SHARE

Monday, July 09, 2012

அரசாங்கம் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே நாம் கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக இரா.சம்பந்தன் தலைமையில் ஆராய்வு
[ ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 09:31 GMT ]

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நேற்று மாலை கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் துரைரட்ணசிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் வேட்பாளர்களைத் தெரிவு
செய்வது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், “கிழக்கு மாகாணசபைக்கு நடக்கப் போகும் தேர்தல் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தத் தேர்தலில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெறுமானால், அதனைக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களின் ஆதரவு இல்லை
என்று அனைத்துலக அளவில் பாரிய பரப்புரைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெறக் கூடாது. சிறிலங்காவின் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் எந்தத் தமிழரும் இந்தத் தேர்தலில் வெற்றிபெறக் கூடாது.

இதற்குத் தமிழ் மக்கள் எவரும் அனுமதிக்கக் கூடாது.

சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே நாம் இந்தத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஒரு இணக்கப்பாடு வருவதை நாம் விரும்புகின்றோம். இது
தொடர்பாக ரவூப் ஹக்கீமுடன் பேசியுள்ளோம்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
============

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும்.
Posted by sankathinews on July 6th, 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்
அங்கம் வகிக்கின்ற 5 கட்சிகளிடையேயும் புரிந்துணர்வு உடன்படிக்கை விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமசந்திரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான இறுதி முடிவுகளை எடுப்பதற்காக நேற்று கூட்டமைப்பின் 6 பேர் கொண்ட குழு
கொழும்பிலுள்ள கூட்டமைப்பின் அலுவலகத்தில் பேச்சு நடத்தியது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராஜா,
சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடல் தொடர்பாக சுரேஷ் பிரேமசந்திரன் மேலும் தெரிவித்ததாவது:

நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்ட போதிலும் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற 5 கட்சிகள் இடையிலே இணக்கப்பாட்டை எட்டுவதற்காக புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று
தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் எமது செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படும்.இன்றும் மேற்படி குழு 6 பேரும் சந்தித்துக் கலந்துரையாடும் என்றார்.

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...