26.12.2025 வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணி
கடந்த 21.12.2025 அன்று குறிப்பிட்டது போன்று நாளை மறு தினம் (28.12.2025) அதிகாலை தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவுக்கு மேற்காக காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 31.12.2025 அன்று இரவு அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவிலுக்கு கிழக்காக 171 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டு, பின்னர் இலங்கையின் தென்கிழக்கு கரையை அண்மித்து, அதன் பின்னர் இலங்கையின் தெற்கு கரையோரமாக நகர்ந்து எதிர்வரும் 06.01.2026 அன்று குமரிக்கடலைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், டிட்வா புயலின் உருவாக்கத்துக்கு காரணமாக விளங்கிய காற்றுச் சுழற்சி ஆரம்பத்தில் இலங்கையின் தென்கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசை நோக்கி எந்தப் பாதையினால் நகர்ந்ததோ அதே பாதையிலேயே உருவாகவிருக்கும் காற்றுச் சுழற்சியும் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது ( ஆனால் அந்த காற்றுச் சுழற்சி மேற்கிலிருந்து பின் மீளக் கிழக்கு நோக்கி நகர்ந்து இலங்கைக்கு மாறாத துன்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் இது அவ்வாறு அமையாது.
குறிப்பாக வடக்கு,கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள் எதிர்வரும் 28.12.2025 முதல் மழை பெறத் தொடங்கும்.
வடமத்திய, தென், சபரகமுவா, மேற்கு, வடமேல் மாகாணங்கள் எதிர்வரும் 29.12.2025 முதல் மழை பெறத் தொடங்கும்.
எதிர்வரும் 30.12.2025 முதல் 03.01. 2026 வரை நாடு முழுவதும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வடக்கு, கிழக்கு,மத்திய, ஊவா, வட மத்திய மாகாணங்களுக்கு தொடர்ச்சியாக நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு அவ்வப்போது மழை கிடைக்கும் என்பதனால் குளங்களின் தற்போதைய நீரின் அளவை முன்கூட்டியே சற்று குறைந்து நீர் அளவை முழு வழஙகல் அளவில்( Full Supply Level- FSL) பேணமால் சற்று குறைவாக பேணுவது சிறந்தது.
ஏனென்றால் இந்த சுற்றில் எதிர்பார்க்கும் மழை கிடைக்காது குளங்கள் முழுக் கொள்ளளவை அடையாது விட்டாலும் எதிர்வரும் ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தின் இறுதியில் கிடைக்கும் மழை முழுக் கொள்ளளவை பூர்த்தி செய்யும்.
1. மத்திய, ஊவா, சபரகமுவா மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் மற்றும் குருநாகல் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 29.12.2025 முதல் பரவலாக மழை கிடைக்க தொடங்கி எதிர்வரும் 04.01.2026 வரை மழை தொடர்ச்சியாக அவ்வப்போது கிடைக்கும் என்பதனாலும்,
2. காற்றுச் சுழற்சி இலங்கையின் தென்கிழக்கு பகுதியை அண்மித்து தென்பகுதியூடாக நகரும் என்பதனாலும்,
3. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளிலும் நாளின் அதிகுறைந்த வெப்பநிலை 9°C க்கு குறைவாக பதிவாகி வருவதாலும் (இலங்கையின் ஒரு நாளின் அதிகுறைந்த வெப்பநிலை 1914 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08ம் திகதி நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. அளவு -2.7°C)
எதிர்வரும் 29.12.2025 முதல் 04.01.2026 வரை மத்திய, ஊவா மற்றும் சபரகமுவா மாகாணங்களின் பல பகுதிகளிலும் நிலச்சரிவு அனர்த்தத்துக்கான சாத்தியங்கள் உள்ளன.
அத்தோடு தொடர்ச்சியாக மழை கிடைக்கும் என்பதனாலும், ஏற்கெனவே பல குளங்கள் கிட்டத்தட்ட முழுக் கொள்ளளவோடு உள்ளமையாலும் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள நிகழ்வுகள் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.
அதேவேளை இந்த காற்றுச் சுழற்சி காரணமாக எதிர்வரும் 31.12.2025 முதல் கிழக்கு, தென்கிழக்கு, வடக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம்.
- நாகமுத்து பிரதீபராஜா -
2025.12.26 සිකුරාදා රාත්රී 8.00
සුළං සංසරණය, තද වැසි සහ නායයෑම් සිදුවීම් පිළිබඳ පුරෝකථනය සහ අනතුරු ඇඟවීම.
එය 2025.12.31 දින රාත්රියේ බටහිර-වයඹ දෙසට ගමන් කර අම්පාර දිස්ත්රික්කයේ තිරුක්කෝවිලු සිට කිලෝමීටර 171 ක් නැගෙනහිරට ළඟා වී, පසුව ශ්රී ලංකාවේ ගිනිකොනදිග වෙරළට ළඟා වී, පසුව ශ්රී ලංකාවේ දකුණු වෙරළ දිගේ ගමන් කර 2026.01.06 දින කුමාරිකඩාල් මුහුදට ළඟා වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
ටිට්වා සුළි කුණාටුව ඇතිවීමට හේතු වූ සුළං සංසරණය, මුලින් ශ්රී ලංකාවේ ගිනිකොන දෙසින් බටහිරට ගමන් කළ සුළං සංසරණයේ දිශාවටම ගමන් කරනු ඇතැයි අපේක්ෂා කරන බව සැලකිල්ලට ගැනීම වැදගත්ය (නමුත් එම සුළං සංසරණය බටහිරින් සහ පසුව නැගෙනහිරට ගමන් කළ අතර එමඟින් ශ්රී ලංකාවට ස්ථිර දුක් වේදනා ඇති විය. නමුත් මෙය සිදු නොවේ.
එබැවින්, 2025.12.28 සිට 2026.01.06 දක්වා රට පුරා මධ්යස්ථ සිට තද වැසි ඇති වීමට ඉඩ ඇත.
විශේෂයෙන්, උතුරු, නැගෙනහිර, ඌව සහ මධ්යම පළාත්වලට 2025.12.28 සිට වැසි ලැබීමට පටන් ගනී.
උතුරු මැද, දකුණ, සබරගමුව, බටහිර සහ වයඹ පළාත්වලට 2025.12.29 සිට වැසි ලැබීමට පටන් ගනී.
උතුරු, නැගෙනහිර, මධ්යම, ඌව සහ උතුරු මැද පළාත්වලට අඛණ්ඩව දින හතරක් හෝ පහක් අතරමැදි වර්ෂාපතනයක් ලැබෙන බැවින්, ජලාශවල වත්මන් ජල මට්ටම තරමක් කලින් අඩු කර සම්පූර්ණ සැපයුම් මට්ටමේ (FSL) ජල මට්ටම පවත්වා ගැනීම සුදුසුය.
මෙම වටයේ දී අපේක්ෂිත වර්ෂාපතනය නොලැබෙන අතර ජලාශ ඒවායේ සම්පූර්ණ ධාරිතාවයට ළඟා නොවන බැවින්, ජනවාරි දෙවන සතිය අවසන් වන විට ලැබෙන වර්ෂාපතනය ඒවායේ සම්පූර්ණ ධාරිතාව පුරවනු ඇත.
ඊට අමතරව, ජනවාරි අවසානය දක්වා දින කිහිපයක් වැසි අපේක්ෂා කෙරේ.
2. වායු සංසරණය ශ්රී ලංකාවේ ගිනිකොන දෙසින් ළඟා වී දකුණු කොටස හරහා ගමන් කරන බැවින්,
3. මධ්යම සහ ඌව පළාත්වල බොහෝ ප්රදේශවල දෛනික උපරිම සහ අවම උෂ්ණත්වය 9°C ට වඩා අඩු බැවින් (ශ්රී ලංකාවේ අඩුම දෛනික උෂ්ණත්වය නුවරින් වාර්තා විය. 1914 පෙබරවාරි 08 වන දින එලිය. අගය -2.7°C)
4. මෙම පළාත්වල බොහෝ ප්රදේශවල අඩු උෂ්ණත්වය සහ ඒ ආශ්රිත වර්ෂාපතනය හේතුවෙන්, පරිමාමිතික ජල අන්තර්ගතය (VWC) 76-93% පරාසයක පවතී.
2025.12.29 සිට 2026.01.04 දක්වා මධ්යම, ඌව සහ සබරගමුව පළාත්වල බොහෝ ප්රදේශවල නායයෑම් විපත් ඇතිවීමේ හැකියාව පවතී.
තවද, අඛණ්ඩ වර්ෂාපතනය සහ බොහෝ ජලාශ දැනටමත් සම්පූර්ණ ධාරිතාවයෙන් යුක්ත වීම
හේතුවෙන්, පහත් බිම් ප්රදේශවල ජනතාව ගංවතුර සිදුවීම් පිළිබඳව විමසිලිමත් විය යුතුය.
No comments:
Post a Comment