SHARE

Friday, October 10, 2014

மலையகக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்க்கிறோம் - கூட்டமைப்பு

மலையகக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்க்கிறோம் - கூட்டமைப்பு

மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், இதனை உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு கூறியுள்ளார்.

அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியா சென்றிருந்தது.

இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், ஏனைய தமிழ் சமூகங்களுடனும் இணைந்து புதிய சக்தியை உருவாக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் கோரி இருந்தார்.

இதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை சந்திக்கிறது.

இதன் தொடர்ச்சியாக மலையகத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற கட்சிகளையும் கூட்டமைப்பு சந்திக்கவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

மோடி வருகை: அதிகாரபூர்வ அரசாங்க அறிவிப்பு

மோடி ஏன் வருகின்றார்?