SHARE

Monday, March 24, 2025

வவுணதீவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

வவுணதீவில் விவசாயிகள்  ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு கண்டியனாறு, அடைச்சகல் ஆகிய குளங்களைப்  புனரமைக்குமாறும் வருடாவருடம் ஒதுக்கப்படும் 3 ஆயிரம் கோடி ரூபாவிற்கு நிரந்தரமாக விவசாய வாய்க்கால்களைப் புனரமைக்குமாறு அரசாங்கம் மற்றும் விவசாய திணைக்களத்திடம்  கோரி விவசாயிகள் வவுணதீவு பிரதேச செயலகத்தின் முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை (18) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதேச விவசாயிகள் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று காலை 9 மணிக்கு வவுணதீவு பிரதேச செயலக்தின் முன்னால் விவசாயிகள் ஒன்று திரண்டனர்.

இதனையடுத்து மாகாண நீர்ப்பாசன திணைக்களமே வெளிப்படையாக வேலைகளைச் செய், கண்டியனாறு திட்டம் கைவிடப்பட்டதா?  அரசாங்கத்தின் நிதியினை பசளை மானியம் நஷ்டஈடு என விரயம் செய்யவா அரச அதிகாரிகள்?  ஏன் எமது இளைஞர் யுவதிகள் வெளிநாடு செல்லவேண்டும்? மாகாண நீர்ப்பாசன திணைக்களமே? ஊப்பாற்றில் வீணாகச் செல்லும் நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்தத் திட்டங்களைத் தீட்டு! 1600 ஏக்கர் விவசாய காணி 4000 ஏக்கர் மேட்டுக்காணி உட்பட்ட 2000 ஏக்கர் காணிக்கு நீர் வழங்க ஏன் தயக்கம்?



விவசாயிகளை பிரித்தாளும் தந்திரம் வேண்டாம், அரசாங்க அதிபரின் அராஜகம் ஒழிக? , பிரதேச அபிவிருத்தியின் நிலை என்ன பிரதேச செயலாளரே? மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் வழங்குவதே அதிகாரிகளின் கடமையா? விவசாயிகளே விழித்தெழுங்கள்!,  போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு முழக்கமிட்ட  விவசாயிகள் சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.🔺 


18 Mar, 2025 | வீரகேசரி + ENB



No comments:

Post a Comment

2026 BRICS New Delhi Declaration

BRICS New Delhi Declaration: Building for Resilience, Innovation, Cooperation and Sustainability (September 12, 2026) 12 Sep, 2026 1. We, th...