SHARE

Tuesday, November 04, 2014

இது ஒரு புதினமாம் தோழி. சு.பி.வழங்குமாம் காணி!

அரசாங்கம் மறுத்தால் மலையக உறவுகளுக்கு வடக்கு - கிழக்கில் காணிகளை வழங்கத்தயார் :சுரேஷ் எம்.பி.
Submitted by MD.Lucias on Mon, 11/03/2014 - 09:59

கொஸ்­லந்­தையில் மண் சரிவு அனர்த்­தத்தில் எமது மலை­யக உற­வுகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். தொடர்ந்தும் 10ஆயி­ரத்­திற்கும் அதி­க­மானோர் அபா­யத்­தினை எதிர்­நோக்­கிய வண்­ண­முள்­ளனர். இவ்­வா­றான நிலையில் அம்­மக்­க­ளுக்கு பாது­காப்­பான இடங்­களில் வீடு­களை அமைத்­துக்­கொள்­வ­தற்­காக அர­சாங்கம் காணி­களை வழங்க மறுத்தால் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் காணி­களை வழங்க நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம் என்று தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

மீரி­ய­பெத்­த­வுக்கு நேற்று விஜயம் செய்­தி­ருந்த தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பினர் மண்ச­ரிவு அனர்த்தம் இடம்­பெற்ற பிர­தே­சத்தின் நிலை­மை­களை நேர­டி­யாகப் பார்­வை­யிட்­ட­துடன் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்­பாக தமது அனு­தா­பங்­களை தெரி­வித்­த­துடன் முகாம்­களில் உள்ள மக்­க­ளி­டத்தில் நீண்­ட­நே­ர­மாக கலந்­து­ரை­யா­டி­ருந்­தது. இதன்­போதே அம்­மக்­க­ளி­டத்தில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு மேற்­கண்ட­வாறு தெரி­வித்­தது.

அர­சாங்கம் மலை­ய­கத்தில் மண் சரிவு அபாயம் உள்­ள­தாக பல இடங்­களை குறிப்­பிட்டுக் கூறி­யுள்­ளது. இவர்­களை உரிய இடங்­களில் இருந்
தும் வெளி­யேற்றும் முயற்­சி­களும் இடம்­பெற்று வரு­கின்­றன. இது போன்றே கொஸ்­லந்தை பகு­தி­யிலும் மண் சரிவு அபா­யத்­தினை காரணம் காட்டி பாட­சா­லை­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

மண்­ச­ரிவு தொடர்­பான அச்சம் கார­ண­மாக இத்­த­கைய பல குடும்­பங்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ள­மையை காண முடி­கின்­றது. எனினும் இத்­த­கை­யோர்­க­ளுக்கு புதி­தாக வீட­மைத்துக் கொள்ளும் பொருட்டு அர­சாங்கம் உரிய காணி­களை வழங்­கு­வதில் பின்­ன­டிப்­பையே செய்து வரு­கின்­றது. காணிகள் வழங்­கப்­ப­டு­மி­டத்து வீட­மைப்­பிற்­கென இந்­தியா, அமெ­ரிக்கா உள்­ளிட்ட பல நாடு­களும் இன்னும் பல தொண்டர் நிறு­வ­னங்­களும் ஒத்­து­ழைப்பும் உத­வியும் வழங்கும் என்­பதே உண்மை.

மண்­ச­ரி­வினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் பாதிப்­பினை எதிர்­நோக்­கி­யுள்­ள­வர்­க­ளுக்கும் அரசு காணி­களை வழங்க மறுக்­கு­மி­டத்து வடக்கு கிழக்கில் நாம் காணி­களை பெற்­றுக்­கொ­டுக்க தயா­ராக உள்ளோம். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பாது­காப்­பான இடங்­களில் காணிகள் வழங்­கப்­பட வேண்டும். பல்­வேறு அமைப்­புக்­க­ளுடன் கலந்து பேசி வீடுகளை அமைத்துக் கொடுக்கவும் நாம் தயாராகவே உள்ளோம். நாங்கள் யுத்தத்தினால் பல பாதிப்புக்களை எதிர்கொண்டு பல இழப்புக்களையும் சந்தித்திருக்கின்றோம். இழப்புகளின் வலி எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, இயன்ற உதவிகளை நாம் செய்வோம்.

No comments:

Post a Comment

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...