SHARE

Thursday, November 21, 2013

2013 மாவீரர் வாரம் ஆரம்பம்: மாண்ட நம் மக்களே மாவீரத் தோழர்களே செவ்வணக்கம்!


 `பொதுவாக்கெடுப்பு, போர்க்குற்றத்தண்டனை`
ஈழத்தமிழர் ஆதரவு உலக ஜனநாயக இயக்கம் 

வெற்றி பெற உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேர்ந்து

இம்மாவீரர் பெரு நாளில், 

தமிழீழ விடுதலைக்கு விளக்கேற்றுவோம்!

மாண்ட நம் மக்களே மாவீரத் தோழர்களே செவ்வணக்கம்!



மாவீரர் நாள் முழக்கங்கள்

* ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க,ரசிய, சீன, ஆதிக்க சக்திகளை எதிர்த்து சிங்களமிடமிருந்து
தமிழினம் விடுதலை பெற தமிழீழப் பொது வாக்கெடுப்புக்குப் போராடுவோம்!

* தமிழீழம் பாலஸ்தீனம் ஆவதை அநுமதியோம்,
தாய்நில ஆக்கிரமிப்பை எதிர்த்து மீள்  குடியேற்ற உரிமைக்குப்  போராடுவோம்!

* கருக்கலைப்பு,காணாமல் போதல்,இராணுவ கலப்புத்திருமணம் என இன அழிப்பு  தொடர்வதை எதிர்ப்போம்!

* தமிழீழப் பெண்குலம் மீது சிங்களம் கட்டவிழ்க்கும் அமைதிக்கால பெண்வதையை
எச்சக்தி கொண்டும் தடுப்போம்! 

* இனப்படுகொலை போர்க்குற்றவாளி ராஜபக்சவின் பிறந்த நாளுக்கு மரம் நாட்டுவிழா நடத்திய அடிமை வடக்கு மாகாண சபையை
மாவீரர் துயின்ற இல்லங்களை மீளக் கட்டியமைக்கக் கோருவோம்!

* தமிழீழ மக்கள் விவசாயம் செய்த அவர்களது சொந்த பயன் தரு நிலமும், கடற் தொழிலாளிகளின் பெரும் கடலும் அவர்கள் உழைத்து வாழ அவர் வசம் கிடைக்க போராடுவோம், அந்நிய உதவி மாயை எதிர்ப்போம்!

* தமிழீழ விடுதலைக்கு புதிய விளக்கேற்ற தடையாக இருக்கும் சமரசவாதிகளை
தனிமைப்படுத்துவோம்!

* தன்னியல்புப் பாதையின் தவறுகளைக் களைவோம், அரசியல் போர்த்தந்திரப் பாதையில் புரட்சிப் பயணம் தொடர்வோம்!

* தமிழீழத்தாயகத்தின் காவல் அரண்கள் 
விவசாயிகளும், கடற்தொழிலாளர்களும்,சிறுவர்த்தகர்களுமான
உழைக்கும் தமிழ் மக்களே என்பதை உணர்வோம்!

* `பொதுவாக்கெடுப்பு, போர்க்குற்றத்தண்டனை`

ஈழத்தமிழர் ஆதரவு உலக ஜனநாயக இயக்கம் 

வெற்றி பெற உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேருவோம்!

இறுதி வெற்றி ஈழமக்களுக்கே,

ஈழம் காணும்வரை ஓயமாட்டோம்!

புதிய ஈழப்புரட்சியாளர்கள்



Monday, November 18, 2013

பிரித்தானிய `பன்றித் தொழுவத்தில்` இலங்கைப் பிரச்சனை என்ற பெயரில் FREE TRADE விவாதம்! கடிபடும் கமெரொன் மிலிபாண்ட் கட்சிகள்


ஈழத்தமிழர் பிரச்சனையில் இங்கிலாந்து ஆளும் கும்பலின் ``குரூரமான, அருவருக்கத்தக்க`` ஆசை,

Free Trade! Arms Trade!!
காலனியாதிக்க வர்த்தகம்!
சாவு வியாபாரம்!!




ஈழத்தை நேரில் சென்று பார்த்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரன் இங்கிலாந்து பாராளமன்றத்திற்கு  சமர்ப்பித்த அறிக்கையில் இருந்து:

பெரு மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே,

``எவரும் தமிழ்ப் புலிகளின் அருவருக்கத்தக்க  குரூரமான நாட்களுக்கு மீண்டும் இலங்கை திரும்புவதை விரும்பவில்லை`` .

Mr.Speaker no one wants to return the days of the Tamil Tigers, the disgusting and the brutal thing they did.

மேற்காணும் ஒளி நாடாவில் 06.17-06.40 நேர வெளியில்  மேற்கண்ட கூற்றை  David Cameron கூறுவதை தமிழ்க் காதுகள் கேட்கலாம்!

``நாம் பொது நலவாய மாநாட்டில் கலந்துகொள்ளாமல், காலனியாதிக்க வர்த்தகத்தை முன்னேற்றுவது எப்படி சாத்தியமாகும்?``

 '' How do we advance free trade if we were not there?'' David Cameron

 மேற்காணும் ஒளி நாடாவில் 14.38-14.40 நேர வெளியில்  மேற்கண்ட கூற்றை  David Cameron கூறுவதை தமிழ்க் காதுகள் கேட்கலாம்!

இளவு சொல்லியழ இடமற்ற உலகத் தமிழன்!


மேற்குலகில் இளையோர் வேலையின்மையின் ஏவுகணை ஏற்றம் ஏகாதிபத்தியத்தின் அந்திமக்காலத்தின் முன்னறிவிப்பாகும்!



Youth Unemployment- இளையோர் வேலையின்மை என்பது, இயல்பான சனத்தொகைப் பெருக்கம் உருவாக்கும் புதிய கூலி வேலைப் பட்டாளத்தை உள்வாங்க ஏகபோக, நிதிமூலதன, உலகமயமாக்க உற்பத்தி முறை சக்தியற்றிருக்கின்றது என்பதாகும்.மேற்குலகில் இளையோர் வேலையின்மையின் ஏவுகணை ஏற்றம் அந்திமக்கால ஏகாதிபத்தியத்தியத்தின்   முன்னறிவிப்பாகும்!



Wednesday, November 13, 2013

ஏகாதிபத்தியவாதிகளும் பக்சபாசிஸ்டுக்களும் ஈழதேசிய இனப்படுகொலையின் கூட்டாளிகளே!


முள்ளிவாய்க்கால் முற்றத் தகர்ப்பு நடவடிக்கையில் ஜெயா நிர்வாகம்! பூங்கா மற்றும் சுற்றுச் சுவர் தரைமட்டம்!!







முள்ளிமுற்றத் தகர்ப்பு நெடுமாறன் விளக்கம்



முள்ளிமுற்றத் தகர்ப்புக் காட்சிகள்



முள்ளி முற்றம் அறிமுகம்


முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச் சுவர், பூங்கா  இடித்துத் தரைமட்டம்! 
இதர மையப் பகுதிகளுக்கு என்ன நடக்கும்??


முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின்  முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூங்கா, மற்றும்   சுற்று சுவர் அடங்கிய பகுதிகள் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.இன்று அதிகாலை 5.30 மணிக்கு மூன்று பாரிய கட்டிடத் தகர்ப்பு இயந்திரங்கள் கொண்டு 500 க்கும் மேற்பட்ட அரச காவலர்கள் புடைசூழ இந்த அட்டூழியத்தை நடத்தியிருக்கின்றது இந்திய மத்திய அரசின் தமிழக ஜெயா நிர்வாகம்.

தரைமட்டமாக்கப்பட்ட பகுதி அரசுக்குச் சொந்தமான -புறம்போக்கு-நிலம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.ஆனால் நெடுமாறன் அப்பகுதியில் முற்றம் அமைப்பதற்கு நீதிமன்ற அனுமதிப் பத்திரம் தாம் பெற்றதாகவும் இதனால் இது சட்டவிரோத செயல் என்றும் இதை எதிர்த்து தாம் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளார்.

எதுவித முன்னறிவிப்பும் இன்றி முள்ளிவாய்க்கால் முற்றத்தினை காவல்துறையினரின் பாதுகாப்புடன் இடித்துள்ளார்கள்.அதிகாரிகள் இடித்து தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட போது நான் தடுத்தேன். நீதிமன்ற அநுமதி ரத்துச் செய்யப்பட்ட கடிதங்கள் எனக்கு அநுப்பப்பட்டதாக அவர்கள் கூறினர். ஆனால் அதில் உண்மையில்லை. இது ஒரு சட்டவிரேதமான செயல். இந் நடவடிக்கையில் தமிழ காவல்துறை அதிகாரிகளே ஈடுபட்டுள்ளார்கள். ராஜபக்ச இராணுவம் இதைச் செய்யவில்லை என்றார்  நெடுமாறன். இதனை தடுக்க நினைவு முற்றத்துக்கு விரைந்து  சென்ற தமிழ்உணர்வாளர்கள், தொண்டர்கள், கட்சி அமைப்பினர்கள் என பெருமளவானர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

மேலும் நெடுமாறன் கூறுகையில் `ஈழத்தமிழர் பிரச்சனையில் மத்திய அரசும் மாநில நிர்வாகமும் ஒரே விதமாகச் செயற்படுவதாகவும், சட்ட சபையில் ஈழ ஆதரவுத்  தீர்மானங்கள் நிறைவேற்றிய ஜெயலலிதாவின் முகத்திரை கிழிந்து விட்டது` என்றார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த வை.கோபால் `இலட்சோபம் தமிழ் மக்களின் இதயங்களில் வாழும் பிரபாகரனின் படம் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இருக்கக் கூடாது என ஜெயலலிதாவால் எப்படிக் கோரமுடியும், அங்கே ராஜபக்ச தமிழர் அடையாளங்களை அளிக்கின்றார், இங்கே ஜெயலலிதாவா? என பலமான கேள்வியைக் கிளப்பி `  `சீறி` உள்ளார்!

சம்பவச் சூழலில் மக்கள் ஒன்று கூடுவதற்கு அரச காவலர்கள் தடைவித்துள்ளார்கள். அரச அதிகாரிகள் தாம் தகர்த்த  பகுதிகளை அடையாளப்படுத்தி பெயர்பலகை நாட்டிவிட்டுச்  சென்றனர். எனினும் அங்கு அத்துமீறி திரண்ட மக்கள்  பெயர்ப்பலகைகளை அகற்றியுள்ளனர்.  பெருமளவான மக்கள் குறித்த பகுதிக்கு சென்று இச்சம்பத்தினை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். 

இம்மக்களை ``அமைதிப்படுத்திவிட்டு`` அருகாமையில் உள்ள விடுதி ஒன்றில் குளித்து விட்டு உணவருந்தச் செல்லும் வேளையில் தாம் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருப்பதாக நெடுமாறன் ஊடங்களுக்கு தெரிவுத்துள்ளார்.பொடா சட்டத்தின் கீழ் புழல் சிறையில் ஒன்றரை ஆண்டுகள் என்னை வைத்திருந்தவர் தான் இந்த ஜெயலலிதா.எனவே எங்கிருந்தாலும் எமது சட்டபூர்வ போராட்டம் தொடரும் என்றார் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள்!

கருணாநிதியை ஒழிக்க, ஜெயாப் ``பிசாசுடன்`` கூட்டு வைத்த, காங்கிரசை ஒழிக்க பி.ஜே.பி `` பிசாசுடன்`` கூட்டுவைக்கும்  ` செந்தமிழன் சீமானின்` நாம் தமிழர் அமைப்பு தொண்டர்கள், நினைவு முற்ற தகர்ப்பு கண்டன நடவடிக்கையில் கைது செய்யப்பட்டிருப்பதாக சில இணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி: தகவல் ஊடகங்கள், தொகுப்பு ENB

Wednesday, November 06, 2013

பொலோனியம் அணுக்கதிரியக்க விசம் பாய்ச்சி அரபாத் படுகொலை செய்யப்பட்டார்.


சுவிஸ் மருத்துவ ஆய்வுக்குழுவினரின்  ஆராய்ச்சி அறிக்கையின் இறுதி முடிவு:

பொலோனியம் அணுக்கதிரியக்க விசம் பாய்ச்சி அரபாத் படுகொலை செய்யப்பட்டார்.


ஈழப் படுகொலைப் பாசிச மோடியே திரும்பிப் போ!

  ஆனந்தபுரத்துக்கு திட்டம் வகுத்த ஈழப்படுகொலைப் பாசிச மோடியே  திரும்பிப் போ! சொல்லில் சோசலிசமும் செயலில் பாசிசமுமான, சமூக பாசிச அனுரா ஆட்சிய...