See how data centers are changing the American landscape
Satellite imagery shows what was once farmland and desert taken over by warehouselike structures.
America’s landscape is undergoing one of the largest transformations in decades.
To meet the insatiable demand for computer processing to power AI, tech companies and their developers nationwide are building ever-larger data centers, packed with power-hungry equipment.
Racine County, Wis.
2023
2026
Taylor County, Texas
2021
2025
Maricopa County, Ariz.
2015
2026
Ozaukee County, Wis.
2024
2026
Pottawattamie County, Iowa
2018
2026
Fayette County, Ga.
2021
2026
Milam County, Texas
2019
2026
Douglas County, Ga.
2019
2025
Washtenaw County, Mich.
2016
2026
Bexar County, Texas
2022
2026
Montgomery County, Ala.
2020
2026
Dallas County, Texas
2019
2026
Washington County, Ore.
2017
2026
Shelby County, Tenn.
2021
2026
Prince William County, Va.
2020
2025
Sarpy County, Neb.
2018
2025
Loudoun County, Va.
2018
2025
Loudoun County, Va.
2018
2026
Loudoun County, Va.
2022
2026
Franklin County, Ohio
2019
2026
Clark County, Ind.
2023
2025
Dakota County, Minn.
2023
2025
Prince William County, Va.
2021
2025
Loudoun County, Va.
2014
2026
Milam County, Texas
2022
2025
Maricopa County, Ariz.
2022
2026
Lancaster County, Neb.
2023
2025
Maricopa County, Ariz.
2022
2026
Storey County, Nev.
2016
2026
Salt Lake County, Utah
2020
2026
Wasco County, Ore.
2021
2025
Ellis County, Texas
2022
2025
Maricopa County, Ariz.
2021
2026
Clark County, Nev.
2020
2026
Dickens County, Texas
2020
2026
Ward County, Texas
2020
2026
Childress County, Texas
2019
2026
Washington County, Ore.
2018
2026
Doña Ana County, N.M.
2018
2026
Source: Satellite imagery via Google Earth
The country houses nearly 100 hyperscale data centers, which consume at least 100 megawatts of power at peak operation — enough to power about 80,000 homes. There are another 120 under construction, according to Cleanview, a market intelligence company tracking data center development. Four hundred and sixty more are planned.
Roughly 40 percent of today’s hyperscale data centers were built on previously developed land. The rest took over farmland, shrubland and forest.
A third of data centers were built on farmland
Land use for 93 large data centers before they were built.
40%
33%
12%
11%
4%
Previously
developed land
Farmland
Forest
Shrubland
Other
Sources: Washington Post analysis of the National Land Cover Database and Cleanview data-center data.
Satellite imagery via Google Earth.
Data centers now operating are typicallyin relatively wealthy metropolitan and urban areas, said David Adams, an associate professor at California State University at Fullerton who studies public infrastructure. That’s likely because when building the facilities, companies look for places supplied with reliable power and fast internet.
But the data centers now being built to power AI require far more electricity because of the powerful chips inside. That’s pushing construction into rural areas, where costs are cheaper but still near fiber internet lines, he said.
Because data centers are straining the capacity of the electric grid, some are also being built with their own power generation, in part to blunt local criticism that these operations increase the cost of electricity for consumers. That can require data center sites to be more sprawling.
Musk’s SpaceX, which he merged with xAI this year, built its Colossus 2 data center in the Memphis area next to an existing gas power plant. Rows of giant batteries help stabilize the power supply during peak demand, the company has said.
Batteries
Tennessee
Mississippi
Existing gas
power plant
But that still isn’t enough. The company also purchased this nearby land in Mississippi, where it is building its own off-grid power generation.
Detail
New gas
turbines
Source: Satellite imagery via Google Earth. Aerial image via EagleView.
While construction continues, Colossus 2 is being powered by temporary gas turbines, which can be much more polluting than grid power. Residents who live across town, near SpaceX’s older data center, Colossus, have protested the emissions from its on-site generators. SpaceX did not respond to a request for comment.
Data centers have existed for years but have never been quite this large.
“Traditionally it’s just one building situated in an urban area,” Adams said. Now, hyperscalers start with one building and then expand to “two, three, four, five, six buildings.”
Meta is constructing a data center campus called Hyperion on a tract of land in rural Louisiana that will dwarf Colossus 2 — and Manhattan’s Central Park. The company did not respond to a request for comment.
The project is huge but may soon be overtaken. If all the data centers currently planned are built on schedule, according to Cleanview’s data, by 2030 the Hyperion campus will rank only at No. 5 in the U.S. by square footage.
இன்று(26-09), மாவீரன் திலீபன் தன்னை மாய்த்துக் கொண்ட நாள்.
(2026-1987) 39 ஆம் ஆண்டு நினைவு நாள்.
அவன் வீரத்தை வாழ்த்தி, ஈகத்தைப் போற்றி இவ் வரிகளை வரைகின்றோம்.
திலீபன் தனது போராட்டத்தை உண்ணாவிரத வடிவத்தில்1987 செப்டெம்பர் 15 இல் ஆரம்பித்தார்.செப்டெம்பர் 26 வரை நீரும் அருந்த மறுத்து, உண்ணாநோன்பிருந்து, தன் வதை செய்து, தன்னை மாய்த்துக் கொண்டார்- வீரச்சாவடைந்தார்.இறக்கும் போது திலீபன் வயது இரு பத்து நான்கை எட்டிக் கொண்டிருந்தான்! அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவராக இருந்தபோது இணைந்திருக்கின்றார்.இந்த வயதைக் கணித்தால் அவர் முறையான கல்வியிலும் சிறந்த மாணவர் என்பதை அறிய முடியும் .
யாழ்ப்பாணம், ஊரெழுவைச் சேர்ந்த திலீபனின் இயற்பெயர் இராசையா பார்த்தீபன். அவர் வசதியான மத்தியதர குடும்பத்தைச் சார்ந்தவர்.தனிப்பட்ட முறையில் அவருக்கென்று எதற்காகவும் போராட வேண்டிய நிலை அவருக்க இருக்கவில்லை.கல்வியில் கூட அவர் தகுதி அடிப்படையில் முன் வந்திருக்கக் கூடும்.
அவர் தான் சார்ந்த சமூகத்துக்காக, தனது மக்களுக்காக, தமிழருக்காக அவர் தம் தமிழீழ தேசத்துக்காக தன்னை அர்ப்பணித்துகொண்டவன். தலைவனா, தமிழா,அமைப்பா, தேசமா என்று கேட்டால் திலீபனின் முதல் தெரிவு தேசம் -தமிழீழம் என்பதை அவனை அறிந்த அனைவரும் நன்கறிவர்.
மானிப்பாய்ப் பகுதிக்கு பொறுப்பாளராக இருந்த திலீபன் விரைவாக யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளரானார்.நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பைக் கட்டியெழுப்புவதில் மாத்தையாவுடன் இணைந்து உழைத்தவர்களில் திலீபன் முக்கியமானவர்.
திலீபன் யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த காலத்தில் பல அமைப்புப் பிரச்சார முயற்சிகளை முன்னெடுத்தார். இவர்காலத்தில் தான் யாழ்-பல்கலைக் கழகத்தை மையப்படுத்தி `சுதந்திரப் பறவைகள்` அமைப்பு உருவாக்கப்பட்டு ஒரு பத்திரிகையும் வெளியிடப்பட்டது.சிவ ரஞ்ஞித் மறுமலர்ச்சிக் கழக பொறுப்பை ஏற்று இயங்கினார்.
அப்போது விடுதலைப் புலிகள் அமைப்பு எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும் நாடு பரந்து வளர்ந்து மண்ணில் வேரூன்றி இருந்தது.எந்த மரத்தில் எந்த குருவி உள்ளது என்பதை நன்கறிந்திருந்தனர்.அகப்பட்டவற்றை சுட்டுக் கொன்றனர்.
ஏனைய குழுக்களும் நாட்டிலேயே இருந்தன, மக்களிலேயே தங்கியிருந்தன.தமிழகம் அப்போது `பின் தளம்` என்றுதான் அழைக்கப்பட்டது.பின் தளமாக , பின் பலமாக தமிழக மக்கள் மாறினர்.
1983 இல் ஜுலை ஜுலைப் படுகொலை நடந்தேறியது.ஈழ அகதிகள் தமிழகம் சென்றனர்.(இன்றும் அடிமை அகதிகளாக அங்கேயே முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளனர்). இதைக் காட்டி இந்தியா தலையீடு செய்தது.1985 இல் ஈழக்குழுக்களின் சுய நிர்ணயக் கோரிக்கையை ஏற்க மறுத்தது. ஈழத்தைக் கைவிட்ட ஒரு அடிமை உடன்பாட்டுக்கு அடிபணிய திம்பு மாநாட்டில் நிர்ப்பந்தித்தது.சகோதரப் படுகொலைகளைத் தூண்டியது.விடுதலைப் புலிகளை அழிக்க டெலோ கும்பலை ஆயுதபாணியாக்கியது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இற்குள் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் ரோ ஒரு தனி அமைப்பை உருவாக்கியது.காங்கிரஸ் அமைச்சர் சிதம்பரம் மத்திய அரசாங்கத்தில் இருந்து எல்லா உதவிகளும் சுரேசுக்குச் செய்தார்.ஆயுதங்கள் மயிலிட்டியில் வந்து குவிந்தன.குழு மோதல்கள் உருவாகி டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப் இந்தியக் கைக்கூலிப்படை தடை செய்யப்பட்டது.இப்போது தான் `` கந்தன் கருணைப் படுகொலை`` அனர்த்தமும் இன்னும் பல கோர நிகழ்வுகளும் நேர்ந்தன.பொறுமை இழந்த இந்தியா தானே நேரடியாக இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.பின் தளம் முன் தளமானது! இப்போதும் கூட இந்தியா தனது பாத்திரத்தை `மத்தியஸ்த்தம்` என்றே கூறி வந்தது.விடுதலைப் புலிகளை நிராயுதபாணியாக்க ஜே.ஆருக்கு வழங்கிய உத்தரவாதத்தின் நிமித்தமும், தனது சொந்த நலன் காரணமாகவும்-நாலே ஆண்டுகளில் கொடுத்த ஆயுதத்தைப் பறிக்க ஆக்கிரமிப்பு இராணுவத்தை அனுப்பியது இந்தியா!.புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க பணிக்கப்பட்டனர்.
போர்க்களப் பிரபாகரன் முதன் முதலாக தன் மக்கள் முன் தோன்றி `சுதுமலைப் பிரகடனத்தை வெளியிட்டார்`.ஈழ விடுதலைப் புரட்சியின் வரலாற்றில் வட்டுக் கோட்டைத் தீர்மானத்துக்கு என்ன முக்கியத்துவம் உண்டோ, அதே அளவு முக்கியத்துவம் சுதுமலைப் பிரகடனத்துக்கும் உண்டு. இப்பிரகடனம் இந்திய இலங்கை ஒப்பந்தம் மற்றும் அதற்குப் பின்னான காலம் குறித்த விடுதலைப் புலிகளின் யுத்ததந்திர-தொலை தூர-நிலைப் பாட்டை விளக்குவதாக அமைந்திருந்தது.
சுதுமலைப் பிரகடனம் தொலை தூர-நிலைப்பாட்டை விளக்குவதாக அமைந்திருந்தது என்றால்,திலீபனின் உண்ணாவிரதக் கோரிக்கைகள் செயல் தந்திர நிலைப்பாட்டை விளக்கியது.இவை இரண்டையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாது.செயல் தந்திரத் திட்டங்கள், யுத்த தந்திர திட்டங்களில் இருந்து வரிக்கப்படுபவை.இந்திய விரிவாதிக்கம் என்கிற யுத்த தந்திர திட்டத்தில் இருந்துதான், இந்திய இலங்கை ஒப்பந்தம் (13வது திருத்தம்) என்கிற செயல் தந்திரத் திட்டம் வரிக்கப்பட்டது. விரிவாதிக்கம் தேசியப் பிரச்சனையில் சுதந்திரத்தையோ, ஜனநாயகத்தையோ அனுமதிக்காது.அதனால்த்தான் 13 வது திருத்தம் என்கிற ஒரு நிர்வாக ஏற்பாட்டை தேசியப் பிரச்சனைக்கு தீர்வாக இந்தியா முன்வைக்கின்றது.
சுதுமலைப் பிகடனத்தில் தலைவர் ஆயுத ஒப்படைப்புப் பற்றிப் பேசினார். தம்முடைய ஆயுதங்கள் களையப்பட்டால், தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு இந்தியாவே பொறுப்பு என்று ஆணையிட்டார்.தளபதி திலீபனின் உண்ணாவிரதக் கோரிக்கைகள் அனைத்தும் தமிழ் மக்களின் பாதுகாப்புடன் தொடர்பு பட்டவை.
மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றோம்:
சுதுமலைப் பிரகடனம் தொலை தூர-நிலைப்பாட்டை விளக்குவதாக அமைந்திருந்தது என்றால்,திலீபனின் உண்ணாவிரதக் கோரிக்கைகள் செயல் தந்திர நிலைப்பாட்டை விளக்கியது.இவை இரண்டையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாது.பிரிக்கக் கூடாது.
வரலாற்றுச் சிறப்புமிக்க-முக்கியத்துவம் மிக்க அந்த பிரகடனம்:
எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழீழ மக்களே…
இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. திடீரென எமக்கு அதிர்ச்சியூட்டுவதுபோல, எமது சக்திக்கு அப்பாற்பட்டதுபோல இந்தத் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் விளைவுகள் நமக்குச் சாதகமாக அமையுமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
திடீரென மிகவும் அவசரமாக, எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதியாகிய எம்மையோ கலந்தாலோசிக்காமல் இந்தியாவும் – இலங்கையும் செய்துகொண்ட ஒப்பந்தம் இப்போது அவசர அவசரமாக அமலாக்கப்பட்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் டெல்லி செல்லும்வரை இந்த ஒப்பந்தம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது.
பாரதப் பிரதமர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி டெல்லிக்கு அவசரமாக அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்றதும் இந்த ஒப்பந்தம் எமக்குக் காண்பிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன… பல கேள்விக்குறிகள் இருந்தன.
இந்த ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா என்பதைப் பற்றி எமக்குச் சந்தேகம் எழுந்தது. ஆகவே, இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்திய அரசுக்குத் தெள்ளத்தெளிவாக விளக்கினோம். ஆனால், நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாமல் போனாலும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம் என இந்திய அரசு கங்கணம் கட்டி நின்றது.
இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சர்யப்படவில்லை. இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்னையை மட்டும் தொட்டு நிற்கவில்லை. இது, பிரதானமாக இந்திய – இலங்கை உறவு பற்றியது. இந்திய வல்லாதிக்க வியூகத்தின்கீழ் இலங்கையைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் அடங்கியிருக்கின்றன. இலங்கையில் அந்நிய நாசகாரச் சக்திகள் காலூன்றாமல் தடுக்கவும் இது வழிவகுக்கிறது.
ஆகவேதான், இந்திய அரசு அதிக அக்கறை காட்டியது. ஆனால், அதேசமயம் ஈழத்தமிழரின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் இந்த ஒப்பந்தம் அமைகிறது. ஆகவேதான், எமது மக்களைக் கலந்தாலோசிக்காது எமது கருத்துகளைக் கேளாது இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதை நாம் கடுமையாக எதிர்த்தோம். ஆனால், நாம் எதிர்த்ததில் அர்த்தமில்லை.
எமது அரசியல் தலைவிதியை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவு செய்திருக்கும்போது நாம் என்ன செய்வது?
இந்த ஒப்பந்தம் எமது இயக்கத்தைப் பாதிக்கிறது… எமது அரசியல் லட்சியத்தைப் பாதிக்கிறது… எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது… எமது ஆயுதப் போராட்டத்துக்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது. பதினைந்து வருடங்களாக ரத்தம் சிந்தி, தியாகம் புரிந்து, சாதனை ஈட்டி, எத்தனையோ உயிர்பலி கொடுத்துக் கட்டி எழுதப்பட்ட ஒரு போராட்ட வடிவம் ஒருசில தினங்களில் கலைக்கப்படுவதென்றால் அதை நாம் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.
திடீரெனக் கால அவகாசமின்றி எமது போராளிகளின் ஒப்புதலின்றி, எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இன்றி இந்த ஒப்பந்தம் எம்மை நிராயுதபாணியாக்குகிறது. ஆகவே, நாம் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தோம். இந்தச் சூழ்நிலையில் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி என்னை அழைத்துப் பேசினார். அவரிடம், எமது பிரச்னைகளை மனம்திறந்து பேசினேன்.
சிங்கள் இனவாத அரசின்மீது எமக்குத் துளிகூட நம்பிக்கை இல்லை என்பதயும், இந்த ஒப்பந்தத்தை அவர்கள் நிறைவேற்றப் போவதில்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்னை பற்றியும் அதற்கான உத்தரவாதங்கள் பற்றியும் பேசினேன். பாரதப் பிரதமர் எமக்குச் சில வாக்குறுதிகள் அளித்தார். எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தார்.
பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரது உறுதிமொழிகளில் நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கையில் இறங்க, இந்தியா அனுமதிக்காது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில்தான் நாம் இந்தியச் சமாதானப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்கிறோம்.
நாம் எமது மக்களின் பாதுகாப்புக்காக எத்தனை அளப்பரிய தியாகங்களைப் புரிந்தோம் என்பதை நான் இங்கு விளக்கிக் கூறத் தேவையில்லை. எமது லட்சியப் பற்றும் தியாக உணர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை எமது மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களது பாதுகாப்புக்காக, உங்களது விடுதலைக்காக, உங்களது விடிவுக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம்.
நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம். ஈழத் தமிழரின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்துவந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடம் பெற்றுக்கொள்வதிலிருந்து மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது, இந்தப் பொறுப்பு மாற்றத்தைக் குறிக்கிறது.
நாம் ஆயுதங்களைக் கையளிக்காதுப் போனால் இந்திய ராணுவத்துடன் மோதும் துர்பாக்ய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய வீரருக்கு எதிராக நாம் ஆயுதங்கள் நீட்டத் தயாராக இல்லை. எமது எதிரியிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய ராணுவ வீரர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நாம் ஆயுதங்களை அவர்களிடம் கையளிப்பதிலிருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவருடைய உயிருக்கும், பாதுகாப்புக்கும் இந்திய அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கு அடித்துக் கூற விரும்புகிறேன். இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பதைத் தவிர, எமக்கு வேறு வழியில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குவோம்.
ஆனால், இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்கவில்லை. சிங்கள் இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் காலம் வெகுதூரத்தில் இல்லை. தமிழீழத் தனியரசே, தமிழீழ மக்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு.
தமிழீழ லட்சியத்துக்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால், போராட்ட லட்சியம் மாறப்போவதில்லை. எமது லட்சியம் வெற்றி பெறுவதானால், எமது மக்களாகிய உங்களின் ஏகோபித்த ஆதரவு என்றும் எமக்கு இருக்க வேண்டும்.
தமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசில் அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால், நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபெறப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.
இப் பிரகடனத்தின் ஆரம்பப் பகுதியில் இந்த ஒப்பந்தம் எவ்வாறு, ``திடீரென்று``, `` அவசர அவசரமாக`` நிறைவேற்றத் திட்டமிட்டது என்பதை அழுத்திக் கூறுகின்றார்.மக்கள் விழித்தெழ முன்னர், செய்தி பரவுவதற்கு முன்னால் `ராத்திரி திருடனைப்போல` பொழுது விடிந்து வெளிச்சம் பரவுவதற்கு முன்னால் செய்யத் திட்டமிட்டது.இந்த நள்ளிரவில் நாடு முழுவதும் வெளிச்சத்தை மூட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்தச் சூழ் நிலையில் தான் திலீபன் தன்னை எரிக்கத் தயாராகினான்.கீழே இணைக்கப்பட்டுள்ள பா.அரியநேத்திரன் அவர்களின் வாக்குமூலம் அவன் எவ்வாறு ஒளியூட்டி இந்திய இருள் நீக்கினான் என்பதை கால நிரலில், ஒரு நேரடிச் சாட்சியமாக பதிவு செய்துள்ளது.(நன்றி)
திலீபனின் உண்ணாவிரதக் கோரிக்கைகள்:
1) மீளக் குடியமர்தல் என்ற பெயரில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
2) சிறைகளிலும், இராணுவ முகாம்களிலும் தடுத்து வைக் கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் யப்பட வேண்டும்.
3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.
5) தமிழர் பிரதேசங்களில் புதிதாகப் பொலிஸ் நிலை யங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக் கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
மேற்கண்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் தனது போராட்டத்தை ஆரம்பித்தார். இக் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு உயிர்நீத்தார்.
`` திலீபன் நினைவேந்தல் நிகழ்வின் 11-வது நாளான இன்று தமிழர் தாயகமெங்கும் மக்கள் உணர்வு பூர்வமாக திரண்டு நினைவேந்தல்களை முன்னெடுத்துவருகின்றனர்.
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் அஹிம்சை வழியில் உண்ணாநோன்பிருந்து தன்னுயிரைத் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், நல்லூர் நினைவிடத்தில் 11ஆம் நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை, முச்சக்கர வண்டியில் அவ்விடத்திற்கு வருகை தந்த காவற்துறையினர் மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துச் சென்றுள்ளனர்.
சில பகுதிகளில் இரத்த தான நிகழ்வுகள் நடந்தன.அங்கேயும் பொலிஸ் தலையீடு செய்தது.
வழக்கம் போல புலம் பெயர் தேசங்களில் உந்துருளி, உதைபந்தாட்ட களியாட்டங்கள், கட்டுரைப் போட்டிகள் தாராளமாக தங்கு தடையின்றி நிகழ்ந்தன.
தியாக தீபம் திலீபன் 1987 செப்டெம்பர் 15 முதல் செப்டெம்பர் 26 வரை உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தார்``.
இன்று 2026 ஆண்டு திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டதையொட்டிய பத்திரிகைச் செய்தியே மேலே நீங்கள் கண்டது.
தியாகி திலீபனின் மீள் நினைவலைகள்- பா.அரியநேத்திரன்
September 22, 2026
தியாகதீபம் திலீபன் இந்தியப் படைகளின் கெடுபிடிகளுக்கு எதிராக வைத்த ஐந்து கோரிக்கைகள்..
மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கு கிழக்கு மாகாணங் களில் திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். சிறைகளிலும், இராணுவ முகாம்களிலும் தடுத்து வைக் கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் யப்பட வேண்டும்.
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும். தமிழர் பிரதேசங்களில் புதிதாகப் பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
இந்த ஐந்து கோரிக்கைகளுடன் உண்ணாவிரதம் ஆரம்பிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 13.09.1987ல் இந்தியத் தூதர் அலுவலகத்திற்கு அந்தக் கோரிக்கை மகஜர் அனுப்பி வைக்கப்பட்டு தீர்வு கேட்கப்பட்டது. மறுநாள் 14.09.1987 வரை எந்தப் பதிலும் கிடைக்காத காரணத்தால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த விடுதலைப் புலிகள் தீர்மானித்தனர். தலைவர் பிரபாகரனும் தமது நிலைமையை விளக்கி இந்தியத் தூதுவர் தீட்சித்துக்குக் கடிதம் அனுப்பினார். அதை அவர் பொருட்படுத்தவில்லை.
அதனால் (15/09/1987 தொடக்கம் 26/09/1987 வரை) உண்ணா விரதம் ஆரம்பமானது.
01ம் நாள், 15.09.1987, செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிக்கு யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் வளாகத்தில் உண்ணாவிரத மேடையில் திலீபனின் தாய் (ஏற்கனவே இறந்துவிட்டார்). அதனால் அங்கு வந்த ஒரு தாய், விபூதியை நெற்றியில் பூசினார். விடுதலைப் புலிகளின் தளபதி மாத்தையா திலீபனை உண்ணாவிரத மேடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார். அவர் அருகே ஏனைய போராளிகளான மு.வ.யோ.வாஞ்சிநாதன், ராஜன், பிரசாத், சிறீ ஆகியோர் அமர்ந்தனர். அன்று இரவு 11 மணிக்கு தலைவர் பிரபாகரன், திலீபனைப் வந்து பார்த்தார். அவருடன், போராளிகளான சொர்ணம், இம்ரான், அஜீத், சங்கர், மாத்தையா, ஜானி என்று பலரும் வந்திருந்தனர்.
02ம் நாள், 16.09.1987, புதன்கிழமை திலீபன் தானே முகத்தைக் கழுவி தலைவாரிக் கொண்டார், சிறுநீர் கழித்தார். மக்கள் ஆயிரக்கணக்கில் நல்லூர் வளாகத்தில் கூடினர். மேடையில் பல கவிதைகள், பேச்சுக்கள் முழங்கிக் கொண்டிருந்ததைக் கேட்ட திலீபன், தானும் பேச வேண்டும், ஒலி வாங்கியைத் தாருங்கள்’ என்றார். ஒலிவாங்கி வழங்கப்பட்டது. அப்போது அவர் கூறிய வார்த்தை:
“அன்பார்ந்த தமிழீழ மக்களே!
என்னால் அதிகம் பேச முடியாது. ஆனாலும் உங்களுடன் பேச வேண்டும் போல் இருக்கிறது. உங்களைப் பார்க்கும்போது, நீங்கள் தரும் ஆதரவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறேன். எனது ஐந்து கோரிக்கைகளும் நிறைவேறும் வரை ஒரு சொட்டு நீர்கூட நான் அருந்த மாட்டேன். இது உறுதி. இதையே தலைவர் பிரபாகரனிடமும் வலியுறுத்திக் கூறிவிட்டேன். இறக்க நேரிட்டால், அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். நான் இறந்ததும் விண்ணில் இருந்து அங்கேயுள்ள என் நண்பர்களுடன் சேர்ந்து தமிழீழம் மலரப்போகும் அந்த நாளை எதிர் பார்த்துக் கொண்டே இருப்பேன். என்னால் அதிகம் பேச முடியவில்லை. என் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆர்வமுடன் கலந்துகொள்ளும் உங்களுக்கு என் நன்றிகள். வணக்கம்’’
அவரது பேச்சைக் கேட்ட மக்கள் கண்ணீர் சிந்தினர். அன்று இரவும் தலைவர் பிரபாகரன் உண்ணாவிரத மேடையில் திலீபனுடன் உரையாடினார்.
03ம் நாள், 17.09.1987, வியாழக்கிழமை, “மலம் போகவேணும் போலதான் இருக்கு’ என்றார் திலீபன்.
“இறங்கி வாருங்கள்’ – உதவுகிறார் டாக்டர் வாஞ்சி நாதன்.
“வேண்டாம் விடுங்க… நானே வருகிறேன்.’
சிறுநீர் கழியவில்லை… சிரமப்படுகிறார்.
“தண்ணீர்-குளுக்கோஸ் ஏதும் குடித்தால்தான் சிறுநீர் வரும்’ என்கிறார் டாக்டர்.
“நான் சொட்டு நீர்கூட அருந்த மாட்டேன்’ என்றார்.
ஒலிபெருக்கியில் காசி ஆனந்தன் கவிதைகள் முழக்கமிட்டுக் கொண்டிருந்தது. தொடர்ச்சியாக நல்லூர் கோயில் வளாகம் முழுவதும் மக்கள் வெள்ளம் நிரம்பியது. பாடசாலை மாணவர்கள் பல இடங்களிலும் இருந்து வருகை தந்தனர்.
04ம் நாள், 18.09.1987, வெள்ளிக்கிழமை அப்போது நாடித்துடிப்பு 120. சுவாசத் துடிப்பு 24. நாடித்துடிப்பு சாதாரணமாக 72-80ம், சுவாசத் துடிப்பு 16-22ம் இருக்க வேண்டும். அதே நாள் இரவில் நாடித்துடிப்பு 114. சுவாசத்துடிப்பு 25.
தியாகி திலீபன் ஏற்கனவே 1986இல் நடை பெற்ற ஒரு மோதலில் எதிரியின் குண்டு வயிற்றில் தாக்கியதால் அவருடைய 14 அங்குலக் குடல் அகற்றிச் சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அப்போது மூன்று மாதம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அந்தக் காரணமும் இப்போது சேர்ந்து அவருக்கு வயிற்றில் வலி எழுந்தது.
05ம் நாள், 19.09.1987, சனிக்கிழமை கொழும்பு இந்தியத் தூதுவர் அலுவலகத்தில் இருந்து முக்கிய நபர் வரப் போவதாகச் செய்தி கசிந்தது. எவரும் வரவில்லை. கிட்டுவின் தாயார் ராஜலட்சுமி அம்மாள் உண்ணா விரத மேடைக்கு வந்து, திலீபனை அணைத்து வாழ்த்தும் வேளையில், அவரது அழுகை நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அன்று மாலை யாழ்க்கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் ஜெனரல் பாரா, திலீபனைப் பார்க்க வந்தார். பிரிகேடியர் ஃபெர்னான்டோ உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து சிங்களக் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தினார்.
06ம் நாள், 20.09.1987, ஞாயிற்றுக்கிழமை
விடுதலைப் புலிகளின் தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜானி ஆகியோர் வந்து திலீபனின் தலையை வருடி கண்கலங்கினர். அப்போது ‘கிட்டு அண்ணனைப் பார்க்க வேண்டும்’ என திலீபன் சொன்னார். அவர் அப்போது சென்னையில் இருந்தார். அன்று மாலை, ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்காராவும் அவரது கட்சியினரும் வந்து பார்த்துச் சென்றனர்.
யாழ்ப்பாணம் வந்த இந்திய உதவித் தூதுவர் நிருபம் சென், விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளிடம், “உண்ணாவிரதப் போராட்டங்களால் இந்தியாவை நிர்ப் பந்திக்க முடியாது’ என்று எச்சரித்துவிட்டுச் சென்றார்.
07ம் நாள், 21.09.1987, திங்கள்கிழமை
சென்னையிலிருந்து இந்தியா டுடே பத்திரிகையாளர் மற்றும் சென்னைத் தொலைக்காட்சிக் குழுவினர் வந்து படம் பிடித்தனர்.
08ம் நாள், 22.09.1987, செவ்வாய்க்கிழமை
நல்லூர் கோயில் வளாகத்தில் இலட்சக் கணக்கில் மக்கள் கூடினர். வெயிலைத் தாக்குப்பிடிக்க கொட்டகை போடும் வேலை நடந்தது.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல இடங்களில் திலீபனின் உண்ணாவிரதத்தை ஆதரித்து, அடையாள உண்ணாவிரதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மட்டக்களப்பில் வெபர் அரங்கில் மதன் என்ற போராளி உண்ணாவிரதம் இருந்தார். வெபர் அரங்கிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் இருந்து மக்கள் குவிந்தனர்.
இந்திய அமைதிப்படையினர் விடுதலைப் புலிகளைச் சந்தித்தனர். உண்ணாவிரதம் குறித்து எதுவும் பேசவில்லை.
09ம் நாள், 23.09.1987, புதன்கிழமை
இந்திய அமைதிப் படையின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் ஹெலிகாப்டரில் யாழ். பல் கலைக்கழக மைதானம் வந்தார். தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார். இருவரும் தனித்தனி வாகனங்களில் புறப் பட்டு யாழ்க்கோட்டை ராணுவ முகாம் சென்றனர். பேச்சு வார்த்தையில் பலன் எதுவுமில்லை.
தொடர்ந்து அதே நாளில் பிற்பகல் 1.30 மணிக்கு, இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித், தலைவர் பிரபாகரன் சந்திப்பு நடந்தது. பேச்சுவார்த்தையில் தீபிந்தர் சிங், ஹர்கிரத் சிங், பிரிகேடியர் ஃபெர்னாண்டஸ், கேப்டன் குப்தா மற்றும் விடுதலைப் புலிகள் தரப்பில் மாத்தையா, செ.கோடீஸ்வரன் (வழக்கறிஞர்), அன்டன் பாலசிங்கம், சிவானந்த சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் தூதர் உறுதிமொழி மட்டுமே அளித்தார். அதனை செயற்படுத்தவில்லை. உண்ணாவிரதம் நிறுத்தப்படுவது குறித்து ஏதும் பேசவில்லை.
10ம் நாள், 24.09.1987, வியாழக்கிழமை திலீபனின் கை, கால்கள் அசைவின்றி சோர்ந்து கிடந்தன.
சராசரி மனிதனின் அளவுகளைவிட அனைத்து இரத்த ஓட்டங்களும் குறைந்துவிட்டன. இனி, திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நேரலாம் எனக் கவலை அனைவரிடமும் முகத்தில் எதிரொலித்தது.
நோர்வே, சுவீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாட்டுத் தூதுவர்கள் வந்து திலீபனைப் பார்த்துச் சென்றார்கள். அவர்களால் கூட இந்தியாவை நிர்ப்பந்திக்க முடியவில்லை.
11ம் நாள், 25.09.1987, வெள்ளிக்கிழமை கோமாவுக்கு முந்தைய நிலையில் உடல் அங்குமிங்கும் அசைவது போல திலீபனின் உடல் அவரையறியாமலே புரளத் தொடங்கியது.
யாழ். மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்தன. “நிதர்சனம் டிவி’ கடந்த பத்து நாட்களாக உண்ணாவிரதச் செய்தியைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தது. வடகிழக்கு முழுவதும் ஒருவித துக்கம் தோய்ந்த முகத்துடன் மக்கள் காணப்பட்டனர்.
12ம் நாள், 26.09.1987, சனிக்கிழமை
அந்த இறுதி நிமிடம் திலீபனின் உடல்நிலை மோசமாகி விட்டது என்ற செய்தி யாழ்ப்பாணம் முழுவதும் பரவியது. 12 தினங்கள் (மொத்தம் 265 மணித்தியாலங்கள்) திலீபனின் உயிர் அன்று காலை 10.48 மணிக்குப் பிரிந்தது.
தியாக தீபம் திலீபனின் வரலாற்றுச் சிறப்புமிக்க உண்ணாவிரதப் போராட்டத்தின் போது அவரது உடல் நிலையை கண்காணித்து வந்த வைத்தியர் சிவகுமார், அவர் மறைந்த பிறகு அவரது உடலைப் பரிசோதித்து மரணத்தை 1987 செப்டம்பர் 26 அன்று காலை 10.48 மணிக்கு , தியாகி திலீபனுடைய நெஞ்சில் இதயத்துடிப்பு மானியை (ஸ்டெதாஸ்கோப்) வைத்துப் பரிசோதித்து, சுவாசம் மற்றும் இதயத்துடிப்பு நின்றுவிட்டதை உறுதி செய்தார். தியாகி திலீபனின் பாதங்களைத் தொட்டு வணங்கி தனது இறுதி முடிவை கவலை தோய்ந்த முகத்துடன் அறிவித்தார்.
எங்கும் அழுகை… விம்மல்… இலங்கை, இந்தியா எதிர்ப்புக் குரல் எழுந்தது. பிரேதப் பாதுகாப்புக்காக (எம்பார்ம்) யாழ். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட உடல், 1987 செப்டம்பர் 26, பிற்பகல் 4.15 மணி தொடக்கம் 1987 செப்டம்பர் 28, பி.ப. 04 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தலைவர் மேதகுவால் தியாகி திலீபனுக்கு வீரவணக்கம் செலுத்தி, லெப். கேணல் என்ற விருது வழங்கப்பட்டது.
1987 செப்டம்பர் 28 அன்று பி.ப. 4.30 மணியளவில் அவருடைய விருப்பம் தொடர்பாக உத்தியோகபூர்வமாக யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் முறைப்படி புகழ் உடலம் கையளிக்கப்பட்டது.
2009 முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால், அந்த விரகாவியத்தை வீழ்த்தவேண்டுமென்று கங்கணம் கட்டிசெயற்பட்டுவந்த இந்தியக் கைக்கூலி வலது கும்பல், 13ஆம் திருத்தம், அதிகாரப் பகிர்வு, நாடாளமன்றப் பாதை, ஐ.நா வில் நீதி என்று வந்து, இறுதியாக திலீபனையும் ``அகிம்சை வழித் தியாகி`` என்று ஆக்கிவிட்டது.இந்தத் திட்டத்தின் இன்னொரு பகுதிதான் சுதுமலைப் பிரகடனத்தை இருட்டடிப்புச்செய்ததும்.
2010 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் முதலாண்டு நினைவில், ``இடைவழிச் சமரசங்களைத் தோற்கடிப்போம்! ஈழம் காண-இறுதிவரை ஊற்றெடுப்போம்`` என முழங்கினோம்.
இந்தப் 17 ஆண்டுகளில் இடைவழிச் சமரசங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. ஆனால் 17 ஆண்டுகள் இச்சமரசச் சாக்கடையில் மக்களை முக்கி எடுத்ததன் மூலம் போர்க்குணத்தை மழுங்கடித்ததில் கணிசமான வெற்றி அடைந்துள்ளனர்.இதனுடைய விளைவையே நிலத்திலும் புலத்திலும் திலீபன் நினைவேந்தலில், மற்றும் போர் நினைவுகளில் தொடர்ந்து கண்டுவருகின்றோம்.எனினும் இது மிகவும் தற்காலிகமானது.இந்தப் போக்கை புறவய நிலைமைகள் ஒரு போதும் அனுமதிக்காது. திலீபனின் பிள்ளைகளால் இது இலகுவில் முறியடிக்கத்தக்கது.
அனுரா ஆட்சி ஒருபுறம் நல்லிணக்க நாடகமாடிக்கொண்டு மறுபுறம் ஈழதேசிய ஒடுக்குமுறையை தொடர்ந்துவருகின்றது.திலீபன் நினைவேந்தல் இரத்ததான நிகழ்வுக்குக் கூட அனுமதி வழங்காமல், பொலிசை படையை ஏவி காடைத்தனம் புரிந்துள்ளது.
Xi lands in US for state visit, greeted by Trump at airport
By XinhuaPublished: Sep 24, 2026
Chinese President Xi Jinping and his wife Peng Liyuan step out of the airplane cabin upon their arrival at Joint Base Andrews in the United States on Sept. 23, 2026. Xi arrived at Joint Base Andrews on Wednesday afternoon for a state visit to the United States at the invitation of U.S. President Donald Trump. Xi and Peng were warmly greeted by Trump and his wife, Melania Trump, at the airport in a rare planeside welcome. (Xinhua/Liu Bin)
Chinese President Xi Jinping arrived at Joint Base Andrews on Wednesday afternoon for a state visit to the United States at the invitation of U.S. President Donald Trump.
Xi and his wife, Peng Liyuan, were warmly greeted by Trump and his wife, Melania Trump, at the airport in a rare planeside welcome.
American children presented flowers to Xi and Peng. The honor guards lined up on both sides of the red carpet to pay their respects. The welcome ceremony also included a 21-gun salute, the playing of the national anthems of both countries and a military flyover.
In a written speech, Xi extended sincere greetings and best wishes to the U.S. people on behalf of the Chinese people.
China and the United States are both great countries, and the two peoples are both great peoples, Xi said in the speech, adding that the two peoples have maintained friendly exchanges for a long time and their interests are deeply intertwined.
China and the United States should be partners, not rivals, he said, noting that the great rejuvenation of the Chinese nation and making America great again can go hand in hand, and that the two countries can help each other succeed and advance the well-being of the whole world.
Xi noted that he and Trump agreed to build a constructive China-U.S. relationship of strategic stability during Trump's visit to China in May, which has provided strategic guidance for the future development of bilateral ties.
China and the United States should work in the same direction, promote a stable relationship featuring cooperation as the mainstay, moderate competition, manageable differences, and promises of peace, Xi said.
He said China and the United States, as two major countries, should find a right way to get along in the new era.
Xi emphasized that the world is developing and times are changing, but the historical logic of peaceful coexistence between China and the United States has not changed, the goodwill of friendly exchanges between the two peoples has not changed, and the general expectations of the international community for China and the United States have not changed.
Xi said he looks forward to having in-depth exchanges with Trump on major issues concerning bilateral relations and the world situation, constantly enriching the connotation of the constructive China-U.S. relationship of strategic stability, and expanding the space for exchanges and cooperation in various fields between the two countries.
Xi said he also looks forward to engaging extensively with people from all walks of life in the United States to deepen friendship.
With joint efforts, Xi said he believes the visit is sure to be fruitful, and will enhance the well-being of the two peoples and add hope for world peace.
On Xi's way from the airport to his hotel by car, representatives of overseas Chinese and students gathered on both sides of the road, waving the national flags of China and the United States to warmly welcome his visit.
Chinese President Xi Jinping arrives at Joint Base Andrews on Sept. 23, 2026, for a state visit to the United States at the invitation of U.S. President Donald Trump. Xi and his wife, Peng Liyuan, were warmly greeted by Trump and his wife, Melania Trump, at the airport in a rare planeside welcome. (Xinhua/Li Xiang)
U.S. children present flowers to Chinese President Xi Jinping and his wife Peng Liyuan at Joint Base Andrews in the United States, Sept. 23, 2026. Xi arrived at Joint Base Andrews on Wednesday afternoon for a state visit to the United States at the invitation of U.S. President Donald Trump. Xi and Peng were warmly greeted by Trump and his wife, Melania Trump, at the airport in a rare planeside welcome. (Xinhua/Zhai Jianlan)
Chinese President Xi Jinping arrives at Joint Base Andrews on Sept. 23, 2026, for a state visit to the United States at the invitation of U.S. President Donald Trump. Xi and his wife, Peng Liyuan, were warmly greeted by Trump and his wife, Melania Trump, at the airport in a rare planeside welcome. (Xinhua/Liu Bin)
Chinese President Xi Jinping arrives at Joint Base Andrews on Sept. 23, 2026, for a state visit to the United States at the invitation of U.S. President Donald Trump. Xi and his wife, Peng Liyuan, were warmly greeted by Trump and his wife, Melania Trump, at the airport in a rare planeside welcome. (Xinhua/Li Xiang)
Chinese President Xi Jinping arrives at Joint Base Andrews on Sept. 23, 2026, for a state visit to the United States at the invitation of U.S. President Donald Trump. Xi and his wife, Peng Liyuan, were warmly greeted by Trump and his wife, Melania Trump, at the airport in a rare planeside welcome. (Xinhua/Li Xiang)
Chinese President Xi Jinping arrives at Joint Base Andrews on Sept. 23, 2026, for a state visit to the United States at the invitation of U.S. President Donald Trump. Xi and his wife, Peng Liyuan, were warmly greeted by Trump and his wife, Melania Trump, at the airport in a rare planeside welcome. (Xinhua/Li Xiang)
Chinese President Xi Jinping arrives at Joint Base Andrews on Sept. 23, 2026, for a state visit to the United States at the invitation of U.S. President Donald Trump. (Xinhua/Liu Bin)
Chinese President Xi Jinping arrives at Joint Base Andrews on Sept. 23, 2026, for a state visit to the United States at the invitation of U.S. President Donald Trump. (Xinhua/Li Xiang)
Chinese President Xi Jinping arrives at Joint Base Andrews on Sept. 23, 2026, for a state visit to the United States at the invitation of U.S. President Donald Trump. (Xinhua/Zhai Jianlan)
Chinese President Xi Jinping arrives at Joint Base Andrews on Sept. 23, 2026, for a state visit to the United States at the invitation of U.S. President Donald Trump. (Xinhua/Li Xiang)
A gun salute is fired to welcome Chinese President Xi Jinping upon his arrival at Joint Base Andrews for a state visit to the United States at the invitation of U.S. President Donald Trump, Sept. 23, 2026. (Xinhua/Yao Dawei)
Chinese President Xi Jinping is welcomed upon his arrival in the United States on Sept. 23, 2026. Xi arrived at Joint Base Andrews on Wednesday afternoon for a state visit to the United States at the invitation of U.S. President Donald Trump. (Xinhua/Lu Ye)
Chinese President Xi Jinping is welcomed upon his arrival in the United States on Sept. 23, 2026. Xi arrived at Joint Base Andrews on Wednesday afternoon for a state visit to the United States at the invitation of U.S. President Donald Trump. (Xinhua/Lu Ye)