SHARE

Thursday, January 08, 2015

``நான் வெற்றி பெற்றால் நாடு பிளவுபடும்``குற்றச்சாட்டில் உண்மை இல்லை – மைத்திரி


நான் வெற்றி பெற்றால் நாடு பிளவுபடும் எனும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை – மைத்திரிபால சிறிசேன
 Jan 05, 2015 Ariram Panchalingam

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கொழும்பில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது நாட்டு மக்களுக்காக விசேட உரையொன்றை   நிகழ்த்தினார்

ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக தாம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை தேர்தல் பிரசாரப் பணிகள் வெற்றிகரமாக இடம்பெற்றுவருவதாக மைத்திரிபால சிறிசேன கூறினார்.

எனினும் தமது தேர்தல் பிரசார பணிகளுக்கு எதிராக பல்வேறு சந்தர்ப்பங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் செயற்பட்டு தேர்தல் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கூறினார்.

தாம் வெற்றியீட்டினால் நாடு பிளவுபடும் என சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் வலியுறுத்தியுள்ளர்.

நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் தனிப்பட்ட ரீதியிலும் பொது எதிரணி என்ற வகையிலும் பொறுப்புடன் செயற்படுவதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றும் நோக்கம் தமக்கில்லை என தெரிவித்த அவர் பிரிவினைவாத கோரிக்கை அல்லது எல்.ரி.ரி.ஈயினரின் மீள் எழுச்சிக்கு இடமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் தமது வெற்றி உறுதியானது எனவும் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் பல்வேறு திட்டங்களை செயற்படுத்தவுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

பௌத்த சமயத்தின் மேம்பாடு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என உறுதியளித்த அவர் ஏனைய சமயங்களுக்கும் உரிய மதிப்பளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...