SHARE

Wednesday, February 09, 2011

இலங்கையை எகிப்தாய் மாற்ற என்ன செய்ய வேண்டும்?

இலங்கையை எகிப்தாய் மாற்ற என்ன செய்ய வேண்டும்?

பக்சபாசிசத்துக்கு மாற்று UNP ஐ,தே.கட்சியோ , JVP மக்கள் விடுதலை முன்னணியோ அல்ல!


மற்றும் இவற்றில் இருந்து ’பிரிந்து சென்ற’ எந்தக் கிளைகளுமோ அல்ல!


மேலும் ரொட்ஸ்கிய திரிபுவாதிகளும் அல்ல!


தமிழ்மக்களின் பிரிந்து செல்லும் உரிமையை (சுயநிர்ணய உரிமையை), அங்கீகரித்த ஒரு புரட்சிகர தேசபக்த ஜனநாயக விடுதலை முன்னணியே ஆகும்.


இதை சிங்கள மக்கள் மத்தியில் கட்டியெழுப்புவது ஒடுக்கும் சிங்களப் பெருந்தேசிய இனத்தில் உள்ள புரட்சியாளர்களதும், ஜனநாயகவாதிகளினதும் உடனடி அவசியக் கடமையாகும்.


இன,மத, சிறுபான்மை மக்களான மலையக இஸ்லாமிய மக்களின் மத்தியில் உள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகளும், புரட்சிகர தேசபக்த ஜனநாயக விடுதலை முன்னணிகளை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும்.தீவிரமாக உடனடியாக செயலில் இறங்க வேண்டும்.


ஈழத்தமிழ் அதிகார அரசியலின் குறுந்தேசியவாத, ஏகாதிபத்திய விசுவாச, இந்தியவிரிவாக்க அரசாதரவு அடிமைத்தனத்தை எதிர்த்து, ஒற்றையாட்சி சமரசத்தை எதிர்த்து, அதிகாரப் பரவலாக்க சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து, சர்வதேச சட்டவாத மாயையான நாடுகடந்த அரசாங்கத்தை எதிர்த்து,மாவீரர்களின் தமிழீழத் தாயக அரசியல் இலட்சியத்தை நிறைவாக்க ஈழப்புரட்சிகர தேசபக்த ஜனநாயக சக்திகள் தேசிய சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர தேசபக்த ஜனநாயக விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.


இதன்மூலமே நாடு பரந்த தேசபக்த பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்பி மக்கள் ஜனநாயக குடியரசை நிறுவ முடியும்.


இத்தகைய ஒரு அரசியல் மாறுதலை நிகழ்த்தும் வரையில், ஈழத்தமிழர்களுக்குத் தீர்வு பிரிவினையே ஆகும்!

ஈழத்தமிழர்களின் பிரிவினைக்காக நம் குரலை உயர்த்தும் அதேவேளையில் மேற்குறிப்பிட்ட அரசியல் மாறுதல் நிகழவும் நாம் மிக உறுதியாகப் போராடுவோம்.

=====   புதிய ஈழப்புரட்சியாளர்கள் (ENB)    =====

நடனம்: எந்தக் கலாச்சாரத்தில் இந்த அற்புதத்தை அடக்குவது?

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...