SHARE

Monday, July 09, 2012

மன்னார் கடற்பரப்பினுள் இந்திய ரோலர் படகு மீனவர்களின் அத்துமீறும் செயற்பாடு அதிகரிப்பு

பல வருடங்களுக்கு மேலாக மன்னார் கடற்பிராந்தியத்தினுள் அத்துமீறி நுழைந்து அடாத்தாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இந்திய
ரோலர் மீன்பிடி தொழிலாளர்களின் குறித்த செயற்பாடுகளினால் மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து
வருவதோடு ஆழ்ந்த கவலையடைந்துள்ளனர்.

கடந்த யுத்த காலத்தில் இருந்து தற்போது வரை இந்திய ரோலர் படகு மீனவர்கள் மன்னார் கடற்பிராந்தியத்தினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததோடு மீனவர்களின் பெறுமதி வாய்ந்த மீன்பிடி உபகரணங்களையும் சேதப்படுத்தி விட்டுச் செல்லுகின்றனர்.


குறித்த பிரச்சினை தற்போதும் தொடர்ந்து கொண்டு செல்கின்றது.யுத்
தம் முடிவுற்ற நிலையிலும் இந்திய ரோலர் படகுகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசாங்கம் காணப்படுவதாக மன்னார் மாவட்ட மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அன்று முதல் இன்று வரை இந்திய ரோலர் மீனவர்களின் அத்து மீறும் செயற்பாட்டை கட்டுப்படுத்துமாறு கோரி மன்னார் மாவட்ட மீனவர்கள் பல
தரப்பினரிடமும் பல்வேறு முறைப்பாடுகளை முன்வைத்தனர்.
பல்வேறு பேச்சுவார்த்தை இடம் பெற்றும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.தொடர்ந்தும் மன்னார் மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவதோடு பல இலட்சம் ரூபா நஷ்டத்தையும் எதிர் நோக்கி வருகின்றனர். மீன் பிடி தொழிலாளர்கள் பலர் தமது தொழிலை முடக்குவதற்கும் தீர்மானித்துள்ளனர்.

இந்திய மீனவர்கள் கச்சதீவு கடற்படப்பில் தொழில் செய்வதாகக் கூறிக்கொண்டு மன்னார் கடற்பிராந்தியத்தினுள் அத்து மீறி நுழைந்து மீன்
பிடிக்கின்றனர்.

கடந்த 4 ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் சுமார் பல ஆயிரக்கணக்கான இந்திய ரோலர் படகுகள் மன்னார் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில்
ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி:தினக்குரல்
 

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...