இலங்கையின் தமிழ்த் தேசிய இன முரண்பாட்டை `அமைதி வழியில் தீர்க்க` முயல்வாதாகக் கூறி நோர்வே தலையிட்டு பாலசிங்கம் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் முடிந்தது.இதனால் சர்வதேச அரங்கத்தில் நோர்வேயின் சமாதான முகம் மீண்டும் ஒரு தடவை கிழிந்து போனதால் கிலிகொண்டு இது குறித்த ஆய்வு ஒன்றை முன்வைக்குமாறு வெளிவிகாரத் திணைக்களம் கல்விமான்களையும், ஆராய்சியாளர்களையும் வேண்டியது.இதன் விளைவாக அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவினரால் தயாரிக்கப்பட்ட, சுமார் 200 பக்கங்களுக்கு மேற்பட்ட ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின் நான்காம்,ஐந்தாம்,ஆறாம் அத்தியாயங்கள் அடங்கிய சுமார் 60 பக்கங்கள் மிகுந்த முக்கியத்துவமுடையவை ஆகும். இப்பகுதிகளில் காலவரிசைப்படி இக்கதை நடந்தேறிய வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது. திரைமறைவில் நடந்தேறிய பல சம்பவங்கள், பங்கு கொண்ட சக்திகள், நபர்கள், பரிமாறப்பட்ட கருத்துக்கள் என எண்ணற்ற விபரங்கள் முதல் தடவையாக, பகிரங்கமாக, துணுக்குத் தவல்கள், மற்றும் உளவுக் கிசுகிசுக்கள் போன்றல்லாமல் -பேச்சுவார்த்தைக் காலம் முழுவதும் தழுவிய ஒரு தொகுப்பாக முன் வைக்கப்பட்டுள்ளது.முப்பது ஆண்டுகால நமது வீர காவியம் முள்ளிவாய்க்காலில் எவ்வாறு வீழ்த்தப்பட்டது என விளக்கி நாம் வெளியிட்டு வந்த அரசியல் பிரச்சார இலக்கியங்களில் உள்ள பல அனுமானங்களுக்கு இவை ஆதாரங்களை வழங்கியுள்ளன.அதற்கு மேலும் பல வெளிச்சங்களைப் பாய்ச்சியுள்ளன!
இதன்பொருட்டு இந்த மூன்று அத்தியாயங்களையும் மூன்று தனித்தனியான பகுதிகளாக மறுபிரசுரம் செய்கின்றோம்.
நன்றி: Pawns of Peace – Evaluation of Norwegian peace efforts in Sri Lanka, 1997-2009 ஆய்வுக் குழுவினர்.
chapter 4. First Explorations, a Ceasefire and Peace Talk
(1990s–2003)
http://tenn1917.blogspot.com/2011/11/1.html
நோர்வே அறிக்கை- அகசுயநிர்ணய உரிமைக்கு அடமானம் போன அரசியல் சுதந்திரம் பாகம்-2
chapter 5. Fragmentation and Crisis
(2003-2006)
http://tenn1917.blogspot.com/2011/11/2.html
நோர்வே அறிக்கை- அகசுயநிர்ணய உரிமைக்கு அடமானம் போன அரசியல் சுதந்திரம் பாகம்-3
chapter 6. War, Victory and Humanitarian Disaster
(2006-2009)
http://tenn1917.blogspot.com/2011/11/3.html
அடுத்துவரும் அலை அனைவருக்கும் பதில் சொல்லும்! அதுவரைக்கும் பொறுத்திருங்கள்!!
No comments:
Post a Comment