SHARE

Saturday, December 27, 2014

போர்க்குற்றம் இடம்பெற்றிருந்தால் உள்நாட்டு விசாரணையே சிறந்தது - இடதுசாரி விக்கிரமபாகு


போர்க்குற்றம் இடம்பெற்றிருந்தால் உள்நாட்டு விசாரணையே சிறந்தது
விக்கிரமபாகு

போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு ரீதியான விசாரணை நடாத்துவது அவசியமானது என நவசமாஜக்கட்சியின் தலைவர் விக்கிரபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு ரீதியான விசாரணைகள் நடாத்தப்படும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இந்திய ஊடகமொன்றுக்கு கருத்துத்தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போர்க்குற்றச்செயல்  தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு உள்நாட்டு ரீதியான விசாரணைகளே மிகச்சிறந்த பதிலாக அமையும் என்பதே எனது கருத்து.

எனவே போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருந்தால் உள்நாட்டு ரீதியில் ஆணைக்குழு அமைத்து விசாரணை செய்வதில் தவறில்லை.

இவ்வாறு நடைபெற்றால் சர்வதேச ரீதியில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமுமில்லை  என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
===============================================================

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...