Thursday, 25 December 2014

மகிந்தவின் பொலனறுவையில் இராணுவம் குவிப்பு!

பொலனறுவையில் குவிக்கப்படும் இராணுவப் படையணிகள்..!
December 24, 201411:23 am

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிசெய்யும் நோக்கில் கேந்திரமுக்கியஸ்துவம் வாய்ந்த பொலன்னறுவ மாவட்டத்துக்கு மேலதிகமாக ஒன்பது இராணுவப் படையணிகள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ அனுப்பி வைத்திருப்பதாக தேர்தல் ஆணையாளரிடம் முறையிடப்பட்டிருக்கிறது.

ஜனவரி எட்டாம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில் மூன்றாவது தடவையாகப் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவின் சார்பில் மோசடியில் ஈடுபடுவதற்காகவே வட மத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மாவட்டத்தில் புதிதாக ஒன்பது இராணுவப் படையணிகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளன.

எதிரணியின் பொது வேட்பாளராக களமிறங்கும் மைத்திரிபால சிறிசேனவின் சொந்த இடமான பொலன்னறுவை மாவட்டத்திலும், அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் வாக்காளர்கள் பெருமளவில் சென்று அவருக்காக வாக்களிப்பதனையும், நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெறுவதையும் திட்டமிட்டு தடுக்கும் நோக்கிலேயே கோட்டாபய ராஜபக்ஷ இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து கிழக்கு உட்பட ஏனைய மாவட்டங்களுக்கு படைகளை விநியோகங்களை இலகுவாக மேற்கொள்ள முடியும் என்பதாலேயே மேலதிக படையணிகள் இங்கு நிலை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். யார் எங்கு சென்றாலும், எதிர்வரும் தேர்தலில் தானே வெற்றுபெறுவேன் என்றும், ஜனவரி 9 க்குப் பின்னரும் தானே ஜானதிபதியென்று மஹிந்த ராஜபக்ஷ அடிக்கடி தேர்தல் பிரச்சார மேடைகளில் தெரிவித்துவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...