Thursday 20 November 2014

திருச்சி முகாம் போராளிகள் வைத்தியசாலையில் அனுமதி


திருச்சி முகாமிலுள்ள 23 இலங்கையர் வைத்தியசாலையில் அனுமதி

Submitted by P.Usha on Thu, 11/20/2014 - 12:12

இந்தியா - திருச்சி  விசேட முகாமிலுள்ள  23  இலங்கையர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருச்சி விசேட முகாமில் 5 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 23 இலங்கையர்களே  சுகயீனமுற்ற நிலையில் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 23 பேரில் 7 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 15 ஆம் திகதி முதல் இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை
( நிரபராதிகளான தம்மை விடுதலை செய்யுமாறு கோரி) முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...