SHARE

Thursday, December 25, 2014

மகிந்தவின் பொலனறுவையில் இராணுவம் குவிப்பு!

பொலனறுவையில் குவிக்கப்படும் இராணுவப் படையணிகள்..!
December 24, 201411:23 am

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிசெய்யும் நோக்கில் கேந்திரமுக்கியஸ்துவம் வாய்ந்த பொலன்னறுவ மாவட்டத்துக்கு மேலதிகமாக ஒன்பது இராணுவப் படையணிகள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ அனுப்பி வைத்திருப்பதாக தேர்தல் ஆணையாளரிடம் முறையிடப்பட்டிருக்கிறது.

ஜனவரி எட்டாம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில் மூன்றாவது தடவையாகப் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவின் சார்பில் மோசடியில் ஈடுபடுவதற்காகவே வட மத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மாவட்டத்தில் புதிதாக ஒன்பது இராணுவப் படையணிகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளன.

எதிரணியின் பொது வேட்பாளராக களமிறங்கும் மைத்திரிபால சிறிசேனவின் சொந்த இடமான பொலன்னறுவை மாவட்டத்திலும், அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் வாக்காளர்கள் பெருமளவில் சென்று அவருக்காக வாக்களிப்பதனையும், நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெறுவதையும் திட்டமிட்டு தடுக்கும் நோக்கிலேயே கோட்டாபய ராஜபக்ஷ இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து கிழக்கு உட்பட ஏனைய மாவட்டங்களுக்கு படைகளை விநியோகங்களை இலகுவாக மேற்கொள்ள முடியும் என்பதாலேயே மேலதிக படையணிகள் இங்கு நிலை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். யார் எங்கு சென்றாலும், எதிர்வரும் தேர்தலில் தானே வெற்றுபெறுவேன் என்றும், ஜனவரி 9 க்குப் பின்னரும் தானே ஜானதிபதியென்று மஹிந்த ராஜபக்ஷ அடிக்கடி தேர்தல் பிரச்சார மேடைகளில் தெரிவித்துவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரியில் சுதந்திரக்கட்சி அலுவலகம் அடித்துடைப்பு!

சாவகச்சேரியில் சுதந்திரக்கட்சி அலுவலகம் அடித்துடைப்பு! 
December 23, 201411:32 pm

 மஹிந்தவின் பிரச்சாரத்திற்கென ஆலய மண்டபத்தை அடாவடியாக பயன்படுத்திய சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர் சர்வாவின் முகத்தில் அறைந்துள்ளனர் அப்பகுதி இளைஞர்கள்.

தென்மராட்சியின் சாவகச்சேரி, கச்சாய் அம்மன் கோயில் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகமே அப்பகுதி இளைஞர்களினால் நேற்று திங்கட்கிழமை இரவோடிரவாக அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மஹிந்தவின் பிறந்த தினத்தின்போது சுதந்திரக்கட்சியினர் ஆலயத்தில் பொங்கல் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர் என்றும், இதனைத் தொடர்ந்து ஆலய மண்டபம் ஒன்றில் பொருட்களை வைத்த அவர்கள் சில தினங்களில் அதை கட்சி அலுவலகமாகவும் மாற்றிக்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்றிரவு குறித்த அலுவலகம் இனந்தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலய நிர்வாகத்தினர் கொடிகாமம் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

“19 ஆளும் கட்சி உறுப்பினர்கள்” மைத்திரி பக்கம்


அனுராதபுர மாவட்ட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவரும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் 18 பேரும் இன்று சற்றுமுன் பொது எதிரணியில் இணைந்து கொண்டனர்.

திம்பிரிகஸ்யாய பொது வேட்பாளர் ஆதரவு கட்சிக் காரியாலயத்தில் தற்போது நடைபெறும் ஊடக மாநாட்டில் பொது வேட்பாளரருக்கு  ஆதரவு வழங்குவது பற்றி அவர்கள் அறிவித்தனர்.

இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு!



இரணைமடுக் குளத்தின் வான் (அணைத் தடைக்) கதவுகள்  திறப்பு! 
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 03:24.28 PM GMT ]

இலங்கையின் மிகப்பெரிய நீர்தேக்கங்களில் ஒன்றாகவும் கிளிநொச்சி மாவட்ட விவாசாய பெருமக்களின் நீர்க்கொடை தாயாகவும் கடந்த வருடங்களில் முக்கிய கலந்துரையாடல் மையப்பொருளாகவும் விளங்கிய இரணைமடு பெருங்குளம் இன்றைய நிலவரத்தின்படி 31 அடிவரை நீர் உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் நாளை காலை குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படும் என கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரலாற்றில் இல்லாத அளவு கொடும் வரட்சியை மக்கள் சந்தித்து மழைக்காக ஏங்கியிருந்தபோது பருவமழை பெய்து இரணைமடுக்குளம் நீண்ட காலத்துக்குபின் இப்பொழுது தற்போது வான்கதவுகள் திறக்கும் நிலையை எட்டியுள்ளது.

நாளை வான்கதவுகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் இன்று பா.உறுப்பினர் சி.சிறீதரன் அங்கு நேரடியாக சென்று குளத்தின் நீர்பேணல் நிலைமைகள் அணைகளின் நிலைமைகளை அங்கு இரவுபகல் பணியில் இருந்து கொண்டிருக்கும் கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

நூற்றாண்டு பெருமைவாய்ந்த அணைகளை கொண்டுள்ள இரணைமடுக் குளத்தில் அணைகளில் சில பகுதிகளில் நீர் கசிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் அதை பொறியியலாளர்கள் சீர்செய்து அவதானித்து வருகின்றார்கள்.

அணையின் நிலைமைகள் மற்றும் வான்பாயும் பகுதிகளில் காணப்படும் பல்லாயிரம் ஏக்கர் நெற்பயிர்களைகளை கருத்திற்கொண்டு இரணைமடுவின் நீர்மட்டம் கடந்த காலங்களில் ஒரு சீராக பேணுப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

பா.உறுப்பினர் சி.சிறீதரனுடன் கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் முக்கியஸ்தர் சிவமோகன், பா.உறுப்பினரின் செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உப தலைவருமான பொன்.காந்தன், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் செயலாளர் கு.சர்வானந்தா, இளைஞர் அணி உறுப்பினர் அஜந்தன் ஆகியோரும் சென்றிருந்ததுடன் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரனும் அங்கு பிரசன்னமாயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கஜேந்திரகுமார் :ஜனாதிபதித் தேர்தலில் ``ஒதுங்கி நிற்கக்`` கோரிக்கை


நன்றி:பதிவு.கொம்

மகிந்த-மைத்திரி கும்பலுக்கு, ``இடது சாரிகள்`` மாற்றீடல்ல!


Watch The Interview 2014 Full Movie!



Published on 25 Dec 2014
▶ Watch The Interview 2014 Full Movie! ✪
Go To : http://moviehdcomplete.com/play.php?m...
Download : http://download.moviehdcomplete.com/p...

Instructions to Download Full Movie:
1. Click the link;
2. Create your free account;
3.Need credit card details to create an account, but will not be a charge;
4.And you will be redirected to your movie! Enjoy Your Free Full HD Movies!!


சமரன்: `தாய் சேய் மரணம்`- வந்தவாசியில் கழகப் பொதுக்கூட்டம்

"சயனைட்" நாவல் - ஒரு பார்வை

  "சயனைட்" நாவல் - ஒரு பார்வை "தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்! நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள், எம் இனத்த...