SHARE

Thursday, November 21, 2013

2013 மாவீரர் வாரம் ஆரம்பம்: மாண்ட நம் மக்களே மாவீரத் தோழர்களே செவ்வணக்கம்!


 `பொதுவாக்கெடுப்பு, போர்க்குற்றத்தண்டனை`
ஈழத்தமிழர் ஆதரவு உலக ஜனநாயக இயக்கம் 

வெற்றி பெற உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேர்ந்து

இம்மாவீரர் பெரு நாளில், 

தமிழீழ விடுதலைக்கு விளக்கேற்றுவோம்!

மாண்ட நம் மக்களே மாவீரத் தோழர்களே செவ்வணக்கம்!



மாவீரர் நாள் முழக்கங்கள்

* ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க,ரசிய, சீன, ஆதிக்க சக்திகளை எதிர்த்து சிங்களமிடமிருந்து
தமிழினம் விடுதலை பெற தமிழீழப் பொது வாக்கெடுப்புக்குப் போராடுவோம்!

* தமிழீழம் பாலஸ்தீனம் ஆவதை அநுமதியோம்,
தாய்நில ஆக்கிரமிப்பை எதிர்த்து மீள்  குடியேற்ற உரிமைக்குப்  போராடுவோம்!

* கருக்கலைப்பு,காணாமல் போதல்,இராணுவ கலப்புத்திருமணம் என இன அழிப்பு  தொடர்வதை எதிர்ப்போம்!

* தமிழீழப் பெண்குலம் மீது சிங்களம் கட்டவிழ்க்கும் அமைதிக்கால பெண்வதையை
எச்சக்தி கொண்டும் தடுப்போம்! 

* இனப்படுகொலை போர்க்குற்றவாளி ராஜபக்சவின் பிறந்த நாளுக்கு மரம் நாட்டுவிழா நடத்திய அடிமை வடக்கு மாகாண சபையை
மாவீரர் துயின்ற இல்லங்களை மீளக் கட்டியமைக்கக் கோருவோம்!

* தமிழீழ மக்கள் விவசாயம் செய்த அவர்களது சொந்த பயன் தரு நிலமும், கடற் தொழிலாளிகளின் பெரும் கடலும் அவர்கள் உழைத்து வாழ அவர் வசம் கிடைக்க போராடுவோம், அந்நிய உதவி மாயை எதிர்ப்போம்!

* தமிழீழ விடுதலைக்கு புதிய விளக்கேற்ற தடையாக இருக்கும் சமரசவாதிகளை
தனிமைப்படுத்துவோம்!

* தன்னியல்புப் பாதையின் தவறுகளைக் களைவோம், அரசியல் போர்த்தந்திரப் பாதையில் புரட்சிப் பயணம் தொடர்வோம்!

* தமிழீழத்தாயகத்தின் காவல் அரண்கள் 
விவசாயிகளும், கடற்தொழிலாளர்களும்,சிறுவர்த்தகர்களுமான
உழைக்கும் தமிழ் மக்களே என்பதை உணர்வோம்!

* `பொதுவாக்கெடுப்பு, போர்க்குற்றத்தண்டனை`

ஈழத்தமிழர் ஆதரவு உலக ஜனநாயக இயக்கம் 

வெற்றி பெற உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேருவோம்!

இறுதி வெற்றி ஈழமக்களுக்கே,

ஈழம் காணும்வரை ஓயமாட்டோம்!

புதிய ஈழப்புரட்சியாளர்கள்



No comments:

Post a Comment

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...