SHARE

Thursday, January 08, 2015

மக்கள் துயர் நீக்கிய மகிந்த ஆட்சி:இடதுசாரி ஜாம்பவான் திஸ்ஸ விதாரண:

ஜனாதிபதி மஹிந்த ஆட்சிக்கு வந்த பிறகு மக்களின் துயர் நீக்கப்பட்டது - 
இடதுசாரி ஜாம்பவான் திஸ்ஸ விதாரண:

06 ஜனவரி 2015

கூட்டமைப்பினர் பகற்கனவு காண்கின்றனர் - திஸ்ஸ வித்தாரண

எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்களது அரசியலை தக்க வைத்துக்கொள்ளலாம் என பகற்கனவு காண்கின்றனர் என சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.

எட்டியாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

ஜனாதிபதி தனது ஆட்சிக்காலத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணவில்லையென தமிழ் கூட்டமைப்பினர் கூறுகின்றனர். அரசாங்கம் பாராளுமன்ற தெரிவு குழுவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை முன்வைக்குமாறு பல தடவை தமிழ் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் அதனை புறக்கணித்தனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசாங்கத்திலிருந்து  வெளியேறி பொதுவேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபாலவுக்கு தமிழ் கூட்டமைப்பினர் ஆதரவு வழங்க முன்வந்திருப்பது அவர் எவ்வாறு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தமிழ் கூட்டமைப்பினர் மேற்கொண்ட தீர்மானத்தால் அக்கட்சியில் உள்ள சில உறுப்பினர்கள் தங்களது அதிருப்தியை பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.

தமிழ் கூட்டமைப்பில் பூகம்பம் வெடிக்க ஆரம்பித்து விட்டது. வடபகுதி மக்கள் இன்று நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். பெற்றுக்கொண்ட நிம்மதியை இழக்க தயாரில்லை.  அதனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இம் முறை பெரும் வாரியான வாக்குகள் கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தோட்ட தொழிலாளர்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பிறகு மக்களின் துயர் நீக்கப்பட்டது.

மீண்டும் நாடு இருண்ட யுகத்திற்கு செல்லக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தான் எமது கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க முன் வந்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...