SHARE

Tuesday, April 15, 2014

அதிமுகவுக்கு சீமான் பிரச்சாரம் செய்வதை எதிர்த்து தஞ்சையில் நாம் தமிழர் கட்சி கலைப்பு!

அதிமுகவுக்கு சீமான் பிரச்சாரம் செய்வதை எதிர்த்து தஞ்சையில் நாம் தமிழர் கட்சி கலைப்பு!

MONDAY, 14 APRIL 2014 12:55 E-mail

தஞ்சை: சீமான் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதை எதிர்த்து தஞ்சையில் நாம் தமிழர் கட்சி கலைக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கு நாம் தமிழர் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்த அவசரக் கூட்டம் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பாப்பாநாடு காமராஜர் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பழ. சக்திவேல் கூறுகையில், திராவிட கட்சிகளை அழித்துவிட்டு 2016ம் ஆண்டில் ஒரு தமிழனை ஆட்சிக்கு கொண்டு வருவோம் என்று தெரிவித்துவிட்டு தற்போது சீமான் திராவிட கட்சிக்கு வாக்கு சேகரிப்பது கேள்விக்குறியாகவும், பிறர் நகைக்கும்படியும் உள்ளது.

ஒரே நேரத்தில் 40 தொகுதிகளிலும் 40 நிலைப்பாடுகள் என்பது தமிழக மக்கள் மற்றும் அவரை நம்பி வந்த இளைஞர்கள் ஆகியோரை ஏமாற்றுவதாக உள்ளது. அவரின் நிலைப்பாட்டில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதனால் தஞ்சை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் அனைவரும் கட்சியில் இருந்து விலகுகிறோம். மேலும் மாவட்ட கட்சியும் கலைக்கப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...