Tuesday, 4 November 2014

மண்சரிவு அனர்த்தத்தை வைத்து அரசியல் இலாபம் தேட த.தே.கூ. முயற்சி:

மண்சரிவு அனர்த்தத்தை வைத்து அரசியல் இலாபம் தேட த.தே.கூ. முயற்சி: 
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

 Mon, 11/03/2014 - 16:32
கொஸ்­லந்­தையில் மண் சரிவு  கொஸ்­லந்­தையில் மண் சரிவு அனர்த்­தத்தில்   பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கும் பாது­காப்­பான இடங்­களில் வீடு­களை அமைத்­துக்­கொள்­வ­தற்­காக அர­சாங்கம் காணி­களை வழங்க மறுத்தால் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் காணி­களை வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயா­ராக இருக்­கின்றது என தெரிவித்துள்ளமையானது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்துள்ள இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர  இதன் மூலம் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மீரி­ய­பெத்­த­வுக்கு நேற்று விஜயம் செய்­தி­ருந்த தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பினர் மண்ச­ரிவு அனர்த்தம் இடம்­பெற்ற பிர­தே­சத்தின் நிலை­மை­களை நேர­டி­யாகப் பார்­வை­யிட்­ட­துடன் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு காணிகளை வழங்க போவதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தனர். இது உண்மையில் வேடிக்கையான விடயமாகும்.

யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட பல சிறுவர்கள் இன்னும் வடக்கில் அனாதரவாக இருக்கின்றனர். மேலும் அங்குள்ள மக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். ஆனால் இவற்றையெல்லாம் விடுத்து அரசியல் இலாபம் தேடுதவற்காக தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கொஸ்லந்த மீரி­ய­பெத்­த பகுதியில், அனர்த்தங்களின் போது மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக விசேட பயிற்சிகள் வழங்கப்பட்ட இராணுவத்தினர் இன்னும் மீட்பு பணியில் உள்ளனர். இதுவரை எட்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மண்சரிவு அனர்த்தத்தினால் 63 வீடுகளும், 6 லயன்களும், 3 தனிவீடுகளும், இரு கடைகளும் மற்றும் கோயில் ஒன்றுமே மண்ணுக்குள் புதையுண்டுள்ளன.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதோடு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் குறித்த மக்களுக்கு உடனடியாக வீடுகளை கட்டிகொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.

மேலும் மலையகத்தில் தற்போது மண்சரிவு அபாயம் காரணமாக 7ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை தற்போது இடம்பெற்றுள்ள இந்த மண்சரிவு அனர்த்தத்தை காரணமாக வைத்து உலக நாடுகளிடம் கடன் உதவிகளை வாங்குவது சரியான விடயம் அல்ல என கூறிய ஜனாதிபதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு  வீடுகளை தாமே அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
==================


No comments:

Post a Comment