சென்ற ஆண்டு பூந்தமல்லி சிறப்பு முகாமில் 42 நாட்கள் கடுமையான உண்ணா நிலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் செந்தூரன் . தானும் மற்ற முகாம்வாசிகளும் விடுதலை அடைய வேண்டும் என உண்ணா நிலைப் போராட்டம் செய்த செந்தூரனுக்கு ஒட்டுமொத்த தமிழகமே ஆதரவு தந்தது . தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் செந்தூரனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அதன் பலனாக இறுதியில் செந்தூரன் விடுவிக்கப்பட்டார். செந்தூரன் மட்டுமல்லாமல் 30 மேற்பட்ட ஈழத் தமிழர்கள் விடுதலை ஆனார்கள்.
செந்தூரன் விடுதலை பெற்று தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். எனினும் தமிழக அரசின் கியூ பிரிவு காவல்துறை செந்தூரனை விடுவதாக இல்லை . செந்தூரனை நாடுகடத்த வேண்டும் என சதி செய்தது . அவரை நாடுகடத்த உத்தரவையும் பெற்றது . இதற்கிடையில் செந்தூரன் தன்னை நாடுகடத்தக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து செந்தூரனை நாடு கடத்த முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கியூ பிரிவு காவல்துறை வேறு வழிகளில் செந்தூரனுக்கு தொந்தரவு கொடுத்து வந்தது. செந்தூரனின் உறவுக்கார பெண்மணியை வைத்து செந்தூரனை வேவு பார்த்தது. இதனை அறிந்த செந்தூரன் உறவுக்கார பெண்மையை கண்டித்து உள்ளார் . இதையே காரணமாக வைத்து செந்தூரான் உறவுக்கார பெண்ணை தாக்கினார் என்று பொய் வழக்கு போட்டு செந்தூரனை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சட்டமன்ற தீர்மானம் இயற்றிய தமிழக முதல்வர் ஏன் தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்களை மூட மறுக்கிறார்? சிறப்பு முகாம்களில் தவிக்கும் பல தமிழர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சொல்லவொண்ணா துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள் . இவர்களை விடுதலை செய்து தமிழர்களுக்கு நீதி வழங்காமல் , ஈழத் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத் தருவேன் என தமிழக முதல்வர் சொல்வது கபட நாடகமாக தெரிகிறது என்று கூறுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள் . உண்மையில் ஈழத் தமிழர்கள் மேல் தமிழக முதல்வருக்கு அக்கறை இருந்தால் முதலில் செந்தூரன் மற்றும் அனைத்து சிறப்பு முகாம் வாசிகளையும் உடனடியாக விடுதலை செய்யட்டும் என்று கூறிகின்றனர் தமிழீழ ஆதரவாளர்கள் . செய்வாரா முதல்வர் ?
தகவல் இணையம்
No comments:
Post a Comment