SHARE

Monday, January 18, 2010

கே.பி கப்பல் காட்டிய தமிழன்

கே.பி. வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கூறினால் 4ஆம் மாடிக்கு செல்ல வேண்டும் ‐ ஹக்கீம்
30 December 09 11:09 am (BST)
தடுப்புக் காவலிலுள்ள கே.பி. மூன்று தடவைகள் இலங்கை அரசாங்கத்தால் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவர் அழைத்துச் செல்லப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டால் தான் நான்காம் மாடிக்கு செல்லநேரிடும் அதனால் அதனை தவிர்த்துக் கொள்வதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக கல்முனையில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட பின்னர் ஊடகவியலாளரகளைச்; சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட கே.பி. கொழும்பில் முன்னாள் அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க மற்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் தங்கிய அமைச்சர்கள் வாசஸ்தலத்திலேயே தங்கவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். முக்கிய சந்திப்புக்களுக்காக கொழும்பிலுள்ள பிரபல விடுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் மீண்டும் அந்த வீட்டிற்கே கூட்டிச் செல்லப்படுகிறார்.

மூன்று தடவைகள் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். விடுதலைப்புலிகளின் கப்பல்களை அவரிடமிருந்து வாங்குவதற்கு சகல நடவடிக்கைகளும் அரச தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை பற்றி மேலதிக தகவல்களை வெளியிட்டால் நாலாம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்படும் ஆபத்து இருப்பதால் அவற்றை தவிர்ப்பதாக கூறினார்.

பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பது என முஸ்லிம் காங்கிரஸ் ஒரே இரவில் முடிவு எடுத்துவிடவில்லை. பல விடயங்களை பரிசீலித்து சர்வதேச மற்றும் ஏனைய சக்திகளின் இலங்கை தொடர்பான நிலைப்பாடுகளை விரிவாக பரிசீலித்து சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு சரியான முடிவு எது என்று ஆராய்ந்த பின்பே முடிவு அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

ஆனந்தபுர வழக்கு

ஆனந்தபுர வழக்கு 16 ஆம் ஆண்டு நினைவு ( மறு பிரசுரம்; முதல் வெளியீடு Monday, 4 April 2016, இரண்டாம் வெளியீடு 04-04-2025) முதல் ஈழ  யுத்தம்[197...