Thursday, 12 November 2009

பொன்சேகா பதவி துறந்தார்!

Fonseka resigns
[TamilNet, Thursday, 12 November 2009, 10:02 GMT]
General Sarath Fonseka, the Chief of Defence of the Sri Lanka Army on Thursday resigned from his post, informed sources in Colombo said.

Fonseka tendered his resignation to Sri Lankan president Mahinda Rajapaksa short while ago, highly placed Presidential Secretariat sources confirmed.

ஜெனரல் பொன்சேகா ராஜினாமாக் கடிதம் வழங்கினால்...பதில் வழங்கத் தயாராகிறார் ஜனாதிபதி!
2009-11-12 08:44:53
கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தமது பதவியை ராஜினாமாச் செய்யும் கடிதத்தைச் சமர்ப்பித்தால், அதற்கான பதில் துரிதமாக வழங்கப்படும்.

இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மூத்த அமைச்சர்கள் சிலருடன் கலந்துரையாடிய வேளையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறாராம். ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா போட்டியிடுவது குறித்து செய்திகள் வெளிவரத் தொடங்கியதி லிருந்து பல்வேறு வகையான ஊகங்கள், சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இத்தகைய தருணத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா ராஜினாமாக் கடிதத்தை வழங்கினால் பதிலைத் துரிதமாக வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உயர் அதிகாரிகளுக்குத் தாம் அறிவுறுத்தி உள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார் என்ற தகவல் தென்னிலங்கையில் பெரும் பரபரப்புடன் பேசப்படுகிறது.

மேல் மாகாணத்தில் ஒட்டப்பட்டிருந்த பொன்சேகாவின் படங்கள் கிழிப்பு!
2009-11-12 08:43:59
மேல்மாகாண வீதிகளில் ஒட்டப்பட்டிருந்த பாதுகாப்புத் தலைமை அதிகாரி சரத் பொன்சேகாவின் படங்கள் இனம் தெரியாத நபர்களினால் நேற்று மாலை அகற்றப்பட்டுள்ளன.

அரசின் உத்தரவிற்கு அமைவாக இவை அகற்றப்பட்டன என்று தகவல் கிடைத்துள்ளது என்று ஐக்கியதேசியக்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நேற்று புதன்கிழமை மாலை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். மினுவாங்கொட, நீர்கொழும்பு, மாபோல, மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களிலேயே பாதுகாப்பு தலைமை அதிகாரி சரத்பொன்சேகாவின் படங்கள் அடங்கிய பந்தல்கள் கட்டப்பட்டிருந்தன.
நன்றி: யாழ் உதயன்

சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சிக்கு இந்தியா கடும் எதிர்ப்பு!
பதிவு இணையம்- மணிவண்ணன், கொழும்பு 12/11/2009, 13:00
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை எதிர் கட்சிகளின் சார்பில் போட்டியிட வைக்கும் முயற்சிக்கு இந்தியா கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவிற்கு விஜயம் செய்தி ரனில் விக்கிரமசிங்கவிடம் இந்திய தரப்பு தமது அதிருப்தியினையும் எதிர்பினையும் வெளிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ள சரத் பொன்சேகா இலங்கையின் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது தமது தேசிய நலன்களுக்கு ஆபத்தானது என இந்தியா கருதுகின்றது.

இதனால் அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முயற்சிக்குமாறு இந்தியா ஐக்கிய தேசிய கட்சி தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் இது குறித்து அரசாங்க தரப்புடனும் தாங்கள் கலந்துரையாடுவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...