SHARE

Monday, January 18, 2010

சம்பந்தன்-சுரேஸ் கும்பலின் சதியை முறியடிப்போம்!

அமிர்தலிங்கம் அரங்கம்
சம்பந்தன்-சுரேஸ் கும்பலின் சதியை முறியடிப்போம்!
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியைப்பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புரட்சியை சமரச வழியில் சீரழிக்கும் சம்பந்தன்-சுரேஷ் கும்பலின் சதியை முறியடிப்போம்!
பிரிவினைக் கோரிக்கையை உயர்த்திப்பிடிப்போம்! மக்கள் ஜனநாயக தமிழீழக் குடியரசமைக்க புதிய ஜனநாயகப் புரட்சிப்பாதையில் தொடர்ந்து போராடுவோம்!!
===================================================================

* தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு, ''பிரிக்கப்படாத இலங்கைக்குள் அடையப்படவேண்டும்'' என்பதே நமது நிலைப்பாடு- TNA -சம்பந்தன்

* இந்தியாவின் நிலைப்பாட்டில் இப்போது மாற்றம் தெரிகின்றது- சம்பந்தன்

* தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியாவுக்கு இப்போதுள்ள விருப்பம் தமிழ்க் கூட்டமைப்புக்கு தெரிவிப்பு- நிருபமா ராவ்

* தேர்தலின் பின்னர் மீண்டும் இந்தியா சென்று முக்கியமாக அரசியல் தீர்வு விடயம் குறித்து இந்திய உயர்மட்டத்துடன் பேச்சுநடத்தவுள்ளோம்- மாவை சேனாதிராஜா
===================================================================
இந்தியாவின் நிலைப்பாட்டில் இப்போது மாற்றம் தெரிகின்றது - சம்பந்த ஐயா சொல்கின்றார்!
திகதி: 11.01.2010 // தமிழீழம்
இந்தியாவின் நிலைப்பாட்டில் தற்போது மாற்றத்தைக் காண்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்ற கருத்து இந்தியாவில் வளர்ந்து வருவதை அவதானிக்கிறோம் என சம்பந்தன் நேற்று யாழில் கூறியுள்ளார்.

இந்தியாதான் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு, அவர்களுக்கு நல்லதொரு அரசியல் தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க உதவவேண்டும் என்று எமது மக்கள் சார்பாக இந்தியாவிடம் பகிரங்கமாகக் கேட்டுக்கொள்கிறேன் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இன்னும் ஓரிரு தினங்களில் புதுடில்லிக்கு எனது நண்பர்கள் சிலருடன் சென்று தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு
தொடர்பாகப் பேச்சு நடத்தவுள்ளேன் எனத் தொவிவித்துள்ளார். ஆனால் தான் என்ன தீர்வு பற்றி பேசபோகின்றேன் என மக்களிடம் கூறவில்லை.

நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டில் சிறப்புரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

சர்வதேசப் பங்களிப்பு குறித்து இங்கு கருத்துக்கூறுவது பொருத்தம் எனக் கருதுகின்றேன். 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின் இனப்படுகொலை நடைபெற்றபின் சர்வதேச சமூகம் எமது விடயத்தில் மிகவும் அக்கறை காட்ட ஆரம்பித்தது. இந்தியா கூடுதல் பங்களிப்புச் செய்தது. துரதிர்ஷ்டவசமாக ஒரு காலகட்டத்தில் பல சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர் இடம்பெற்ற விடயங்கள் குறித்துப் பேச வேண்டிய அவசியமில்லை. இந்தியா ஒதுங்கிவிட்டது.

அவர்கள் ஒதுங்கியதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஏனைய நாடுகளைப் பொறுத்தமட்டில் ஓரளவு அக்கறை காட்டி வந்தார்கள். அவர்களின் பங்களிப்பு பரிபூரணமானதாக இருந்ததாகக் கூறமுடியாது. பல நாடுகளின் நிலைப்பாடு, இந்தியா என்ன செய்கின்றதோ அதன் பின்னால் நிற்போம் என்பதாகும். பல நாடுகளின் ராஜதந்திரிகள், வெளிநாட்டுத் தலைவர்கள் இங்கு வரும்போது அவர்கள் கூறுவது என்னவென்றால் இந்தியா பங்கெடுக்க வேண்டும்; நாங்கள் உதவியாக இருப்போம் என்பதாகும்.

இதை இந்தியாவிற்கு நாங்கள் பலதடவைகள் எடுத்துக்கூறி வந்துள்ளோம். தற்போது இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றத்தைக்காண்கிறோம். தமிழர் பிரச்சினை தொடர்பாக தங்களின்

பங்களிப்பைச் செய்து நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்து அவர்கள் மத்தியில் வளர்ந்து வருவதை அவதானிக்கின்றோம். நானும் எனது நண்பர்கள் சிலரும் எதிர்வரும் இரண்டு மூன்று நாள்களுக்குள் புதுடில்லிக்குச் செல்லவிருக்கின்றோம்.

எமது மக்கள் சார்பாக இந்தியாவுக்கு ஒரு விநயமான வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றோம். தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள். எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்குஅவர்களுக்கு நல்லதொரு அரசியல்தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க உதவுங்கள் என்று எமது மக்கள் சார்பாக பகிரங்கமாகக் கேட்டுக் கொள்ளவிரும்புகின்றேன் என்றார்
==================
தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியாவுக்கு இப்போதுள்ள விருப்பத்தை தமிழ்க் கூட்டமைப்புக்கு தெரியப்படுத்தினார் நிருபமா ராவ்

இலங்கையின் அரசியல் காட்சியரங்கிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேறியுள்ள நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் பாரியளவிலான பங்களிப்பை வழங்க இந்தியா திட்டமிடுகிறது.

அண்மையில் புதுடில்லிக்குச் சென்று திரும்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தூதுக்குழுவுக்கு இந்த விடயம் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான காலகட்டத்தில் இலங்கையில் மாற்றமடைந்துவரும் அரசியல் நிலைவரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தெரிவிப்பதற்காகத் தங்களுக்கு புதுடில்லி அழைப்பு விடுத்திருந்ததாக யாழ்.மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். அதேவேளை, தமிழ்க் கூட்டமைப்பிடமிருந்து ராஜபக்ஷவுக்கு ஆதரவைப் பெறுவதற்கு புதுடில்லி முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுவதை சுரேஷ் பிரேமச்சந்திரன் மறுத்துள்ளார்.

யுத்தத்தால் அகதிகளாக்கப்பட்டோரின் நெருக்கடிகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகளவுக்கு ராஜபக்ஷவின் நிர்வாகம் செய்திருக்கவில்லையென்றும் அவர்களின் வாழ்விடங்களில் அவர்களை மீளக்குடியேற்றுவது தொடர்பாகவும் போதிய நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு புதுடில்லிக்குச் சுட்டிக்காட்டியுள்ளது. அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றிவிட மறுத்துவிட்டிருப்பதாகவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தமிழ் பேசும் மாகாணமாக்குவதற்கு
டில்லிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கிழக்கில் அரச அனுசரணையுடனான சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதையும் தமிழர்களுக்கு அதிகாரத்தைப்

பகிர்ந்தளிக்கும் விடயங்களை ஆராயும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் பணிகள் முடக்கப்பட்டிருப்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதுடில்லிக்குத் தெரிவித்திருக்கிறது..
==================
தேர்தலின் பின்னர் மீண்டும் இந்தியா சென்று உயர்மட்ட தலைவர்களை சந்திக்கவுள்ளோம் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவிப்பு

வீரகேசரி நாளேடு 1/18/2010 8:39:22 AM - எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இம்மாத இறுதியில் மீண்டும் இந்தியாவுக்கு விஜயம் செய்து உயர்மட்ட தலைவர்களை சந்திக்க எதிர்பார்க்கின்றோம். இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. முக்கியமாக அரசியல் தீர்வு விடயம் குறித்து இந்திய உயர்மட்டத்துடன் பேச்சுநடத்தவுள்ளோம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வீரகேசரி நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மாவை சேனாதிராஜா எம்.பி. இது தொடர்பில் மேலும் கூறியதாவது

கடந்தவாரம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுக்கு விஜயம் செய்து அந்நாட்டின் உயரதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்தியது. முக்கியமாக இந்திய வெளியுறவு செயலாளரை சந்தித்து பேசினோம். அதாவது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் இந்திய உயரதிகாரிகளுக்கு எடுத்துக்கூறினோம்.

நாம் கூறிய விடயங்களை ஆர்வமாகவும் அக்கறையுடனும் செவிமடுத்த இந்திய தரப்பினர் அவற்றை உள்வாங்கிக்கொண்டனர். மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர்ந்து செயற்படத் தயார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதேவேளை மோசமான காலநிலை காரணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க முடியவில்லை. நாங்கள் சென்ற விமானம்

மோசமான காலநிலை காரணமாக மீண்டும் சென்னை திரும்பிவிட்டது. அதற்கிடையில் இந்திய வெளியுறவு அமைச்சர் வெளிநாடு சென்றுவிட்டார்.

எனவே மீண்டும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்து உயர்மட்ட தலைவர்களை சந்திக்கவுள்ளோம். அதன்போது பல விடயங்கள் குறித்து கலந்துரையாட எதிர்பார்க்கின்றோம்.

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...