Monday 8 February 2010

கைகளில் விலங்கிட்டு நாயை இழுத்துச் செல்வதுபோல் இழுத்துச் சென்றனர்

கைகளில் விலங்கிட்டு நாயை இழுத்துச் செல்வது போல இழுத்துச் சென்றனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மனோ கணேசன் எம்.பி. அதிர்ச்சியில் உறைந்த நிலையில் தகவல்
* முன்னர் "பயங்கரவாதிகள்' என்ற பெயரில் சந்தேக நபரை இழுத்துச் செல்வதுபோல அவரைக் கொண்டு சென்றனர்.
* கைகளில் விலங்கிட்டு நாயை இழுத்துச் செல்வது போல இழுத்துச் சென்றனர்.

ஜெனரல் சரத் பொன்சேகா கைது!
கொழும்பு, பெப்ரவரி. 09 2010-02-09 05:37:18
அரசியல் தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்த வேளை இராணுவத்தினர் தரதரவென இழுத்துச் சென்றனர் இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுவாராம்

முன்னாள் இராணுவத் தளபதியும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல்சரத் பொன்சேகா நேற்றிரவு 9.30 மணியளவில்

கைது செய்யப்பட்டார். அவரது கொழும்பு அலுவலகத்தை உடைத்துக் கொண்டு திடீரென உட்புகுந்த இராணுவத்தினர் அவரைத் தரதரவெனப் பிடித்து இழுத்து பலவந்தமாகக் கொண்டு
சென்றனர்.நாட்டின் மூத்த சில அரசியல்வாதிகளின் கண் முன்னால் இந்த அத்துமீறல் நடவடிக்கை அரங்கேறியது.
இராணுவக் குற்றங்களின் பேரில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார் என இலங்கை இராணுவப் பேச்\õளர் பிரிகேடியர் பிரசாத்சமரசிங்கவை மேற்கோள்காட்டி ஊடகத்துறை அமைச்_ தகவல் வெளியிட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணே\ன் எம்.பி., ஜே.வி.பி.பியின் எம். பியான சுனில்
ஹந்தன்நெத்தி அக்கட்சின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க ஆகியோருடன் எதிர்வரும் பொதுத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஜெனரல் பொன் சேகா பேசிக்கொண்டிருந்த சமயமே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பு, றோயல் கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள ஜென ரல் பொன்சேகாவின் அலுவலகத்திலேயே இவ்விடயம் இடம் பெற்றது.
இச்சம்பவம் இடம்பெற்று சுமார் பதினைந்து நிமிடங்களில் பின்னர் சம்பவ இடத்தில் இருந்த மனோகணேசன் எம்.பி. அதிர்ச்சியில் உறைந்த நிலையில் தகவல் வெளியிட்டார்.
"நாங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான வியூகம் குறித்து ஜெனரல் பொன்சேகாவுடன் பேசிக்கொண்டிருந்த நேரம் திடீரென அலுவலகத்தை உடைத்துக் கொண்டு இராணுவத்தினர் புகுந்தனர் கேட்டுக் கேள்வியின்றி, ஜெனரல் பொன்சேகாவை தரதரவென பலவந்தமாக இழுத்துச் சென்றனர். முன்னர் "பயங்கரவாதிகள்' என்ற பெயரில் சந்தேக நபரை இழுத்துச் செல்வதுபோல அவரைக் கொண்டு சென்றனர்.
"நாம் அதை ஆட்சேபித்தோம். தடுக்க முடியவில்லை. தம்மைக் கைது செய்வதானால் சிவில் பொலிஸ் மூலம் கைது செய்யும்படி பொன்சேகா கூறியமையைக் கூட அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சிவில் பொலிஸார் வராமல் தாம் வரமாட்டார் என்று ஜெனரல் பொன்சேகா கூறியதும் வந்திருந்த இராணுவத்தினர் பா´ந்து கைகளிலும், கால்களிலும் அவரைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துச் சென்றனர்.
இவ்வளவும் பொன்சேகாவின் அலுவலகத்தில் முதல் மாடியில் இடம்பெற்றன. இராணுவத்தினர் இழுத்துச் சேல்ல முயன்றபோது பொன்சேகா திமிறினார். இழுத்துச் சென்ற படையினரில் ஒருவர் பொன்சேகாவின் பிடரியில் கைகளால் அடித்தமையைக் கூடக் கண்டேன்.
"அவரைத் தரதரவென இழுத்துச் சேன்றசமயம் அவர் கால்களை உதறினார். அவரது கால்கள் பட்டு ஒரு ஜன்னல் கண்ணாடி கூட உடைந்தது. நாயை இழுத்துச் செல்வது போல இழுத்துச்
சென்று கீழ் தளத்தில் வைத்து கைகளில் விலங்கிட்டு அவரைக் கொண்டு சென்றனர்.
இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் மிகமிகக் கேவலமானது. அநாகரிகமானது.
ஜெனரல் பொன்சேகாவுடன் அவரது ஊடகச் சேயலாளர் சேனக டி சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொன்சேகாவின் அலுவலகத்துக்குள் அத்து மீறி இராணுவத்தினர் பாய்ந்தபோதே எம்.பிக்களான எங்களின் மெய்காவலர்களின் ஆயுதங்களையும் அவர்கள் பறித்துவிட்டனர்.
அவரை அங்கிருந்து கொண்டு சென்ற பின்னரும் சுமார் அரைமணிநேரம் அங்கிருந்து வெளியே விடாமல் எம்மை (மனோகணேசன்,ரவூப் ஹக்கீம், ஹந்துன் நெத்தி, சோமவன்ஸ)
இரணுவத்தினர் தடுத்த வைத்திருந்தனர் பின்னரே வெளியேற அனுமதித்தனர் இப்படி மனோகணேசன் எம்.பி. தெரிவித்தார்.

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...