SHARE

Saturday, December 27, 2014

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றப்போவதில்லை-மைத்திரி

மகிந்தவுக்கும் மைத்திரிக்கும் இடையில் பலே போட்டி!
 
மைத்திரி சவால்!
 
* வடக்கில் இராணுவத்தை அகற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க மாட்டேன்!


* வெளிநாடுகளில் தூதர்களாக செயற்படும்,
யுத்தத்தை வெற்றிகொண்ட
இராணுவ வீரர்கள், முப்படை தளபதிகளை நாட்டிற்கு அழைத்து தேசிய பாதுகாப்புச் சபையை பலப்படுத்துவேன!!

* இந்த நாட்டை பிளவுபடுத்த அநுமதியேன்!!!
 
============================================
 
வடக்கிலிருந்து  இராணுவத்தை அகற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை என எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
நான் உருவாக்கும் புதிய அரசில் தேசிய பாதுகாப்புச் சபையை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கில் இராணுவத்தை அகற்றுவதற்கு நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை.

யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவ வீரர்கள், முப்படை தளபதிகள் வெளிநாடுகளில் தூதர்களாக செயற்படுகின்றனர்.

எனது புதிய அரசில் யுத்த வெற்றியை எதிர் கொண்ட தளபதிகளை மீள நாட்டிற்கு அழைத்து தேசிய பாதுகாப்புச் சபையை நான் பலப்படுத்துவேன்.

இந்த நாட்டை பிளவுபடுத்த விடமாட்டோம். எனக்கு எதிராக முன்வைக்கப்படும் போலியான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெலிகம பகுதியில் நேற்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலேயே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...