SHARE

Monday, March 10, 2014

அனந்தி: ஜெனிவாவில் போர்க்குற்றம் பற்றிப் பேச சுமந்திரன் அநுமதிக்கவில்லை.

ஜெனீவா சென்றபோதும் சர்வதேச விசாரணை குறித்து என்னை 
பேசவிடவில்லை; அனந்தி சசிதரன்
2014-03-06 18:16:27 | General
யாழ்நகர் நிருபர்

ஜெனீவா சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் சர்வதேச போர்க்குற்ற விசாரணை கோரிக்கைகள் தொடர்பாக எதுவும் முன்வைக்காத நிலையில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினரான என்னையும் பேசுவதற்கு அனுமதியளிக்கவில்லை என்று அனந்தி சிறிதரன் கூறியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் வியாழக்கிழமை மதியம் இடம்பெற்ற
ஊடகவியியலாளர் சந்திப்பின் போது ஜெனீவா சென்ற கூட்டமைப்பினர் சர்வதேச விசாரணை தொடர்பாக எதுவும் பேசவில்லை என்று கூறப்பட்டு வருவது தொடர்பில்  ஊடகவியிலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப்

பதிலளிக்கையிலையே அனந்தி சிறிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

- See more at: http://www.thinakkural.lk/article.php?
local/dkaquzjnoc10505055cbf43f4943cunpmac3f7e2336b27310f0b9efd0htr#sthash.LVVPKeQ6.dpuf
=================
பலத்த ஏமாற்றம்; அனந்தி சசிதரன்
2014-03-06 17:47:55 | General
எஸ்.நிதர்ஷன்,கே.ஹம்சனன்

ஜெனிவாவில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை ஒட்டுமொத்த தமிழ்
மக்களுக்கும் பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்
தெரிவித்தார்.

ஜெனிவாவினூடாக நீதி கிடைக்குமென நம்பியிருந்த நிலையில் இன்று எமக்கு நீதி கிடைக்காததால் எமது எதிர்கால சந்ததியினர் மாற்று வழியை
எடுப்பார்களாக இருந்தால், இங்கு நீதி கிடைக்கப்பெற்று சமாதானம் நிலவுவதாக கூறுகின்ற சர்வதேச நாடுகளே இதற்குப் பொறுப்புக் கூற வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா பிரேரணை தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக
சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் மதியம் நடைபெற்றது. இதன்   போது கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

- See more at: http://www.thinakkural.lk/article.php local/udfamrzzl254013ab6be46e113643ppthqd6b21d59a3c3a0b9d0f6efrbkyc#sthash.ZzQ6aP27.dpuf

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...