SHARE

Friday, November 21, 2014

ஈழத்தில் 463 பௌத்த விகாரைகள் ஒர் ஆண்டில் திடீர் உதயம்!


வடக்கு – கிழக்கில் 463 பௌத்த விகாரைகள்

வடக்கு - கிழக்கில் திட்டமிடப்பட்டு 463 பெளத்த விகாரைகள் நிறுவப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று  இடம்பெற்ற 2015ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்

இலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்ற இந்து - கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் பெளத்தம் ஆகிய நான்கு மதங்களுக்கும் பொதுவானதாக பெளத்த விவகார அமைச்சு என்று உருவாக்கப்பட்டுள்ளது.

பெளத்த விவகார அமைச்சானது பெளத்த சமயத்துக்கே முன்னுரிமை கொடுக்கின்றதே தவிர ஏனைய மதங்களைப் பற்றி சிந்திப்பதாக இல்லை.

மத விவகாரங்களுக்கென ஒதுக்கப்படுகின்ற நிதியானது 99 வீதம் பெளத்த மதத்துக்கான விவகாரங்களுக்கும் எஞ்சியிருக்கும் ஒருவீத நிதியே இந்து - கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத விவகாரங்களுக்கும் என
ஒதுக்கப்படுகிறது.

புத்தபெருமான் பிறப்பால் ஒரு இந்து. ஆகவே இந்து சமயத்துக்கும் பெளத்தத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன என்பதை இங்கு கூறிவைக்க விரும்புகிறேன்.

2012ம் ஆண்டு நாடு முழுவதும் 10,349 விகாரைகள் இருந்தன. அது 2013 இல் 10.812 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பானது வடக்கு கிழக்கிலேயே இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் வடக்கில் கடந்த வருடத்தில் 463 விகாரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

யுத்தம் நிறைவுக்கு வந்த 2009ம் ஆண்டின் பின்னர் இந்துக்களும் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். அதுமாத்திரமின்றி பூர்வீகக் குடிகளின் மதத்தை அழிப்பதற்கு திட்டமிட்ட செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Modi meets Yunus in Bangkok

PM Modi meets Bangladesh Chief Adviser Yunus, raises India’s concerns over safety of Hindus External Affairs Minister S Jaishankar and Natio...