SHARE

Sunday, December 28, 2025

28.12.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணி

28.12.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணி

காற்றுச் சுழற்சி, கனமழை மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பான விழிப்பூட்டலும் முன்னெச்சரிக்கையும்.
************************************************
முன்னரே குறிப்பிட்டபடி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து எதிர்வரும் 02.01.2026 அன்று இது தாழமுக்கமாக மாற்றம் பெற்று இலங்கையின் கிழக்கு தென்கிழக்கு திசையில், இலங்கையின் கரையோரமாக நிலவி பின் இலங்கைக்கு தெற்காக மேற்கு நோக்கி நகர்ந்து குமரிக்கடலைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இன்று கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மழை கிடைக்க தொடங்கியுள்ளது.
நாளையும் (29.12.2025) வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
நாளை மறுதினம் (30.12. 2025) முதல் வடக்கு, கிழக்கு, வட மத்திய, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மழை பரவலடையும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 31.12.2025 முதல் 04.01.2026 வரை வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா வட மத்திய, மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்நாட்களில் குறிப்பாக கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பதுளை, நுவரெலியா, காலி,மாத்தறை கண்டி மட்டக்களப்பு, அம்பாறை, மாவட்டங்களின் சில இடங்களில் 31.12.2025, மற்றும் எதிர்வரும் ஜனவரி 01, 02, 03 ம் திகதிகளில் 150 மி.மீ. க்கு மேற்பட்ட மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக....
எதிர்வரும் 31.12.2025 அன்று கொஸ்லாந்தை, வெல்லவாய, புத்தள, கல்மதுல்ல, ஹப்புத்தள, அதல போன்ற பகுதிகளிலும் ( படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.)
எதிர்வரும் 01.01.2026 அன்று வெலிப்பிட்ட, கொரவின்ன, லபுகெங்கொட, மித்தெனிய, திருகோணமலை போன்ற பகுதிகளிலும் ( படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது)
எதிர்வரும் 02.01.2026 அன்று நாகெட்டிய, லெமஸ்தோட்ட, கொட்டபத்ம, ஏகொடவத்த, கொஸ்லாந்தை, வெல்லவாய, புத்தள, கல்மதுல்ல, ஹப்புத்தள, அதல போன்ற பகுதிகளிலும் ( படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.)
மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது ( திகதி மற்றும் இடங்களில் சில மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதையும் கருத்தில் கொள்ளவும்)
இந்த கனமழை மத்திய, ஊவா மாகாணங்களின் பல பகுதிகளிலும் நிலச்சரிவு அனர்த்தத்தை தூண்டலாம்.
ஆகவே அன்புக்குரிய மலையக உறவுகளே, இந்த நாட்களில் கனமழையுடன் கூடிய நிலச்சரிவு அனர்த்தங்கள் தொடர்பில் மிக அவதானமாக இருப்பது அவசியம்.
- நாகமுத்து பிரதீபராஜா -
பேராசிரியர் மற்றும் தலைவர்,
புவியியற்றுறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

2025.12.28 ඉරිදා රාත්රී 8.30
සුළං සංසරණය, තද වැසි සහ නායයෑම් සිදුවීම් පිළිබඳ ඇඟවීම් සහ අනතුරු ඇඟවීම්.
************************************************
පෙර සඳහන් කළ පරිදි, ඉන්දුනීසියාවට බටහිරින් ගිනිකොනදිග බෙංගාල බොක්කෙහි සුළං සංසරණයක් නිර්මාණය වී ඇත. ඉදිරි දිනවලදී එය බටහිර-වයඹ දෙසට ගමන් කරනු ඇතැයි අපේක්ෂා කරන අතර 2026.01.02 වන දින එය පීඩන අවපාතයක් බවට පත් වී ශ්රී ලංකාවේ නැගෙනහිර-ගිනිකොන දෙසින්, ශ්රී ලංකාවේ වෙරළ තීරය ඔස්සේ පවතිනු ඇති අතර පසුව ශ්රී ලංකාවට දකුණින් බටහිර දෙසට ගමන් කර කුමාරි මුහුදට ළඟා වනු ඇත.
මේ හේතුවෙන් නැගෙනහිර පළාතේ සමහර ප්රදේශවලට අද වැසි ලැබීම ආරම්භ වී ඇත.
හෙට (2025.12.29) උතුරු, නැගෙනහිර, උතුරු මැද සහ ඌව පළාත්වල සමහර ප්රදේශවලට මධ්යස්ථ වැසි ලැබීමට ඉඩ ඇත.
හෙට (2025.12.30) සිට උතුරු, නැගෙනහිර, උතුරු මැද, දකුණු, මධ්යම සහ ඌව පළාත්වල බොහෝ ප්රදේශවලට වැසි පැතිර යාමට ඉඩ ඇත.
2025.12.31 සිට 2026.01.04 දක්වා උතුරු, නැගෙනහිර, මධ්යම, ඌව, උතුරු මැද සහ දකුණු පළාත්වල බොහෝ ප්රදේශවලට තද වැසි ඇති වීමට ඉඩ ඇත. මෙම දිනවල, විශේෂයෙන් නැගෙනහිර, ඌව, මධ්යම සහ පළාත්වල සමහර ප්රදේශවලට ඉතා තද වැසි ඇති වීමට ඉඩ ඇත.
බදුල්ල, නුවරඑළිය, ගාල්ල, මාතර, මහනුවර, මඩකලපුව, අම්පාර දිස්ත්රික්කවල සමහර ස්ථානවලට 2025.12.31 සහ ජනවාරි 01, 02 සහ 03 යන දිනවල මිලිමීටර් 150 ට වැඩි වර්ෂාපතනයක් ලැබීමට ඉඩ ඇත.
විශේෂයෙන්....
ඉදිරි 2025.12.31 වන දින කොස්ලන්ද, වැල්ලවාය, පුත්තලම, කල්මඩුල්ල, හපුතලේ, අටල (රූපයේ රවුම් කර ඇත) වැනි ප්රදේශවලට 2025.12.31 වන දින වැසි ඇති වීමට ඉඩ ඇත.
ඉදිරි 2026.01.01 දින වැලිපිට, කොරවින්න, ලපු-ලපු, මිතේනිය, ත්රිකුණාමලය වැනි ප්රදේශවල (රූපයේ රවුම් කර ඇත).
ඉදිරි 2026.01.02 දින නාගෙඩිය, ලේමස්තොට, කොට්ටපද්ම, එගොඩවත්ත, කොස්ලන්ද, වැල්ලවාය, පුත්තලම, කල්මඩුල්ල, හපුතලේ, අටල (රූපයේ රවුම් කර ඇත) වැනි ප්රදේශවල (රූපයේ රවුම් කර ඇත).
ඉතා තද වැසි ඇති විය හැකිය (දිනයන් සහ ස්ථානවල යම් යම් වෙනස්කම් සිදුවිය හැකි බව කරුණාවෙන් සලකන්න)
මෙම තද වර්ෂාව මධ්යම සහ ඌව පළාත්වල බොහෝ ප්රදේශවල නායයෑම් විපත් ඇති කළ හැකිය.
එබැවින්, ආදරණීය කඳුකර ජනතාවනි, මේ දිනවල අධික වර්ෂාව සමඟ නායයෑම් විපත් සම්බන්ධයෙන් ඉතා ප්රවේශම් විය යුතුය.
- නාගමුතු ප්රතිපරාජා -
මහාචාර්ය සහ ප්රධානී,
භූ විද්යා දෙපාර්තමේන්තුව, යාපනය විශ්ව විද්යාලය. 


















No comments:

Post a Comment

Maduro in court- U.S. kidnapped Me

Maduro, making first court appearance, says U.S. ‘kidnapped’ him As the deposed Venezuelan president and his wife, Cilia Flores, grapple wit...