Monday, 9 July 2012

அரசியல் கைதிகள் பிரச்சினை தொடர்பில் சர்வதேச சமூக பிரதிநிதிகள் அரசுக்கு அழுத்தம் வழங்க வேண்டும்: மனோகணேசன்

நிமலரூபன் மரணத்தை அடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை அடிப்படையாக கொண்டு கொழும்பு, நீர்கொழும்பு, மஹர,
யாழ்ப்பாணம், அனுராதபுரம், கண்டி, களுத்துறை ஆகிய அனைத்து சிறைசாலைகளிலும் பூசா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நாம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு சமாந்திரமாக, இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காணுமாறு
அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குக என மக்கள் கண்காணிப்பு குழு அழைப்பாளரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன், இலங்கையிலுள்ள அனைத்து சர்வதேச சமூக பிரதிநிதிகளுக்கும் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார்.



சர்வதேச சமூக பிரதிநிதிகளுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் தொடர்பில் மக்கள் கண்காணிப்பு குழு விடுத்துள்ள ஊடக செய்தி குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...

மக்கள் கண்காணிப்பு குழுவின் அவசர வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு மிக குறைந்த கால அவகாசத்தில் கடந்த 5ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற
நமது கலந்துரையாடலில் கலந்துகொண்டமைக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கொல்லப்பட்டுள்ள நிமலரூபன் தொடர்பில் நாம் ஏற்கனவே மூன்று முக்கிய கோரிக்கைகளை அரசிடம் முன் வைத்துள்ளோம். அது தொடர்பில்
உங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 * வவுனியாவிலிருந்து முதலில் அனுரதபுரத்திற்கும் பின்னர் மஹர, கண்டி சிறைச்சாலைகளுக்கும் கொண்டு வரப்பட்டுள்ள கைதிகள் அனைவரும்,
உடனடியாக கொழும்புக்கு கொண்டு வரப்பட வேண்டும். அவர்கள் எக்காரணம் கொண்டும் மீண்டும் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்படக்கூடாது.

* வவுனியா சிறையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட அனைத்து கைதிகளும், பக்க சார்பற்ற முறையில் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அவர்கள் தொடர்பிலான மருத்துவ அறிக்கைகள் அவர்களது குடும்பத்தவர்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படவேண்டும்.

* அனைத்து கைதிகளையும் அவர்களது பெற்றோர்களும், வழக்குரைஞர்களும் சந்திப்பதற்கு முழுமையான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.

* சிறைகூடங்களிலும், தடுப்பு முகாமிலும் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் தற்போது பல்லாண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளனர் என்ற உண்மையை கருத்தில் கொண்டு அவர்கள் அனைவருக்கும் உடனடியாக பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும்.

No comments:

Post a Comment