Saturday, 19 November 2011

பெரும் நெருக்கடியில் இந்திய மஞ்சள் விவசாயிகள்



பெரும் நெருக்கடியில் இந்திய மஞ்சள் விவசாயிகள்


கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 நவம்பர், 2011 - 17:40 ஜிஎம்டி  Facebook Twitter பகிர்கநண்பருக்கு அனுப்ப பக்கத்தை அச்சிடுக

மஞ்சள் உற்பத்தியில் ஈடுபடும் பெண்கள்

இந்தியாவில் மஞ்சளின் விற்பனை விலை பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளதால் சுமார் 15 லட்சம் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்று இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உலகளவில் அதிகப்படியாக மஞ்சள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழும் நிலையில், அதற்கான அடிப்படை ஆதார விலை அரசால் நிர்ணயம் செய்யப்படவில்லை என்பதை தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார், அந்தச் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரான பி.கே. தெய்வசிகாமணி.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மஞ்சளின் விற்பனை விலை 60 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது, பல பருத்தி விவசாயிகள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு தற்கொலை செய்து கொண்டது போன்ற ஒரு நிலை மஞ்சள் விவசாயிகளுக்கு ஏற்பட்டுவிடக் கூடும் கூடும் என்று தாங்கள் கவலைப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

மஞ்சள் வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரிகள் தமக்குள் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், விலையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் தெய்வசிகாமணி குற்றஞ்சாட்டுகிறார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின்படி, இந்தியாவில் விவசாய பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும், அதுவும் மஞ்சள் சாகுபடி செய்யும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஒரு காரணம் எனவும் அவர் கூறுகிறார்.

இந்தியாவில் எந்த விவசாயும் தனது விளைபொருளுக்கான விலையை நிர்ணயம் செய்யும் நிலை இல்லை என்றும், வர்த்தகர்களே அதை முடிவு செய்வது அனைத்து விவசாயிகளையும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாக்கி வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

உலக மஞ்சள் உற்பத்தியில் சுமார் 78 சதவீதம் இந்தியாவில் செய்யப்படும் நிலையில், 7 சதவீதம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது எனவும், மஞ்சளின் ஏற்றுமதையை ஊக்குவிக்க அரசு முயற்சிகள் செய்யவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

No comments:

Post a Comment