SHARE

Thursday, December 25, 2014

சாவகச்சேரியில் சுதந்திரக்கட்சி அலுவலகம் அடித்துடைப்பு!

சாவகச்சேரியில் சுதந்திரக்கட்சி அலுவலகம் அடித்துடைப்பு! 
December 23, 201411:32 pm

 மஹிந்தவின் பிரச்சாரத்திற்கென ஆலய மண்டபத்தை அடாவடியாக பயன்படுத்திய சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர் சர்வாவின் முகத்தில் அறைந்துள்ளனர் அப்பகுதி இளைஞர்கள்.

தென்மராட்சியின் சாவகச்சேரி, கச்சாய் அம்மன் கோயில் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகமே அப்பகுதி இளைஞர்களினால் நேற்று திங்கட்கிழமை இரவோடிரவாக அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மஹிந்தவின் பிறந்த தினத்தின்போது சுதந்திரக்கட்சியினர் ஆலயத்தில் பொங்கல் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர் என்றும், இதனைத் தொடர்ந்து ஆலய மண்டபம் ஒன்றில் பொருட்களை வைத்த அவர்கள் சில தினங்களில் அதை கட்சி அலுவலகமாகவும் மாற்றிக்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்றிரவு குறித்த அலுவலகம் இனந்தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலய நிர்வாகத்தினர் கொடிகாமம் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...