SHARE

Tuesday, April 15, 2014

யாழில் விவசாயிகள் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த முடியாது திண்டாட்டம்!!

யாழில் விவசாயிகள் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த முடியாது திண்டாட்டம்!!

யாழ் மாவட்ட விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த முடியாமல் திண்டாடும் நிலமை தொடர் கதையாகவே காணப்படுகின்றது. இந்த வகையில் சுன்னாகம் பகுதியில் தக்காளிச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் தமது உற்பத்திப் பொருளான தக்காளிப் பழத்தை சந்தைப்படுத்த முடியாத நிலையில் அதனை மாட்டுக்கு தீவனமாக தோட்டத்தில் கொட்டிவிட்டு செல்கின்றனர்.

இதேவேளை உடுவில் பிரதேச விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களான பழவகைகளை கொள்வனவு செய்து அதனை சந்தைப்படுத்தி ஜாம் மற்றும் கோடியல் ஜீஸ் போன்ற உற்பத்திகளை மேற் கொள்ளும் வகையில் பல லட்சம் ரூபா செலவில் உடுவில் பகுதியில் தொழிற் சாலையை ஜக்கிய நாடுகளுக்கான அபிவிருத்தி நிறுவனம் அமைத்துக்கொடுத்துள்ள போதிலும் இந்த விவசாயிகளின் சந்தைப்படுத்த முடியாத பழவகைகளை கொள்வனவு செய்வதில் உரிய நிறுவனம் அக்கறை எடுப்பதில்லையெனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றார்கள்.

No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...