறித்தும் சொன்னார்கள்.
‘‘இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழினத்துக்குத் துரோகம் இழைத்த காங்கிரஸ்காரர்களில் முக்கியமானவர் உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம். அவர்தான், இலங்கையில் ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழிப்பதற்குத் துணைநின்ற காங்கிரஸ் அரசாங்கத்தின் இழிசெயலை தட்டிக்கேட்காமல் ஒப்புதல் வழங்கி வேடிக்கை பார்த்தவர். அதனால், அவரை சிவகங்கையில் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் தாகமாக இருந்தது.
ஆனால், நாடாளுமன்றத் தேர்தலின்போது எல்லாரும் சீமானுக்கு ஆதரவாக ஒன்று திரளாமல் இருந்துவிட்டார்கள். இல்லையென்றால், அப்பவே சீமான் களத்துக்கு வந்திருப்பார். இப்போது நிலைமை அப்படி இல்லை. அதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் சீமானைக் களமிறக்குவது என்று முடிவெடுத்திருக்கிறோம். சிதம்பரத்தின் ஆதரவாளர் ஒருவர்தான் போட்டியிடுவார். அவரைக் கட்டாயம் தோற்கடிப்போம்…’’ என்றார்கள்.
‘நாம் தமிழர்’ இயக்கத்தின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீனதயாளனிடம் கேட்டபோது,
‘‘சிவகங்கை மண் ஏராளமான தமிழ் உணர்வாளர்-களைப் பெற்ற பூமியாகும். கணியன் பூங்குன்றனார், கம்பர், ஒக்கூர் மாசாத்தியார், தமிழ்ச்சங்கம் கண்ட வள்ளல் பாண்டித்-துரைத்தேவர், சேது நாட்டு செல்லக்கிளியில் வலம் வந்த வாலுக்கு வேலி, மருது சகோதரர்கள், வீரமங்கை வேலு நாச்சியார் போன்றோர் உலவிய வீரத்தின் விளைநிலமான சிவகங்கையில்தான் சீமான் களமிறங்குவது சரியாக இருக்கும்.
சிவகங்கை மாவட்ட அரணையூர்தான் சீமானின் பிறந்த ஊர். சிவகங்கை தொகுதியைப் பொறுத்த வரையில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக இருப்பது கள்ளர் சமூக மக்களும், கிறிஸ்தவ சமுதாய மக்களும்தான். அவர்கள் சீமானுக்காக எதையும் செய்து முடிக்கத் தயாராக உள்ளார்கள்’’ என்றார்.
சீமான் ஆதரவுப்படை பிரமுகர் அன்வர்ராஜா பேசும்போது, ‘‘தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர் இளைஞரான சட்டக்கல்லூரி மாணவர் ராஜீவ் காந்தி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் உணர்வாளர்கள் சார்பில் ப.சிதம்பரத்தை எதிர்த்து சிவகங்கையில் போட்டியிட்டார். கிட்டத்தட்ட ஏழாயிரம் ஓட்டுகள் வரையில் வாங்கினார். இன்னும் கொஞ்சம் கூடுதலாக ஓட்டு வாங்கியிருந்தால், ப.சிதம்பரம் தோல்வியைத் தழுவியிருப்பார். சீமான் போட்டியிட்டால், இளைஞர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் பெருமளவில் திரண்டு வந்து ஆதரவளிப்பார்கள்’’ என்றார் நம்பிக்கையோடு.
கல்லூரி மாணவரான திலீபனும், மாணவி ஒருவரும் சீமான் போட்டி குறித்துப் பேசினார்கள்.
‘‘ஒருவேளை, சீமான் சிவகங்கையில் போட்டியிட்டால், அவருக்காக நாங்க கல்லூரி மாணவ-மாணவிகளைத் திரட்டி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்போம். அவருடைய வெற்றிக்காக வாக்காளர்கள் காலிலும் விழுவோம்’’ என்றார்கள் அதிரடியாக.
இதற்கிடையில், ‘நாம் தமிழர்’ இயக்கத்தினர், ‘‘தொகுதியை சீமானுக்கு விட்டுக் கொடுங்கள்…’’ என்று அ.தி.மு.க., ம.தி.மு.க.வினரிடம் கேட்டு வருகிறார்களாம்.
சீமான் சிவகங்கையில் களமிறங்கும் பட்சத்தில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த நடிகர் வாகை சந்திரசேகரை அவருக்கு எதிராக களமிறக்க தி.மு.க. தரப்பு யோசித்து வருகிறதாம்.
‘‘காங்கிரஸுக்கு எதிராக சீமான் களமிறங்கப் போகிறார்…’’ என்றே செய்திகள் அலையடிப்பதால், காங்கிரஸ் தரப்பும் சீமானை எதிர்க்க முண்டாசு கட்டி கிளம்பியிருக்கிறது. ‘காங்கிரஸ் வர்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவரான பிரபாகரனை களமிறக்கலாமா?’ என்று ஆலோசனைகள் நடக்கிறதாம்.
மொத்தத்தில், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் ‘சீமான் ஃபீவர்’ அரசியல் கட்சிகளை இப்போதே வாட்ட ஆரம்பித்திருக்கிறது.
நன்றி: (பதிவு .கொம்) ,தமிழக அரசியல்,கீற்று

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...