Thursday, 25 December 2014

இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு!



இரணைமடுக் குளத்தின் வான் (அணைத் தடைக்) கதவுகள்  திறப்பு! 
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 03:24.28 PM GMT ]

இலங்கையின் மிகப்பெரிய நீர்தேக்கங்களில் ஒன்றாகவும் கிளிநொச்சி மாவட்ட விவாசாய பெருமக்களின் நீர்க்கொடை தாயாகவும் கடந்த வருடங்களில் முக்கிய கலந்துரையாடல் மையப்பொருளாகவும் விளங்கிய இரணைமடு பெருங்குளம் இன்றைய நிலவரத்தின்படி 31 அடிவரை நீர் உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் நாளை காலை குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படும் என கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரலாற்றில் இல்லாத அளவு கொடும் வரட்சியை மக்கள் சந்தித்து மழைக்காக ஏங்கியிருந்தபோது பருவமழை பெய்து இரணைமடுக்குளம் நீண்ட காலத்துக்குபின் இப்பொழுது தற்போது வான்கதவுகள் திறக்கும் நிலையை எட்டியுள்ளது.

நாளை வான்கதவுகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் இன்று பா.உறுப்பினர் சி.சிறீதரன் அங்கு நேரடியாக சென்று குளத்தின் நீர்பேணல் நிலைமைகள் அணைகளின் நிலைமைகளை அங்கு இரவுபகல் பணியில் இருந்து கொண்டிருக்கும் கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

நூற்றாண்டு பெருமைவாய்ந்த அணைகளை கொண்டுள்ள இரணைமடுக் குளத்தில் அணைகளில் சில பகுதிகளில் நீர் கசிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் அதை பொறியியலாளர்கள் சீர்செய்து அவதானித்து வருகின்றார்கள்.

அணையின் நிலைமைகள் மற்றும் வான்பாயும் பகுதிகளில் காணப்படும் பல்லாயிரம் ஏக்கர் நெற்பயிர்களைகளை கருத்திற்கொண்டு இரணைமடுவின் நீர்மட்டம் கடந்த காலங்களில் ஒரு சீராக பேணுப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

பா.உறுப்பினர் சி.சிறீதரனுடன் கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் முக்கியஸ்தர் சிவமோகன், பா.உறுப்பினரின் செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உப தலைவருமான பொன்.காந்தன், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் செயலாளர் கு.சர்வானந்தா, இளைஞர் அணி உறுப்பினர் அஜந்தன் ஆகியோரும் சென்றிருந்ததுடன் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரனும் அங்கு பிரசன்னமாயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment