SHARE

Thursday, February 04, 2010

செங்கல்பட்டு: காட்டுமிராண்டி கருணாநிதி ஆட்சியின் காடைத்தனம்

நீ வேறு நான் வேறு இல்லைக் கருணா
சிங்கள - பவுத்த வெறியன் மகிந்த இராபச்சே தமிழர்களைச் சிறைகளில் அடைத்து வைதது சித்திரவதை செய்கிறான் என்றால் அவனை மிஞ்சும் வண்ணம் செம்மொழி மாநாடு நடத்தும்
கருணாநிதியின் ஆட்சியில் இந்த காட்டுமிராண்டித்தனமான, கோழைத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் கருணாநிதி தமிழினத் துரோகி என்ற பட்டத்தை நிரந்தரமாக்கிக் கொண்டுள்ளார். "ஈழத்தமிழர்கள் ஏதிலிகள் அல்ல. அவர்கள் எங்கள் விருந்தினர்கள். எமது தொப்புள்க் கொடி
உறவினர்" என கருணாநிதி மாய்மாலம் பேசுவதில் மட்டும் எந்தக் குறையுமில்லை. மூன்று மணித்தியாலம் உண்ணாநோன்பு நோற்று "ராஜபக்ச போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டார்" என்று
சொல்லி உண்ணா நோன்பை முடித்து சாதனை படைத்தவர் கருணாநிதி ஒருவர்தான்.
முள்ளிவாய்க்காலில் 25,000 பொதுமக்கள் செல்லடியிலும் குண்டுமழையிலும் பொட்டுப் பூச்சிகள் போல் வகைதொகையின்றி கொல்லப்பட்ட போது முதல்வர் கருணாநிதி டில்லியில்
முகாமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.
அது மட்டுமல்ல அங்கு அரங்கேற்றப்பட்ட மனிதப்படுகொலைக்கு சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப. சிதம்பரம் ஆகியோர் மட்டுமல்ல காங்கிரஸ் ஆட்சியில் பங்காளியாக இருக்கும்
திமுக தலைவர் கருணாநிதியும் காரணம் ஆவார். அவர் கையிலும் ஈழத்தமிழர்களின் பச்சை இரத்தம் பூசப்பட்டுள்ளது. அவரும் ஒரு போர்க்குற்றவாளிதான்.
<தமிழ் படைப்பாளிகள் கழகம்>

மேலும்

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...