பாலியல்பலாத்காரத்தை தட்டிக்கேட்ட இளைஞர் இராணுவத்தால் சுட்டுக்கொலைசெவ்வாய், பிப்ரவரி 23, 2010 14:18 பதிவு இணையதளம்
மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் பதற்றம்
மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் பதற்ற நிலை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
9 வயது பாடசாலை சிறுமி ஒருவர் மீது படையினர் மேற்கொண்ட பாலியல் சித்திரவதைகளை அடுத்து குறிப்பிட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் படை முகாமிற்கு சென்று இராணுவத்தினருக்கு எதிராக கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த ஆர்பாட்டத்தை அடுத்து திகிலிவட்டை கிராமத்திற்கு சென்ற இராணுவத்தினர் கிராம மக்களை அச்சுறுத்தியுள்ளனர்.
ஆதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தின் போது முன்னணியில் செயல்பட்ட இளைஞர் ஒருவர் படைத்தரப்பால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
31 அகவையுடைய சந்திரசேகரன் சுகபாலன் என்ற இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அந்த கிராமத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொட்புடைய இராணுவத்தினரை கிராம மக்கள் அடையாளம் காட்டக் கூடாது என்றும் அவ்வாறு அடையாளம் காட்ட முற்பட்டால் அவர்களும் படுகொலை செய்யப்படுவார்கள் என்றும் இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர்.
========================================================
இனவெறிப்பாசிச சிறீலங்கா அரசே!
* ஈனத்தனமான உன் இராணுவத்தை ஈழத்தில் இருந்து வெளியேற்று!
* '' 83 இற்
கு முந்திய நிலைக்கு இராணுவ எண்ணிக்கை குறைக்கப்படவேண்டும்'' என்ற ஒற்றையாட்சி சண்டியன் சம்பந்தனின் கோரிக்கை தமிழ்மக்களின் அடிப்படைக் கொள்கையை விட்டுக்கொடுப்பதே!* சிறுவர்களை புலிகள் சேர்ப்பதாக மார்பில் அடித்து ஓலமிட்ட மனித உரிமைவாதிகளே, ஒன்பது வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இறைமையுள்ள படையின் ஈனச்செயலுக்கு தங்கள் பதில் என்ன?
* பயங்கரவாதத்தை ஒழித்தவர்களே; பாலியல் பலாத்காரத்தை நிறுத்துவீர்களா?
* ஒற்றையாட்சி ஒநாயே வேண்டாம் உனது ஒற்றுமை,
ஆயுதம் ஏந்துவது எமது அரசியல் உரிமை!
===========================




















President's Speech at the 62nd Independence Day




இரவு 10:30 மணியளவில் அக வணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வில், பொதுச்சுடரை பேராசிரியர் தீரன் ஏற்றி வைக்க, இளையோரான ராஜி நேசராஜா வாக்கெடுப்பின் பின்னணி பற்றி எடுத்துக் கூறினார்.