அபிப்பிராயம்
அடங்கா ஆணவமும், அடங்க வைத்த அவமானமும்:
இஸ்ரேலை அதிர்ச்சிக்குள்ளாக்கிய 10 மணிநேரம்
மர்வான் பிஷாரா அல் ஜசீராவின் மூத்த அரசியல் ஆய்வாளர்.7 அக்டோபர் 2023 அன்று வெளியிடப்பட்டது
பாலஸ்தீன பிளிட்ஸ்கிரீக் [Blitzkrieg, (German: “lightning war”) military tactic calculated to create psychological shock and resultant disorganization in enemy forces through the employment of surprise, speed, and superiority in matériel or firepower.] இஸ்ரேலுக்கு ஒரு இராணுவ தோல்வி மட்டுமல்ல மிகப்பாரிய அரசியல் பேரழிவும் ஆகும்.
மர்வான் பிஷாரா |
சில தினங்கள் முன்பாக இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தற்புகழ்ச்சி உரையை நிகழ்த்தினார். அதில் இஸ்ரேலையும் அதன் புதிய அரபு பங்காளிகளையும் இணைத்த இஸ்ரேலை மையப்படுத்திய புதிய மத்திய கிழக்கின் உருவாக்க வரைபடத்தை பிரகடனம் செய்தார்.இதில் பாலஸ்தீனம் முற்றாக நீக்கப்பட்டிருந்தது.பாலஸ்தீன தாக்குதல் இஸ்ரேலின் இத்திட்டத்துக்கு அரசியல் ரீதியாகவும் மூலோபாய ரீதியாகவும் கிடைத்த ஒரு மரண அடி ஆகும்.
பாலஸ்தீனிய எதிர்ப்பு இயக்கமான ஹமாஸ், காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் வான், கடல் மற்றும் நிலம் வழியாக மிகத் துல்லியமாக திட்டமிட்டு, நன்கு செயல்படுத்தப்பட்ட மின்னல் ஊடுருவலைத் தொடங்கியது. இஸ்ரேலிய இலக்குகளை நோக்கி ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான ஏவுகணைகளுடன் இணைந்து, நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள சிவிலியன் பகுதிகளைத் தாக்கினர், இதில் குறைந்தது 100 இஸ்ரேலியர்களைக் கொல்லப்பட்டனர். மற்றும் டஜன் கணக்கான இஸ்ரேலிய இராணுவத்தினரும் பொதுமக்களும் பணயக்கைதிகளாக கைப்பற்றப்பட்டனர்.
இந்த நடவடிக்கையில் ஹமாஸின் நோக்கங்கள் இரகசியமானவை அல்ல:
முதலாவதாக, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு, அடக்குமுறை, சட்டவிரோத குடியேற்றம், மற்றும் பாலஸ்தீனிய மதச் அடையாளங்களை, குறிப்பாக ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியை இழிவுபடுத்தியதற்காக பதிலடி கொடுத்து தண்டிப்பது;
இரண்டாவதாக, பிராந்தியத்தில் ``பாலஸ்தீன ஒழிப்பு`` ஆட்சிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் இஸ்ரேலுடன் `அரபு இயல்பு நிலை-Arab normalisation' உறவுக்கு முயலும் சக்திகளை இலக்கு வைத்தும்;
இறுதியாக, இஸ்ரேலிய சிறைகளில் இருந்து முடிந்தவரை அதிக பாலஸ்தீன அரசியல் கைதிகளை விடுவிக்கும் வகையில் மற்றொரு கைதி பரிமாற்றத்தை நடத்துவதும் அவர்களது நோக்கமாகும்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இஸ்ரேலிய சிறையில் இருந்த காஸா பகுதியில் ஹமாஸின் தலைவர் யாஹ்யா அல் சின்வார் கைதிகள் பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது. ஹமாஸ் இராணுவப் பிரிவின் தலைவரான முகமது டெய்ஃப், பல பாலஸ்தீனியர்களைப் போலவே, இஸ்ரேலிய வன்முறையால் அன்புக்குரியவர்களை இழந்தார் - ஒரு கைக்குழந்தை, மூன்று வயது மகள் மற்றும் அவரது மனைவி. எனவே,இந்த நடவடிக்கைக்கு ஒரு தண்டனை மற்றும் பழிவாங்கும் அம்சம் தெளிவாக உள்ளது.
அந்த வகையில், தாக்குதல் நம்பமுடியாத அதிர்ச்சியாக இருந்திருக்கலாம், ஆனால் அது ஆச்சரியமாக இல்லை.
பாலஸ்தீனிய எதிர்ப்பு இயக்கமான ஹமாஸ், காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் வான், கடல் மற்றும் நிலம் வழியாக மிகத் துல்லியமாக திட்டமிட்டு, நன்கு செயல்படுத்தப்பட்ட மின்னல் ஊடுருவலைத் தொடங்கியது. இஸ்ரேலிய இலக்குகளை நோக்கி ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான ஏவுகணைகளுடன் இணைந்து, நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள சிவிலியன் பகுதிகளைத் தாக்கினர், இதில் குறைந்தது 100 இஸ்ரேலியர்களைக் கொல்லப்பட்டனர். மற்றும் டஜன் கணக்கான இஸ்ரேலிய இராணுவத்தினரும் பொதுமக்களும் பணயக்கைதிகளாக கைப்பற்றப்பட்டனர்.
இஸ்ரேலிய தலைவர்கள் நீண்ட காலமாக தங்களை வெல்ல முடியாது என்று நினைத்தார்கள், மற்றும் தங்கள் எதிரிகளை மீண்டும் மீண்டும் குறைத்து மதிப்பிட்டனர் இதன் விளைவாக அவர்களும் இஸ்ரேலும் ஆணவம் அடங்கி அவமானப்படலாகிற்று.
அக்டோபர் 1973 இன் "ஆச்சரியமான" அரபுத் தாக்குதலுக்குப் பிறகு, அடுத்தடுத்து வந்த இஸ்ரேலியத் தலைவர்கள், தம்மால் ஒடுக்கப்படும் மக்களால், இவ்வளவு செய்து விட முடியுமா என்று மீண்டும் மீண்டும் அதிர்ச்சியும் பிரமிப்பும் அடைந்தனர்.
ஆனால் 1982 இல் லெபனான் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்குப் பிறகு லெபனான் எதிர்ப்பினாலும், 1980 மற்றும் 2000 களில் பாலஸ்தீனிய இன்டிஃபாடாக்களாலும் மற்றும் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் காசா மீதான நான்கு தொடர்ச்சியான போர்கள் அடங்கிய பாலஸ்தீனிய எதிர்ப்புக்குப் பின் தங்கள் தயாரின்மைக்குள் அகப்பட்டுக் கொண்டனர்.
இந்தத் தடவை தெளிவாகவே, இஸ்ரேலிய இராணுவமும் அரசியல் தலைமையும் ஹமாஸின் பாரிய நடவடிக்கையை சற்றும் எதிர்பார்க்கவில்லை. வெற்றிகரமான இத்தாக்குதல், இஸ்ரேலிய உளவுத்துறை மற்றும் இராணுவத்தின் பாரிய தோல்வியை பிரதிபலிக்கிறது. இஸ்ரேலின் அதிநவீன உளவாளிகள் வலையமைப்பு , ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பம் இருந்தபோதிலும், தாக்குதலை முன்கூட்டியேகண்டறிந்து தடுக்க முடியவில்லை.
ஆனால் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட சேதம் உளவுத்துறை மற்றும் இராணுவ தோல்விக்கும் மேற்பட்டது; இது ஒரு அரசியல் மற்றும் உளவியல் பேரழிவு ஆகும். தன்னை வெல்ல முடியாத அரசு எனக் கருதிவந்த இஸ்ரேல் தான் தாக்கக்கூடியதான, பலவீனமான, பயங்கரமான இயலாமை கொண்ட அரசு என்பதை வெளிக் காட்டியுள்ளது. இது ஒரு புதிய மத்திய கிழக்கின் பிராந்தியத் தலைவராக இருப்பதற்கான அதன் திட்டங்களுக்கு நன்றாகப் போகாது.
பய பீதியில் தங்கள் வீடுகளையும் நகரங்களையும் விட்டு வெளியேறும் காட்சிகள் ஆண்டாண்டு காலத்துக்கு இஸ்ரேலியர்களின் கூட்டு நினைவில் நிலைத்திருக்கும். இன்றைய நாள் இஸ்ரேலின் வரலாற்றில் மிக மோசமான நாளாக ஒரு முழு அவமானத்தின் அடையாளமாக நிலைபெறும்.
ஸ்பின் டாக்டரான-தகிடு தத்தக் காரரான- நெத்தனியாகு எப்படி சுழற்றினாலும் அதை மாற்ற முடியாது. சனிக்கிழமை காலை உலகம் கண்டதை மாற்றியமைக்க இஸ்ரேலுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்காது: வெறித்தனமான நாடு அதன் சொந்த அற்புதமான மாயைகளால் தன்னையே இழந்தது.
இஸ்ரேலின் இராணுவ அமைப்பு ஹமாஸிடம் இருந்து மூலோபாய மற்றும் இராணுவ முன்முயற்சியை உடனடியாக ஒரு பாரிய இராணுவ நடவடிக்கை மூலம் மீட்க முயற்சிக்கும். பாலஸ்தீனியர்களிடையே பெரும் துன்பங்களுக்கும் எண்ணற்ற உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கும். கடுமையான குண்டுவீச்சு மற்றும் படுகொலை பிரச்சாரங்களை மேற்கொள்ளும். கடந்த காலங்களில் இது மீண்டும் மீண்டும் நடந்தது. எனினும் இது பாலஸ்தீன எதிர்ப்பை அழிக்காது.
ஐக்கிய நாடுகள் சபையில் நெதன்யாகுவின் தற்புகழ்ச்சி உரை-2023
அதனால், ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனிய போராளிப் பிரிவுகளை முடிவுக்குக் கொண்டுவரும் போலிக்காரணத்தின் பேரில், காசா மற்றும் மேற்குக் கரைப் பகுதியில் உள்ள பாலஸ்தீனிய நகரங்கள், மற்றும் அகதிகள் முகாம்களுக்கு தனது இராணுவத்தை மீண்டும் நிலைநிறுத்த இஸ்ரேல் பரிசீலிக்கலாம்.மேற்குக் கரையில் பாலஸ்தீனிய அதிகாரத்தை அழித்து, முழு வரலாற்று பாலஸ்தீனத்தையும் அல்லது "இஸ்ரேலின் பெரிய நிலம்" என்று அவர்கள் அழைப்பதையும் நேரடியாகக் கட்டுப்படுத்தி, பாலஸ்தீனிய இன அழிப்பைத் தொடர்வது இஸ்ரேலின் ஆளும் கூட்டணியின் வெறித்தனமான உறுப்பினர்களின் வரலாற்று விருப்பமாகும்.
அது ஒரு பெரிய தவறாகப் போய் முடியும். இது ஒரு முழு அளவிலான சமச்சீரற்ற போருக்கு வழிவகுக்கும், மேலும் இது இதன் போக்கில் , முன் எப்போதும் இல்லாத வகையில் இஸ்ரேலை தனிமைப்படுத்தும். இதுவரை நெதன்யாகுவை ஆதரித்த மேற்கத்திய தலைவர்கள், இஸ்ரேலிய நிறவெறிக்கு (Israeli apartheid) இதுவரையும் வெளிப்படையான ஆதரவை வழங்கிவந்தவர்கள் கூட, இஸ்ரேலிய அரசாங்கத்திலிருந்து தங்களைத் தூர விலக்கிக் கொள்ளத் தொடங்கலாம்.
ஏற்கனவே, இஸ்ரேலின் கேடான அவமானம் பிராந்தியத்தில் அதன் மூலோபாய மற்றும் அரசியல் நிற்றலுக்கு தரக்குறைவை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்கிக் கொண்டு நெதன்யாகு அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்த அரபு ஆட்சிகள் கடந்து செல்லும் ஒவ்வொரு மணி நேரமும் படு முட்டாள்களாகத் தோன்றுகின்றன!
தனது தனிப்பட்ட தோல்வியை திசைதிருப்ப மற்றும் அவரது பலவீனமான கூட்டணியை பராமரிக்க ஆசைப்படுவதால், நெதன்யாகு மிகையான எதிர்வினையாற்ற விளைவது உறுதி. இந்த செயல்பாட்டில் அவரது புதிய மற்றும் சாத்தியமான பிராந்திய பங்காளிகளை மேலும் அந்நியப்படுத்துவார்.
இது எந்த வழியில் சென்றாலும், நெதன்யாகுவின் மரபுப்பெருமை (legacy), தோல்வியால் சிதைந்துவிடும். அவர் தன்னுடன் தனது பாலஸ்தீனிய பங்காளி, முதியவர் மஹ்மூத் அப்பாஸையும், வரலாற்றின் வடிகாலுக்கு கொண்டு செல்லலாம்.
அப்பாஸும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைக் கண்டிப்பதற்கும் அதனுடன் பாதுகாப்பை ஒருங்கிணைப்பதற்கும் இடையே ஒரு இணைப்பைக் கட்ட முயன்று, அரசியல் ரீதியாக தோல்வியடைந்து வருகிறார். அத்தகைய இணக்க நிலை இனிமேல் சாத்தியம் அல்ல.
ஆனால் வந்து கொண்டிருக்கும் மாற்றம் தனிமனித ஆளுமைகளை விடவும் அதிகம் மேலானது. இது இரண்டு மக்கள் சமூகங்கள் பற்றியது. அவர்கள் சமாதானமாக வாழுவதா? அல்லது சண்டையிட்டு சாவதா என்பது பற்றியது. இதற்கு இடைப்பட்ட எதற்கும் இடமும், காலமும் கடந்துவிட்டது.
அவமானப்பட்டு மண்டியிட்டு இறப்பதை விட நீதிக்காகவும் சுதந்திரத்திற்காகவும் தம் காலில் நின்று போராடுவதை பாலஸ்தீனியர்கள் இன்று தெளிவுபடுத்தியுள்ளனர். இஸ்ரேலியர்கள் வரலாற்றின் படிப்பினைகளை எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டிய முக்கிய நேரம் இது.
☝
No comments:
Post a Comment