Thursday, 25 December 2014

ரிசாத் பதியுதீன் பொது வேட்பாளருக்கு ஆதரவு

ரிசாத் பதியுதீன் பொது வேட்பாளருக்கு ஆதரவு 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசிலிருந்து விலகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது.

அமைச்சர் ரிசாத் பதியுதீன், அக்கட்சியின் சார்பில் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற அமீர் அலி சகிதம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

இந்தச் சந்திப்பில் எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன , எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தமது கட்சியை சேர்ந்த 7 மாகாணசபை உறுப்பினர்களும் 69 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் தமது புதிய அரசியல் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளதாக ரிசாத் பதியுதீன்  தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான துணையமைச்சர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லா ஏற்கனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு தனது ஆதரவை வழங்கி வருகின்றார்.

அரச தரப்பினருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பலனாகவே, இம்மாத முற்பகுதியில் அரச கூட்டணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எச்.எம். அஸ்வர் தனது பதவியை இராஜினமா செய்திருந்தார். அந்த வெற்றிடத்திற்கு எஸ். எச். அமீர் அலி நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கியமையினைத் தொடர்ந்து இதுவரை காலமும்  ரிசாத் பதியுதீனுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...